Published:Updated:

`கிண்டல் செய்தவர்களுக்கு முதல் போட்டியிலே பதிலடி' - சாதிக்கும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் பெண் தலைமைச்செயலர்!

பிப்ரவரி மாதம் 10-ம் தேதி, தமிழகம், புதுச்சேரி மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அசோசியேஷன் சார்பாக, மாநிலங்களுக்கு இடையேயான``அஜித்  வடேகர் டிராபி" நடத்தப்பட்டது. அதில், தமிழக அணி வெற்றிபெற்று, தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதுகுறித்து தமிழக மாற்றுத்திறனாளி அணியின் தலைமைச்செயலாளர் மஞ்சுப்பிரியாவிடம் பேசினோம்.

``மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணிக்கு ஒரு பெண் தலைமைச் செயலராகத் தேர்வுசெய்யப்பட்டது இதுதான் முதல் முறை. பெண் தலைமை தாங்கும் அணி எனக் கிண்டல் செய்தவர்களுக்கு, முதல் போட்டியிலே வெற்றியின்மூலம் பதிலளித்துவிட்டேன். வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க ஆரோக்கியமான உணவு, நேர்த்தியான ஆடைகள், போதிய அளவிலான பயிற்சி போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதை முதல்கட்ட பணியாக எடுத்துக்கொண்டேன். மேலும், வீரர்களை ஊக்குவிக்க சோஷியல் மீடியா, ஊடகங்களில் அவர்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தேன்.

வீரர்கள், அதை அங்கீகாரமாகவும், அடையாளமாகவும் பார்த்தாங்க. அதன் பலன்தான், தமிழக அணியின் வெற்றி என்றுகூட சொல்லலாம். தமிழக வீரர் சுகுனேஷ், "மேன் ஆஃப் த சீரிஸ்" வென்றது கூடுதல் சிறப்பு. அடுத்த கட்டமாகத் தேசிய அளவிலான போட்டிக்கு வீரர்களைத் தயார்படுத்துவதற்கான பணியில் இறங்கியுள்ளேன். நிச்சயம் தமிழக அணி,அடுத்தடுத்த போட்டிகளில் சாதனை படைக்கும்'' என்கிறார் தன்னம்பிக்கையுடன்.