தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பெண்களின் நட்புக்கு ஆயுள் குறைவா?

பெண்களின் நட்புக்கு ஆயுள் குறைவா?
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்களின் நட்புக்கு ஆயுள் குறைவா?

கோவை கொண்டாட்டம்

அவள் விகடன் `ஜாலி டே'யில் ஓர் ஆய்வு!

மார்கழி குளிருக்கு செம ஹாட்டாக ஒரு காபி அருந்தியதுபோல நடந்து முடிந்தது, கோவையில் அவள் விகடன், வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் இணைந்து வழங்கிய ‘ஜாலி டே' கொண்டாட்டம்... பவர்டு பை கலர்ஸ் தமிழ், அபிஸ் ஹனி, அசோசியேட் ஸ்பான்சர் ஜிஆர்பி.

முதல் நாள் ஜாலி டே முன்தேர்வுப் போட்டிகள்  கிருஷ்ணம்மாள் கல்லூரி மற்றும் சத்யநாராயணா ஹால் ஆகிய இடங்களில் நடைபெற்றன. பாட்டு, நடனம், அடுப்பில்லா சமையல், ரங்கோலி, ஆர்ட் அண்டு கிராஃப்ட் என வாசகிகள் தங்கள் திறமைகளை வெளிக் காட்டினர். செல்ஃபி போட்டியில் குயின்களாகவும், டப்ஸ்மாஷ் போட்டியில் நடிகையர் திலகங்களாகவும் மாறிவிட்டனர் நம் வாசகிகள்!

மறுநாள் டிசம்பர் 23 அன்று, கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நடந்த `ஜாலி டே' நிகழ்ச்சி, முழுக்க முழுக்க குதூகலம்தான்.  அங்கு அமைக்கப்பட்டிருந்த விகடன், அபிஸ், கலர்ஸ் தமிழ், வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் அரங்குகளும் நிகழ்ச்சியை கலர்ஃபுல்லாக்கின!

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சின்னத் திரை நட்சத்திரங்கள் சித்ராவும் சுட்டி அரவிந்த்தும் வாசகிகளின் உற்சாகத்தை அதிகரிக்க, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் அவள் வாசகியும் மனநல நிபுணருமான சுந்தரி துரை. அஸாரும் டி.எஸ்.கே-வும் மிமிக்ரி செய்து நகைச்சுவை மழையில் நனைத்தனர். ‘துபாய் காஸ்ட்யூமில்’ வந்த வடிவேல் பாலாஜியின் சிரிப்பு வெடி... சரவெடிதான்!

பெண்களின் நட்புக்கு ஆயுள் குறைவா?

வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் சார்பாக நடத்தப் பட்ட ஆன் தி ஸ்பாட் போட்டிகளில் கலந்து கொண்ட வாசகிகள் ஆச்சார்ய பரிசுகளை அள்ளினர். ஆபிஸ் ஹனி சார்பில் உணவு உண்ணும் போட்டி, விழாவுக்குக் கூடுதல் சுவையைச் சேர்த்தது.

கலர்ஸ் டி.வி-யின் ‘வந்தாள் ஸ்ரீதேவி’ சீரியலின் முக்கிய நடிகர் நந்தன் மற்றும் இணைபிரியா தோழிகளாக ‘ஓவியா’ சீரியலில் உருக்கமாக நடித்து மக்கள் மனதைக் கொள்ளைகொண்டிருக்கும் காயத்ரி மற்றும் ஹனி சிறப்பு விருந்தினர்களாக மேடைக்கு வர, வாசகிகளுக்கு எக்ஸ்ட்ரா குஷி! ‘பெஸ்ட் ஃப்ரெண்ட்’ போட்டிக்கு இவர்களே நடுவர்கள். பெண்களின் நட்புக்கு ஆயுள் குறைவு என்ற நம் சமுதாயச் சூழலில், 25 வருடங்கள் தோழிகளாக ஒருவருக்கொருவர் தோள் கொடுத்துவரும் நம் வாசகிகள் இருவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியின் நெகிழ்ச்சி மொமென்ட் அது!      

மாலை... அரங்கம் முழுவதும் அமைதி. ஆம்... ‘ஜாக்பாட்’ பரிசுக்கான அதிர்ஷ்டசாலியைத் தேர்ந்தெடுக்கும் நேரம் அது. வெற்றியாளர் பெயரை அறிவிக்க, சுட்டி அரவிந்த் மற்றும் சித்ரா கவுன்ட்டவுணை ஸ்டார்ட் செய்ய, அரங்கமே ‘திக் திக்’ என டி.ஜே-யின் பேக் கிரவுண்ட் துடிப்புடன் காத்திருந்தது. பேரமைதியை உடைத்து ஒரு பெயர் அழைக்கப்பட்டது. ‘ஓ பிரியா பிரியா, என் பிரியா பிரியா’ என பாடல் ஒலிக்க ஆரம்பிக்க,  கைதட்டல்களுக்கு இடையே மேடைக்கு ஓடிவந்தார் உடுமலைப்பேட்டை ஸ்ரீபிரியா!

பம்பர் பரிசாக ஃப்ரிட்ஜைப் பெற்ற மகிழ்விலிருந்த அவரிடம் பேசினோம். “பத்து வருஷமா அவள் விகடன் படிக்கிறேன். ஒவ்வொரு முறையும் `ஜாலி டே'யில் தவறாம கலந்துக்குவேன். அவ்ளோ கொண்டாட்டமா, குதூகலமா இருக்கும் அந்த நாள். இந்த வருஷம் எனக்கு பரிசு வேற கிடைச்சிடுச்சு... சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறதுனா என்னன்னு இப்போதான் உணர்றேன். அடுத்த திருவிழாவுக்காக ஆவலோடு காத்திருப்பேன்” என்று பரவசமானார் ஸ்ரீபிரியா!

‘அடுத்து, மேலும் சிறப்பான நிகழ்ச்சிகளுடன் சந்திப்போம்’ எனத் தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியை முடிக்க, ‘எல்லா விழாவிலும் எங்க அட்டென்டன்ஸ் இருக்கும்’ என அன்பு வாக்கு தந்து சென்றனர் நம் வாசகிகள்!

-  ச.கார்த்திகா , ரா.கௌசல்யா , சு.உ.சம்யுக்தா  
படங்கள் : ரமேஷ் கந்தசாமி, வ.இர.தயாளன் , ஷே.ஆயிஷா அஃப்ரா