
ஜனவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை

மேஷம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சவால்களைச் சமாளிப்பீர்கள். வீடு, வாகனம், ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கணவருக்கு ஆலோசனைகளை வழங்குவீர்கள். திடீர்ப் பயணம், சகோதர வகையில் மனத்தாங்கல், சிறுசிறு விபத்துகள் வரக்கூடும்.
வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக்கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள்.
உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாகச் செயல்பட வேண்டிய நேரமிது.

ரிஷபம் குடும்பத்தில் நிலவிய பணப்பற்றாக்குறை நீங்கும். நாசூக்காகப் பேசி முக்கிய அலுவல்களை முடிப்பீர்கள். எதிர்பார்த்துக் காத்திருந்த தொகை வரும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். கணவரை அவரின் போக்கில் சென்று மாற்றுவீர்கள். உங்களைத் தாழ்த்திப்பேசியவர்களின் மனம் மாறும். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்குக் கூடும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். தந்தையின் உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும்.
சின்னச்சின்ன ஆசைகள் நிறைவேறும்.

மிதுனம் அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்திலிருந்த குழப்பங்கள் நீங்கும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். கணவர் உங்களைப் புரிந்துகொள்வார். பிள்ளைகளின் மீது விசேஷ கவனம் செலுத்துவீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல இடத்தில் நிச்சயமாகும். தியானப் பயிற்சி நல்ல பலன் தரும்.
வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுத்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.
வெற்றிக்கு வித்திடும் நேரமிது.

கடகம் புதிய முயற்சிகள் வெற்றியடையும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வர வேண்டிய பணம் வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவருக்குத் தொழிலில் முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். உறவினர்கள் உங்களை ஆதரித்துப் பேசுவார்கள்.
வியாபாரத்தில் பணியாளர்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவது நல்லது.
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங் களில் தலையிட வேண்டாம்.
நல்லவர்களின் நட்பால் சாதிக்கும் நேரமிது.

சிம்மம் குடும்பத்தில் உங்களின் கை ஓங்கும். கணவர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். மாமியார் உங்களை அன்பாக நடத்துவார். புதிய சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள். அவர்களின் உரிமைகளில் தலையிட வேண்டாம்.
வியாபாரத்தில் புதிய சரக்குகளைக் கொள்முதல் செய்வீர்கள்.
உத்தியோகத்தில் நீடித்த தொந்தரவுகள் விலகும்
அடிப்படை வசதிகள் பெருகும் நேரமிது.

கன்னி உங்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். நட்புவட்டம் விரியும். மாமனார், நாத்தனார் மதிப்பார்கள். கணவரிடம் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். நீங்களே முதல் ஆளாக விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
வியாபாரத்தில் பழைய பாக்கிகளைப் போராடி வசூல் செய்வீர்கள்.
உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறு வீர்கள்.
சிக்கல்களிலிருந்து விடுபடும் நல்ல நேரமிது.

துலாம் சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். சோம்பல், அலட்சியம் நீங்கும். கணவர் புதிய முயற்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வார். தோழிகளைச் சந்தித்து மகிழ் வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டில் கூடுதலாக ஓர் அறை கட்டுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
வியாபார வேலையாள்களை மாற்றுவீர்கள்.
உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.
கடின உழைப்பால் முதலிடம் பிடிக்கும் நேரமிது.

விருச்சிகம் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் சிலர் உங்களின் உதவியை நாடுவார்கள்; உங்களின் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வழக்கு சாதகமாகும். பெரிய மனிதர்கள் உதவு வார்கள். கணவன் மனைவி அந்நியோன்யம் பெருகும். பிள்ளைகளின் தனித்திறனை வளர்க்கப் பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். கடன் பிரச்னைகள் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.
உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
எதிர்நீச்சல் போட்டு வெற்றிபெறும் நேரமிது.

தனுசு புதிய திட்டங்கள் நிறைவேறும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மனத்தில் உற்சாகம் பிறக்கும். முடங்கிய பணிகளைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். கணவருக்கிருந்த மன உளைச்சல் நீங்கும். தொழில் முயற்சிகள் வெற்றியடையும். மாமனார், மாமியார் உதவிக்கரமாக இருப்பார்கள்.
வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் கௌரவப் பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.
நினைத்ததை நடத்திக்காட்டும் நேரமிது.

மகரம் உங்களின் செயல்வேகம் கூடும். ரசனைக்கேற்ற வீட்டுக்கு மாறுவீர்கள். கணவன் மனைவி உறவு பலப்படும். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். உறவினர்கள், தோழிகளின் வருகையால் வீடு களைகட்டும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உடல்நலனில் கவனமாக இருங்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும்.
வியாபாரத்தில் வரவு சுமாராகத்தான் இருக்கும். புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம்.
உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டி வரும்.
விட்டுக்கொடுத்து வெற்றி பெறும் நேரமிது.

கும்பம் உங்களின் புத்திசாலித்தனத்தால் எதையும் சாதிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பூர்வீகச் சொத்தில் உங்களின் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகத் திரும்பும். சுப நிகழ்ச்சிகளால் செலவுகள் அதிகரிக்கும். கணவரிடம் கலந்தா லோசித்துச் செலவுகளைக் குறைப்பீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்துக்குப் பாதை அமைப்பீர்கள். அரசு வகையில் அனுகூலம் உண்டு.
வியாபாரத்தில் புதிய கிளை ஒன்றைத் திறப்பீர்கள்.
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வும் கிடைக்கும்.
தைரியம் கூடி, சாதனை படைக்கும் நேரமிது.

மீனம் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் முடியும். கணவர் மனம்விட்டுப் பேசுவார். பிள்ளைகளின் கல்யாண விஷயம் சுபமாக முடியும். சவாலான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். புகழ், கௌரவம் ஒருபடி உயரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு விஷயங்கள் விரைந்து முடியும். ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும்.
வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். சம்பள உயர்வு கிடைக்கும்.
சகிப்புத் தன்மையால் சாதிக்கும் நேரமிது.
-`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்