மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 16 - ஓய்வுக்காலத்துக்கு உகந்த அரசுத் திட்டங்கள்!

கடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 16 - ஓய்வுக்காலத்துக்கு உகந்த அரசுத் திட்டங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News

ம்மவர்களுக்கு நஷ்டம் என்றால் அலர்ஜிதான். `லாபம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, நஷ்டம் என்பது வரவே கூடாது' என்றுதான் நினைப்பார்கள்.  இதுபோல யோசிக்கும் பெண்களுக்கு நூறு சதவிகிதம் ஏற்றது அரசாங்கம் நடத்தும் திட்டங்கள்தாம். எம்ப்ளாய்ஸ் பிராவிடென்ட் ஃபண்ட் (EPF) மட்டுமல்ல... வாலன்டரி பிராவிடென்ட் ஃபண்ட் (VPF), பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் (PPF), நேஷனல் பென்ஷன் ஸ்கீம் (NPS) எனப் பல திட்டங்கள் நமது ரிட்டையர்மென்ட் காலத்தை உத்தேசித்து உருவாக்கித் தரப்பட்டுள்ளவையே.

வாலன்டரி பிராவிடென்ட் ஃபண்ட் (VPF)

எம்ப்ளாய்ஸ் பிராவிடென்ட் ஃபண்ட் திட்டத்தில் அடிப்படைச் சம்பளம் + அகவிலைப் படியில் (DA) 12% மட்டுமே சேமிக்க முடியும். இந்த வரையறையைத் தாண்டி 24% அளவுக்குக்கூட வி.பி.எஃப்பில் கூடுதலாகச் சேமிக்கலாம். வங்கி, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் கார்ப்பரேட்கள் வழங்கும் கடன் திட்டங்களில் வரிக்கழிப்புக்குப்பிறகு கிடைக்கும் வட்டி 5.5-7% மட்டுமே. அவற்றில் ரிஸ்க்கும் உண்டு. ஆனால், வி.பி.எஃப் வட்டி விகிதம் 8.55%. வரிச் சலுகையின் காரணத்தால், 30% வரி வரம்பில் இருப்பவர்களுக்கு இது சுமார் 12 சதவிகிதத்துக்குச் சமம். வட்டி விகிதம் அடிக்கடி மாறாது. சம்பளத்திலேயே வி.பி.எஃப் பிடித்தம் செய்யப்படும். அலுவலகத்தில் ஒரே ஒரு லெட்டர் கொடுத்தால் போதும்.  ரிட்டையர்மென்ட்டுக்கான பணம் ஆட்டோமேட்டிக்காகச் சேர்ந்துகொண்டே இருக்கும்.

கடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 16 - ஓய்வுக்காலத்துக்கு உகந்த அரசுத் திட்டங்கள்!

பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் (PPF)

அமைப்புசாரா இடங்களில் வேலை பார்க்கிறவர்களுக்கு உதவக்கூடியது பி.பி.எஃப். அஞ்சலகங்களிலும் வங்கிகளிலும், எந்த வயதிலும் இதை நாம் தொடங்க முடியும்.

15 வருடங்கள் கழித்து இது முதிர்வடையும். அதற்குப்பின்னும், தேவையென்றால் ஐந்து வருடங்களுக்கு நீட்டித்துக்கொள்ளலாம். ஆண்டுக்கு 12 முறை இதில் பணம் போடலாம். மாதத்தின் முதல் ஐந்து தேதிக்குள் போட்ட பணம் மட்டுமே வட்டிக் கணக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதன் வட்டி விகிதம் இப்போது 8%. வரிச் சலுகையின் காரணத்தால், 30% வரி வரம்பில் இருப்பவர்களுக்கு இது சுமார் 11.5 சதவிகிதத்துக்குச் சமம். அவசியத் தேவை எனில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சேமிப்பிலிருந்து பகுதி பணத்தைத் திரும்பப் பெறலாம்.

கடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 16 - ஓய்வுக்காலத்துக்கு உகந்த அரசுத் திட்டங்கள்!

நேஷனல் பென்ஷன் ஸ்கீம் (NPS)

பென்ஷன் வசதியை உறுதி செய்வதும், பங்குச் சந்தை தரக்கூடிய அதீத லாபத்தை ஓரளவு தருவதும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இதில் டயர் 1 ரிட்டையர்மென்டுக்கானது; நிறைய வரிச் சலுகைகளைத் தரக்கூடியது. டயர் 2 மியூச்சுவல் ஃபண்ட் போல சேமிக்க உதவுவது. டயர் 1-ல் வருடத்துக்குக் குறைந்தது ரூ.6,000 சேமிக்க வேண்டும். 80சி-யின் ரூ.1.5 லட்சம் தவிர, 80சிசிடி-யின் கீழ் வருடத்துக்கு ரூ.50,000 வரை வரிச் சலுகை உண்டு.

இந்தப் பணத்தை நிர்வகிக்க ஐ.சி.ஐ.சி.ஐ, எஸ்.பி.ஐ, எல்.ஐ.சி, ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட எட்டு பென்ஷன் ஃபண்ட் மேனேஜர்களைத் அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களில் யார் நம் பணத்தை நிர்வகிக்கவேண்டும் என்று சொல்லும் உரிமை நமக்கு உண்டு. 50% வரை பங்குகளில் முதலீடு செய்து லாபத்தை அதிகரிக்கலாம்.

நமக்கு 60 வயதாகும்போது, மொத்தப் பணத்தில் 60% வரை, வரி செலுத்தி எடுத்துக் கொள்ளலாம்; மீதி 40 சதவிகிதப் பணத்தை பென்ஷன் தரும் நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

டயர் 2 அக்கவுன்ட் பணத்தை எடுக்க எந்த விதிமுறைகளும் இல்லை. ஆனால், டயர் 2-வில் சேமிப்பதைவிட மியூச்சுவல் ஃபண்டுகளில் சேமிப்பதே உத்தமம் என்பது நிபுணர்களின் கருத்து.

சரி... உங்கள் ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை எப்படிச் செய்து வருகிறீர்கள்?

- ப(ய)ணம் தொடரும் 

சுந்தரி ஜகதீசன் 

படம் : ப.சரவணகுமார்

கடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 16 - ஓய்வுக்காலத்துக்கு உகந்த அரசுத் திட்டங்கள்!