தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

காதல் நினைவுகள்

காதல் நினைவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காதல் நினைவுகள்

ஏழுக்கு ஏழு

காதலித்தபோது, உங்களுக்கான மீட்டிங் பாயின்ட் எது?

சுமதி ராம், பாடலாசிரியர்

காதல் நினைவுகள்

அப்போ, மதுரை அமெரிக்கன் காலேஜ்ல ஒரு கல் பெஞ்ச் இருந்தது. எல்லாரும் அந்த கல் பெஞ்ச்சை தாண்டித்தான் காலேஜுக்குப் போவாங்க. நானும் அவரும் அங்கதான் சந்திச்சுக்குவோம். எந்தத் தயக்கமும் இல்லாமல், அந்த பெஞ்ச்சுல உட்கார்ந்து பேசிட்டு இருப்போம். மொத்தம் அஞ்சு வருஷங்கள் காதலிச்சோம். முதல் ஒன்றரை வருஷம்தான் இந்த காலேஜ் பெஞ்ச். பிறகு, சென்னை கிறிஸ்டியன் காலேஜுக்கு வந்ததுக்கப்புறம், இந்த காலேஜ்லயும் ஒரு கல் பெஞ்ச்சை பிடிச்சிட்டோம். இப்படி, கல் பெஞ்ச்சிலதான் எங்க காதல் வளர்ந்துச்சுனுகூட சொல்லலாம்!

காதல் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது...

திவ்யா மாரிசெல்வராஜ்
, ஆசிரியை

காதல்னாலே, எங்களுடைய காதல்தான் எனக்கு ஞாபகத்துக்கு வரும். கல்யாணத்தோடு சேர்த்து ஒன்பது வருடங்களாக காதலிச்சிட்டு இருக்கோம். இத்தனை வருடங்கள் ஓடியதே தெரியலை.

காதல் நினைவுகள்

நவி பாப்பா வந்ததேகூட எங்களுக்கு ஆச்சர்யமாதான் இருக்கு! அப்படியே கொஞ்சம் திரும்பிப் பார்த்தா, ‘நாங்க லவ் பண்ணோமா, கல்யாணம் பண்ணோமா, அதுக்குள்ள பாப்பா வந்துட்டாளா’ என்கிற மாதிரிதான் இருக்கு. இத்தனை நாள்கள்ல மாரியும் நானும் சின்ன சண்டைகூட போட்டதில்லை. அப்பா, மகளை பார்த்துக்கிற மாதிரி மாரி, என்னை எப்பவுமே அக்கறையா ஒரு குழந்தை போலத்தான் பார்த்துக்குவாரு. மாரியை ஒரு தாயுமானவன்னு சொல்லலாம்!

எந்தத் தருணத்தில் காதல் வாழ்க்கை ஆரம்பமானது?

லலிதா ஷோபி
, நடன இயக்குநர்

காதல் நினைவுகள்

‘முதல்வன்’ படத்தில் வர்ற ‘முதல்வனே உன்னை’ பாடலை நாங்க ஆர்ட்டிஸ்ட்டுக்கு சொல்லிக்கொடுத்துட்டு இருந்தபோது, சுற்றியிருக்கிறவங்க ‘இந்த ஜோடி ஆடுறதை பார்த்துட்டே இருக்கலாம்’னு சொன்னாங்க. பிறகு, எங்களைச் சுற்றி இருக்குற நண்பர்கள் எல்லாருமே, ‘நீங்க பார்க்க காதலர்கள் மாதிரிதான் இருக்கீங்க’ன்னு அடிக்கடி சொல்ல ஆரம்பிச்சாங்க. தொடர்ந்து, ‘நீங்க காதலிக்கிறீங்களா?’ என்கிற கேள்வி எங்களைத் துரத்திட்டே இருந்ததால, ‘எல்லாரும் இப்படிப் பேசுறாங்க, சொன்னாலும் நம்பமாட்டேங்கிறாங்க. நம்ம குடும்பத்துல அனுமதி வாங்கிக்கலாம்’னு பேசிக்கிட்டோம். பிறகு, வீட்டுக்குத் தெரிஞ்சே காதலிச்சு, திருமணமும்  செஞ்சிக்கிட்டோம். இந்த 20 வருஷங்களும் திகட்டாத காதலோடு லைஃப் நல்லா போயிட்டிருக்கு.

காதல் வாழ்க்கை டு திருமண வாழ்க்கை?

சைந்தவி, பாடகி

நானும் அவரும் காதலிக்க ஆரம்பிச்சு 18 வருஷங்கள் ஆகுது. வருஷங்கள் ஆக ஆக ஒவ்வொரு நாளும் அன்புதான் கூடிக்கிட்டேவருது. காதலிச்ச 12 வருஷங்களும் பெரும் பாலும் நாங்க வெளியே சந்திச்சிக்கவே இல்லை. விடிய விடிய போன்லயேதான் பேசிட்டிருப்போம்.

காதல் நினைவுகள்

இப்போ, கல்யாணமாகி ஒரே வீட்டுல இருக்கோம். அது இன்னும் நல்லாருக்கு. அவர் பிசியா இருக்காரு. நானும் கச்சேரிகளுக்குப் போறேன்.

தினமும் நான் எழுந்ததும் பார்க்கிற முதல் ஆளா அவர் இருக்கிறது, ஒரு நல்ல ஃபீல் கொடுக்குது. லவ் பண்ணின காலகட்டத்தைவிட, இந்த கல்யாண வாழ்க்கை இன்னும் எங்களுக்கு கூடுதல் காதலையும் மகிழ்ச்சியையும் தந்திருக்கு.

டித்த காதல் புத்தகம்?

நிவேதிதா, யூடியூப் ஆர்ட்டிஸ்ட்

ஸ்ரீகலா எழுதிய ‘சப்தமில்லா ஸ்வரங்கள்’  கதையின் முதல் பாகத்தில், ஹீரோ  கதாபாத்திரத்தை கெட்டவராகவே சித்திரிச்சுட்டு வருவாங்க. அதற்கு நேரெதிரா இரண்டாவது பாகத்தில், அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு முடிச்சும் அவிழ்க்கப் பட்டு அவர் நல்லவராகத் தெரிவார்.

காதல் நினைவுகள்

முதல் பாகத்தில் அவரை நோக்கி வருகின்ற அனைத்து நபர்களும் ஏதாவது ஒரு நோக்கத்தோடுதான் வந்திருப்பாங்க. அந்தப் போலி மனிதர்களால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பார். இந்த விஷயத்தை இரண்டாவது பாகத்தில் அவிழ்க்கும்போது, கதை சொல்ல வரும் அழகியலான காதல் நமக்குப் பிடிபடும். இந்த ஒரு விஷயத்துக்காகவே, அந்த நூல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

உங்கள் இருவரில் யார் முதலில் காதலை வெளிப்படுத்தியது?

பிரியா ரமேஷ், பண்பலை தொகுப்பாளர்

காதல் நினைவுகள்

ரெண்டு பேரும் ஒரே ஆபீஸ்லதான் வேலை செஞ்சோம். அவர்தான் முதல்ல வந்து ‘வீட்டுல பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க. நான் உன்னைத்தான் சொல்லலாம்னு இருக்கேன்’னு சொல்லி புரபோஸ் பண்ணாரு. நான் உடனே, ‘எதுவா இருந்தாலும் எங்கப்பாகிட்டயே பேசிக்குங்க’னு சொல்லிட்டு ஜூட் விட்டுட்டேன். அதற்கப்புறம், ரெண்டு வீட்டு சம்மதத்தோடு காதலிக்க ஆரம்பிச்சு, கல்யாணம் செஞ்சிக்கிட்டோம்!

பிடித்த காதல் திரைப்படம்?

செம்மலர் அன்னம், நடிகை

காதல் நினைவுகள்

‘பூ’  படத்தில் தங்கராசுவை காதலிக்கும் மாரியின் தூய காதல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் பொதுவாகவே ரொம்ப ரொமான்டிக். என் கணவரை உருகி உருகி, விரட்டி விரட்டி காதலிச்சுத் திருமணம் செஞ்சிக்கிட்டேன். ‘பூ’ படத்தின் மாரி கதாபாத்திரம், நான் நிஜத்துல  இருக்கிறதை அப்படியே பிரதிபலிக்கும். இப்படி, என்னை மாரியோட பொருத்திப் பார்க்க முடியுறதால, ‘பூ’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்!

-ப.தினேஷ்குமார்