
ஆஹான்
R Muthu Kumar
வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த தம்பிதுரை, தி.மு.க ஆட்சியின் சட்டம் ஒழுங்கு பற்றி பேட்டி கொடுப்பது வழக்கம். அதற்கு எதிர்வினையாற்றிய அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, ‘தம்பி தன் துறையை மட்டும் பார்க்கட்டும்’ என்றார். அன்று கருணாநிதி சொன்னதை இன்று மக்களவையில் செய்திருக்கிறார் தம்பிதுரை.

Ravi Kumar
கர்நாடக அரசைக் கவிழ்ப்பதற்கு பி.ஜே.பி செய்த சதி தோற்றுப்போனதாகத் தெரிகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் திரும்பி வந்ததாலும், பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேரை குமாரசாமி ஆட்கள் தூக்கியதாலும் அமித்ஷா அதிர்ந்துபோய்விட்டதாகத் தகவல். 2019 பொதுத்தேர்தலில் பி.ஜே.பி சந்திக்கப்போகும் தோல்விக்கு இது ஆரம்ப அறிகுறியா?
Shaji Chellan Lawyer
கேரள பிஷப்பால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக இருந்த மற்ற நான்கு கன்னியாஸ்திரிகளையும் இடமாற்றம் செய்து, பிஷப்பைப் பாதுகாக்க முயல்கிறது மதபீடம். பிஷப்பின் செயல் தனிநபர் பலவீனமென்றும் அதை மன்னித்துவிட வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியை மதபீடம் தொடர்ந்து நிர்ப்பந்தப்படுத்தியும் அவர் மசியாததால், இந்த மாறுதல் நடவடிக்கை மீண்டும் தீவிரமடைந்திருக்கிறது. ஏசு, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டச் சொன்னதாக நான் படித்திருக்கிறேன். ஆனால், வன்புணர்வு செய்தாலும் மன்னித்து விடச்சொல்லி எந்தப் புனித அறிவுலிருந்து மதபீடங்கள் கற்பிக்கின்றனவோ... அழுக்குகளால் நிறைந்த மதபீடங்கள் கொடூரமானவை.
Yuva Krishna
புத்தகச் சந்தையில் இரு ஆடுகள் சந்தித்துக் கொண்டன.
“உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்...”
“ஃபேஸ்புக்குலே இருக்கீங்களா?”
“ஆமாம். ஆமாம். அதான் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நெனைச்சேன்.”
“உங்களைச் சந்திச்சதில ரொம்ப சந்தோஷம்.”
“இப்படி எங்கேயாவது யதேச்சையா சந்திச்சாதான் உண்டு.”
“ரைட் சார். நீங்க பர்ச்சேஸைப் பாருங்க. இந்த ‘பொன்னியின் செல்வன்’ தான் எங்கே கிடைக்குதுன்னு தெரியாம தேடிக்கிட்டிருக்கேன்...”
“எட்டாவது ரோவுலே எண்பதாவது கடையிலே பார்த்தேன் சார்... bye sir. ஃபேஸ்புக்குலே பார்ப்போம். ரெகுலரா டச்சுலே இருப்போம்.”
அந்த ஆட்டின் பெயர், இந்த ஆட்டுக்கும்.. இந்த ஆட்டின் பெயர் அந்த ஆட்டுக்கும் தெரியாமலேயே இரண்டு ஆடுகளும் கைகுலுக்கி விடைபெற்றன.

Annaiinpillai
நாட்டில் ஊழலை ஒழித்துவிட்டதால் எதிர்க்கட்சிகள் என் மீது கடும் கோபத்தில் உள்ளனர்!- பிரதமர் மோடி
# கொஞ்சம் கொசுவையும் ஒழிச்சிங்கனா நல்லா இருக்கும் ஜி!
HAJAMYDEENNKS
இந்த ஒரு வாரமா ‘விஸ்வாசம்’, ‘பேட்ட’ படங்களின் வசூலைப் பற்றிப் பேசியதில் பெட்ரோல் டீசல் விலை ஏறியதை மறந்தாச்சு!
amuduarattai
மோடியைப் பிரதமராக்க முயற்சி செய்யும் கட்சியுடன் தமிழகத்தில் கூட்டணி - தமிழிசை.
‘கிங் மேக்கர்’ வைகோவிடம் பேசுனீங்களா!?
gips_twitz
தமிழக அரசியல், சின்ன பசங்க கிரிக்கெட் மாதிரி...
பேட்டிங் பண்ணும் ஆளுங்கட்சியை எதிர்க்கட்சி க்ளீன் போல்டு பண்ணினாலும், அம்பயரா இருக்கிற மத்திய அரசு நாட் அவுட்தான் சொல்லும். ஃபீல்டிங் பண்ற உதிரிக் கட்சிகளும் ஆமாமா நோபால்னு சொல்லும்!
kumarfaculty
’ஸ்டாலின் அழைத்தாலும் தி.மு.க-வுடன் செல்ல மாட்டோம்.’
- சரத்குமார்.
செல்ல மாட்டேன்னுதானே சொல்லணும்...
அது என்ன செல்ல மாட்டோம்?
withkaran
பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியிருக்கு. அதை எதிர்த்துப் போராட வேண்டிய இளைஞர் கூட்டம், ‘விஸ்வாசம்’ தியேட்டர் முன்னாடி விளையாடிட்டு இருக்கு. அதைப் புரிய வைக்க வேண்டிய தலைமுறை ‘பேட்ட’ல தலைவான்னு கத்திட்டு இருக்கு!
Annaiinpillai
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தை - தமிழிசை
# தீபாக்கா கிட்ட பேசுவாங்க போல!
Thaadikkaran
நாட்டின் வரிப்பணம் வீணாவதை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
# அப்போ, பட்டேல் சிலை வச்சது பி.ஜே.பி கட்சி பணத்துலயா..!!
rahimgazali
நான் இந்தியன். ஆனால், முதலில் தமிழன் - கமல்.
# நோ...நோ... தமிழன் விஜய் நடிச்ச படம். உங்களுக்கு முதலில் களத்தூர் கண்ணம்மா, அப்புறம்தான் இந்தியன்.