தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

Love All

Love All
பிரீமியம் ஸ்டோரி
News
Love All

காதல் உலகம்

லவ்-0

Love All

`லவ் ஆல்' என்று டென்னிஸ், கூடைப் பந்து, வீச்சுப் பந்து போன்ற விளையாட்டுகள் ஏன் தொடங்குகின்றன? இரு பக்கத்தினரும் மனதில் எந்தவொரு காழ்ப்பு உணர்ச்சியுமின்றி விளையாடிட, இந்த விளையாட்டுகள் `லவ் ஆல்' உடன் தொடங்கப்படுகின்றன என்றாலும், இங்கு லவ் என்பது பூஜ்ஜியத்தைத்தான் குறிக்கிறது. இது, பூஜ்ஜியம் போன்ற முட்டையைக் குறிக்கும் ஃப்ரெஞ்சு சொல்லான ‘l’oeuf’லிருந்து மருவியது.

லவ்-1

Love All

`Leubh' என்ற ஜெர்மானிய மொழியிலிருந்து முதன்முதலாகத் தோன்றிய `லவ்' என்ற சொல், ஏறத்தாழ நூற்றுக்கும் மேலான மொழிகளில் வழங்கப்படுகிறது. என்றாலும், ஆங்கில மொழியின் `ஐ லவ் யூ' தான் காதலர்களிடையே அன்றும் இன்றும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

லவ்-2

Love All

C8H11NO2 + C10H12N2O + C43H66N12O12S2 (டோப்பமைன் + செரட்டோனின் + ஆக்சிடோசின்)

`இதுதான், காதல் கெமிஸ்ட்ரியின் சமன்பாடு' என்கின்றனர் வேதியியலாளர்கள்!

லவ்-3

Love All

உலக வரலாற்றில் முக்கியமான காதல் கதைகள் என `Pride and Prejudice', `War and Peace', `The Colour Purple', `Never let me go' போன்ற புத்தகங்கள் வரிசைப்படுத்தப்பட்டாலும், எரிக் சீகலின் `Love Story'தான் காதலர்களால் பெரிதும் கொண்டாடப்படும் புத்தகமாகத் திகழ்கிறது.

லவ்-4

Love All

காதல் பிறந்தவுடன், சிவப்பு நிற ஆர்ட்டின்கள் பறக்கின்றனவே, அந்த ஆர்ட்டின்கள் எப்போது, எப்படிப் பிறந்தன? `கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் அரச இலையிலிருந்து' என்கிறது சிந்து சமவெளி நாகரிகம்.

`சில்ஃபியம் என்ற செடியி லிருந்து' என்கிறது கிரேக்க மற்றும் ரோமானிய வரலாறுகள். `ஐவி அல்லது அத்தி இலை' என்கிறது இடைக்கால நாகரிகம்.

எனினும் இந்த இதயத்தை, மன்மதன் என்கிற Cupid அம்பு தைக்கத் தொடங்கியது 13-ம் நூற் றாண்டிலிருந்துதான்!

லவ்-5

`காதல், வருத்தம், துக்கம் ஆகிய உணர்வுகள் அனைத்தும் இதயத்துடன் தொடர்புடையவை. மூளைக்குத் தொடர்புடையவை அல்ல' என்று எகிப்தியர்களும் கிரேக்கர்களும் நம்பியதால்தான், ஆரம்ப நாள்களில் காதல் இதய வடிவில் குறிக்கப்பட்டு, பிறகு அதுவே நிலைபெற்றுவிட்டது.

லவ்-6

Love All

`உலகப் புகழ்பெற்ற காதல் ஜோடிகள்' என்றவுடன் ரோமியோ-ஜூலியட், லைலா-மஜ்னு, அம்பிகாபதி-அமராவதி, ஷாஜகான்-மும்தாஜ் ஆகிய பெயர்கள் நமது நினைவில் வந்தாலும், இவையனைத்தும் தோல்வியுற்ற காதல் காவியங்களே!

லவ்-7

Love All

பல வண்ணங்களில் ஜோடியாகக் காணப்படும் `லவ் பேர்ட்ஸ்' என்ற காதல் பறவைகள், கிளி இனத்தைச் சார்ந்தவை. நேசத்தைக் குறிக்கும் இந்த அழகிய பறவைகள், ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கரில் அதிகம் காணப்படுகின்றன.

லவ்-8

Love All

சங்க இலக்கியங்களில் காதலை கைக்கிளை (ஒருதலைக் காதல்), அன்பின் ஐந்திணை (அன்புடைக் காதல்), பெருந்திணை (பொருந்தாக் காதல்) என்று மூன்று பகுதிகளாக வகுத்துக் கூறப்பட்டுள்ளது.

லவ்-9

Love All

பண்டைய கிரேக்க மொழியில், தன்னலமற்ற காதல் ‘அகேப்’ (Agape) என்றும், எதிர் பாலினரிடம் தோன்றும் இச்சை ‘ஈராஸ்’ (Eros) என்றும், அளவுக்கதிகமான நேசம் ‘ஃபிலியா’ (Philia) என்றும், பெற்றோர்களின் அன்பு ஸ்டோர்ஜ் (Storge) என்றும், விளையாட்டுத்தனமான காதல் ‘லூடஸ்’ (Ludus) என்றும், நிலை பெற்ற காதல் ‘ப்ரக்மா’ (Pragma) என்றும் ஆறு சொற்களின் வாயிலாக, காதல் வரையறுக்கப்படுகிறது.

லவ்-10

Love All

காதலை சொல்லத் தகுந்த மலர், ரோஜா.

உண்மையான காதலுக்கு அடையாளமாக விளங்கும் சிவப்பு ரோஜாக்கள், காதலர் தினத்தன்று பெரும் முக்கியத்துவம் அடைகின்றன.

Love All

கிரேக்க வரலாற்றில், காதல் தெய்வத்தின் பெயரான ‘ஈராஸ்’ (Eros) இடமிருந்து பெயரைப் பெற்ற இந்த ரெட் ரோஸ்கள், காதலுக்கு முக்கியத் தூதாகவே கருதப்படுகின்றன.

- மருத்துவர் சசித்ரா தாமோதரன்