தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

குட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி

குட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி
பிரீமியம் ஸ்டோரி
News
குட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி

கிச்சன் பேஸிக்ஸ்விசாலாட்சி இளையபெருமாள் படங்கள், வீடியோ : லக்ஷ்மி வெங்கடேஷ்

குட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி

தினம்தோறும் சமையலில் முடிந்த  வரை காய்கறிகள் மற்றும் கீரைகளைச் சேர்க்க முயற்சி செய்கிறோம். குழந்தைகளோ `இன்னிக்கு கீரையா... நான் சாப்பிட மாட்டேன்; பாகற்காய் கசக்கும்; முள்ளங்கி பிடிக்காது; பறங்கிக்காய் இனிக்கும்: முட்டைகோஸ் ரொம்ப ஸ்மெல்லியா இருக்கும்' எனச் சாப்பிடாமல் இருப்பதற்கு ஏராளமான காரணங்களை அடுக்கிக்கொண்டே போவார்கள். இப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களுக்குப் பிடித்த பூரியிலேயே காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களைக் கலந்துகொடுத்துப் பாருங்களேன்!

குட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி

சென்ற இதழ் `கிச்சன் பேஸிக்ஸ்’ பகுதியில் கோதுமையிலிருந்து `பேஸிக்' மாவு தயாரித்து, அதை உபயோகித்து பூரி தயாரிப்பது எப்படி எனப் பார்த்தோம். பிறகு, கண்ணைக் கவரும் வெவ்வேறு வண்ணங்களில் காய்கறி சேர்த்து பூரி செய்வதைப் பார்த்தோம். இந்த இதழில் கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்து சூப்பர் சுவையுடன் விதவிதமான பூரிகளை எளிதாகச் செய்யக் கற்றுக்கொண்டு வாரம் ஒரு வெரைட்டி பூரி என்று வருஷம் முழுவதும் விதவிதமான, சற்று ஆரோக்கியம் கலந்த பூரிகளைச் செய்து கொடுத்துக் குழந்தைகளை அசத்தலாம்.

பூரிகள் செய்முறை

குட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி


மேத்தி மசாலா பூரி, புதினா கொத்தமல்லித்தழை பூரி, கீரை பூரி
: கீரையை நன்கு சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

குட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி

மூலி/முள்ளங்கி பூரி, தூதி/சுரைக்காய் பூரி, பப்பாளிக்காய் பூரி, கத்து (Kaddu) பாலக் பூரி, கரேலா பூரி, கேரட் வெங்காயம் பூரி, ஸ்ப்ரிங் ஆனியன் பூரி, வெங்காய பூரி, மிக்ஸ்ட் வெஜ் பூரி, பீட்ரூட் பூரி, தர்பூசணியின் வெள்ளை பகுதி பூரி: துருவிய காய்கறிகளுடன் உப்பு சேர்த்துப் பிசிறி 10 நிமிடங்கள் வைத்துக்கொள்ளவும்.

குட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி

முட்டைகோஸ் பூரி: முட்டைகோஸை பொடியாக நறுக்கி, கொதிக்கும் நீரில் சிறிது உப்பு சேர்த்து முட்டைகோஸை வேகவைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

குட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி

கரேலா தேப்லா: பாகற்காய் தோலைத் துருவி உப்பு சேர்த்து பிசறி வைத்துக்கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து, பாகற்காயில் வடிந்துள்ள தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும். பிழிந்த தண்ணீரைக் கீழே ஊற்றிவிடவும். இப்படி செய்வதன் மூலம் பாகற்காயில் இருக்கும் கசப்பு போய் விடும்.

பட்டாணி பூரி: பட்டாணியைக் கொதிக்கும் நீரில் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து வடிகட்டி ஆறவைக்கவும். அதில் பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் அதிகம் சேர்க்காமல் நன்கு கூழ் போல அரைத்துக் கொள்ளவும்.

அவகாடோ பூரி : அவகாடோ பழத்திலிருந்து தோல் மற்றும் கொட்டையை நீக்கிவிட்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கூழ் போல் அரைத்துக்கொள்ளவும்.

பனீர் பூரி : பனீரை நன்கு மசித்துக்கொள்ளவும்.

குட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி

பருப்புக்கீரை பூரி: மீந்திருக்கும் பருப்புக் கீரையை மாவுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

செய்முறை:

கோதுமை மாவில் உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். தயார் செய்துவைத்திருக்கும் காய்கறி அல்லது பழங்களை மாவில் சேர்க்கவும். மசாலா பொருள்கள் சேர்த்து கெட்டியான மாவாகப் பிசைந்துகொள்ளவும். மாவு பிசைவதற்குத் தண்ணீர் தேவைப்பட்டால் மட்டும் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். மாவு நன்கு மென்மையான பந்துபோல் உருண்டு வரும் வரை பிசையவும். பிசைந்த மாவு நன்கு கெட்டியாக இருக்க வேண்டும். கடைசியாக ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மீண்டும் பிசைந்துகொள்ளவும். 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

குட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி

வாழைப்பழ பூரி, மங்களூர் பன்ஸ், மாம்பழ பூரி, சப்போட்டா பூரி, ஸ்ட்ராபெர்ரி பூரி: பழங்களை சர்க்கரை மற்றும் பால் சேர்ப்பதாக இருந்தால் சேர்த்து மிக்ஸியில் நன்கு கூழ் போல் அரைத்துக்கொள்ளவும். பிறகு இதர பொருள்களைச் சேர்த்து மேற்கூறியவாறு மாவு பிசைந்துகொள்ளவும்.

குட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி

சாக்லேட் பூரி: மைதா மாவுடன் கொடுத் துள்ள பொருள்களைச் சேர்த்து மேற்கூறியவாறு மாவு பிசைந்துகொள்ளவும். அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

பூரி பொரித்து எடுக்கும் முறை:

மாவைச் சின்னச் சின்ன சம அளவு உருண்டைகளாக உருட்டிவைத்துக் கொள்ளவும். சப்பாத்திக் கட்டை மற்றும் சப்பாத்திக் குழவியில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு, ஓர் உருண்டையை எடுத்துச் சற்றுக் கனமான பூரியாக இடவும். பூரியை ஒரே சீரான தடிமனில் இட வேண்டும்.

குட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி



ஒரு வாணலியில் பூரியைப் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கவும். எண்ணெய் புகை வரும் அளவுக்குச் சூடு ஏறக் கூடாது. எண்ணெயில் சிறிது மாவைப் போட்டால் மாவு எண்ணெயின் கீழே போய் 2 முதல் 3 நொடிகள் கழித்து மேலே எழும்பி வர வேண்டும். இதுதான் பூரி சுட்டு எடுப்பதற்குத் தேவையான எண்ணெயின் சரியான வெப்பநிலை.

ஒரு பூரியை எண்ணெயில் போட்டு கரண்டியால் ஓரிரு நொடிகள் அமிழ்த்திவிடவும். 15 முதல் 20 நொடிகள் கழித்து, பூரியைத் திருப்பிவிட்டு மேலும் அரை முதல் முக்கால் நிமிடம் வேகவைத்து அடுத்து எண்ணெயை வடியவிடவும்.

உங்கள் கவனத்துக்கு...

உப்பு சேர்த்து பிசிறிவைக்கும் காய்கறிகள் தண்ணீர் விட்டுக்கொள்ளும். இந்தத் தண்ணீருடன் காய்கறிகளைக் கோதுமை மாவில் சேர்க்கவும்.

தண்ணீர் சேர்ப்பதற்கு முன்னர், மாவில் சேர்த்து இருக்கும் அனைத்துப் பொருள்களையும் நன்கு அழுத்திப் பிசறவும். இவ்வாறு செய்யும்போது காய்கறி மற்றும் கீரைகளிலிருந்து மேலும் தண்ணீர் கசிந்து வரும் வாய்ப்புள்ளது. பிறகு தேவைப்படும் தண்ணீரைச் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கெட்டியான மாவாகப் பிசையவும். 15 நிமிடங்கள் ஊறிய பிறகு, மாவில் சேர்த்திருக்கும் காய்கறிகள், கீரைகளிலிருந்து மீண்டும் தண்ணீர் கசிந்து இருக்கலாம். அதனால் கெட்டியாகப் பிசைந்து வைத்திருக்கும் மாவு சற்றுத் தளர்த்தியாகி இருக்கும். கையில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைத் தொட்டுக்கொண்டு மீண்டும் மாவைப் பிசைந்து உபயோகிக்கவும்.