அரசியல்
சமூகம்
Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

சூர்யா, ஆர்யா தொடங்கி விஷால், விஜய் சேதுபதி வரை அத்தனை பேரும் சின்னத்திரைக்கு வந்துவிட்டார்கள். ஆனால், அரசியல்வாதி ஒருவரைக்கூட இந்தப் பக்கம் காணோம். அவர்களையும் இந்தப் பக்கம் இழுத்து வந்தால் பொதுக் கூட்டம் அளவுக்கு ஃபேமிலி ரூம் களை கட்டும்! ஆளுக்கேற்றது போல ஆளுக்கொரு ஷோ! (பிற்காலத்தில் இது நிஜமாகவே நடந்தால் காப்பி ரைட் கேட்போம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்)

ஐடியா அய்யனாரு!

பழமொழி பேசு... பல மொழிகளில் பேசு!

ஆங்கர்: ஸ்டாலின்

கேம் ப்ளான்: ‘காலைச் சுற்றின பாம்புக்குத் தெரியுமா கற்பூர வாசனை’ என எக்குத் தப்பாகப் பழமொழிகளை அடித்துவிட வேண்டும். சிறப்பாக, சரளமாகச் சிரிக்காமல் பழமொழி சொல்பவர்தான் வின்னர்.

பரிசு: வின்னராகத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு, வரும் தேர்தலில் ஸ்டாலினுக்கு துண்டுச்சீட்டில் ஸ்கிரிப்ட் எழுதித் தரும் வேலை!

கற்பனையா ஒரு கட்சி!

ஆங்கர்: ரஜினி

கேம் ப்ளான்:
கற்பனையாக ஒரு கட்சியை உருவாக்கி, அதற்கு உறுப்பினர்கள் நியமித்து, செயல்திட்டங்கள் வகுக்க வேண்டும். அடுத்ததாக, அந்தக் கட்சியே தேர்தலில் ஜெயித்ததாகக் கற்பனை செய்து, அரசுத் திட்டங்கள் வகுக்க வேண்டும். கிட்டத்தட்ட ஸ்கூலில் எழுதும், ‘நான் முதலமைச்சரானால்’ கட்டுரை டைப் விளையாட்டுதான்.

பரிசு: வின்னராகத் தேர்ந்தெடுக்கப் படுபவருக்கு இல்லாத கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவி!

இன்னிக்கு இது... நாளைக்கு அது!

ஆங்கர்: ஆடிட்டர் குருமூர்த்தி

கேம் ப்ளான்: முதலில் ‘அ.தி.மு.க தலைவர்களுக்குத் தகுதி இல்லை’ என்று சொல்வது, பின்னர், ‘அ.தி.மு.க-தான் பி.ஜே.பி வளர உதவி செய்யவேண்டும்’ என்று பிளேட்டைத் திருப்பிப் போடுவது, ‘வெள்ளத்துக்குக் காரணம் கோர்ட் தீர்ப்புதான்’ என்று அள்ளிவிட வேண்டும்.

பரிசு: ரிசர்வ் வங்கியில் அவர் திடீர் பதவி வாங்குவதுபோல, வின்னருக்கும் டைட்டானிக் கப்பலின் கேப்டன், பப்ஜி ப்ரோ லேயர் உள்ளிட்ட பதவிகள் திடீரென வழங்கப்படும்.

உங்களில் யார் அடுத்த கட்சி ஓனர்?

ஆங்கர்: ஒவ்வொரு வாரத்துக்கும் ஒருவர் வீதம் மன்னார்குடி குடும்பத்தினர்.

கேம் ப்ளான்:
குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான கட்சிப் பெயர் யோசித்துத் தருவது, கலர் கலர் காம்போவில் கொடி தைத்துத் தருவது உள்ளிட்ட டாஸ்க்குகள் செய்யவேண்டும். யாரிடம் க்ரியேட்டிவிட்டி ஊற்றெடுக்கிறதோ, அவரே வின்னர்.

பரிசு: வின்னருக்குக் குடும்பத்தின் சார்பாக ஒரு கட்சி தொடங்கித் தரப்படும். தேர்தல் நேரத்தில் அவர்கள் தங்களுக்குள் மாற்றி மாற்றிக் கூட்டணி வைத்து கிச்சுகிச்சு மூட்டிக்கொள்ளலாம்.