சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

நர்சிம் கவிதைகள்

நர்சிம் கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
நர்சிம் கவிதைகள்

நர்சிம் கவிதைகள்

நர்சிம் கவிதைகள்

சிறுகச் சிறுகத் தவிர்க்கப்பட்டு
இதோ
இப்பெருந்தனிமை

மொத்த அறைக்கும்
போதுமானதாயிருக்கிறது
இந்த ஒற்றை நாற்காலி.

பகிர்தல் ஏதுமற்ற
தனிப்பெரும் சாம்ராஜ்ஜியம் எனது.
ஆம்
தவிர்த்தல்களைத் தவிர்த்தலென்பதோர்
பெருங்கலை.
ஒரு சிட்டிகை உப்பும்
தேவையான அளவு மிளகும்
தனிமையின் மீது தூவி
விண்டு வில்லைகளை
உண்டு செரித்தல்
அதிலோர் வகை

இந்தக் கவிதையின்
இறுதிப்புள்ளி
ஒரு
கருஞ்சிறு குறுமிளகு.

நர்சிம் கவிதைகள்

ணவின் மீது விழுகிறது
முதல் தூறல்
நகர்த்தாமல்
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்
அல்லது
பார்த்துக்கொண்டே இருக்கிறேன்

நிரம்பி வழியும் தட்டில்
மிதந்து சுழல்கின்றன
பருக்கைகள்.
காமத்தின் மீது
பொழிகிறது சிறு மழை
நகராமல்
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்
அல்லது
பார்த்துக்கொண்டே இருக்கிறேன்

தலைகீழ்த் தீயெனப் பெய்கிறது பெருமழை
அசங்கும் சுடரை அணுகும் முனைப்புடன்
நடுங்கி நீள்கின்றன
விரல்கள்

புறங்கையில் பட்டுத் தெறித்த
நீர்ப்பொறி ஒன்று
பெருங்கருணையோடு
சூடாக்கித் தரக்கூடும்
எனக்கான
இரவு உணவை.

நர்சிம் கவிதைகள்

த்தனை ஆண்டுகளாய்
பயிலாத நடையா?
“தினம் பயிற்சி செய்”
மருத்துவக் கட்டளை

இவ்வளவு ஆண்டுகளில்
கனியாத குணமா
நாய்க்குணம் என்பர். நண்ப
`இனி கனிவாய் இரு’
நண்பர்களின் கட்டளை

இத்தனை ஆண்டுகள்
எதிர்கொள்ளாத சோதனைகளா
எனினும்

‘இரத்தம் மலம் ஜலம் உப்பு சர்க்கரை
அத்தனையும் சோதி’
இணையின் அன்புக்கட்டளை

`உண்டி சிறு’
உடலின் உத்தரவு
`சட்டெனத் திரும்பாதே’
தசையின் தீர்ப்பு

பெருங்காமம்
இனி மெல்லச் சாகுமோவென
ஐயம் திரிபற அங்குமிங்கும்
அலமந்து மறுகும்
எனதருமை மனமே,
இனிதான் வாழ்வு தொடங்குகிறதாம்
“அமைதி கொள்.”

நர்சிம் கவிதைகள்

ருக்கு வெளியே
இருந்த சுடுகாடு
இப்போது நடுவே

சுடுகாட்டுக்கு எதிர்வீடு
சுடுகாட்டுக்குப் பக்கத்து வீடு என
அமேஸான் ஃப்ளிப்கார்ட் ஸ்விகியர்களுக்கு
ஏதுவாகிப்போன முகவரிகள்

பிணம் வராத நாள்களில்
வாகனங்கள் நிறுத்துமிடம்

சாவு அரிதாகிப் போய்விட்ட காலம்தான்
எனினும்
எப்போதேனும்
சதை வெடிக்கும் சப்தம் தெறிக்க
அசங்கி எரியும் தீயின் நாவுகளை
கம்பிக்கதவுகளைப் பற்றியபடி
நிச்சலனமாய்
நின்று பார்க்கும்
சுடுகாட்டுக்கு எதிர்வீட்டுச்
சிறுமியின் கண்கள்
நடுங்கச் செய்கிறது.

ஓவியங்கள்: ரமணன்