அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

twitter.com/naaraju

புராணகாலப் பாத்திரங்கள், பீஷ்மரையும் அர்ஜுனனையும் பத்து வருச புராஜெக்ட்டா இப்ப எழுதிட்டிருக்கற ஒரு ஆள், நம்ம முன்னால இரத்தமும் சதையுமா வாழ்ந்து, சாதனை பண்ணுன ஆட்களை இப்ப ஏன் புத்தகம் எழுதிக் கொண்டாடுறீங்கன்னு கேட்கிறதெல்லாம்...  

வலைபாயுதே

twitter.com/shivaas_twitz

தேர்தல் நேரத்துல அரசியல்வாதிகள் மீது தேர்தல் கமிஷன் போடும் வழக்கெல்லாம், நம்ம புத்தாண்டு உறுதிமொழி மாதிரிதான்... அப்புறம் என்னாச்சுன்னு கேட்கக்கூடாது..! 

twitter.com/kathir_twits

ரெண்டு ஜூஸ் ஆர்டர் பண்ணா எந்த கிளாஸில் அதிகமாய் ஜூஸ் நிரம்பி இருக்கோ, அது நமக்கு வருமா என்று ஏங்கும்போது குழந்தையாகிப்போகிறது மனசு!

twitter.com/yugarajesh2


ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர் எல்லாம் நகைச்சுவை நடிகர்கள் என்று நம்பி சிரித்து மகிழ்ந்த சமூகம் எவ்வளவு வெள்ளந்தி யானது. 

twitter.com/ItsJokker

கடவுளின் படைப்பில் மிகவும் ஆபத்தானது “மனிதன்”னு சொன்னா அது “ஆத்திகம்.” மனிதனின் படைப்பில் மிகவும் ஆபத்தானது “கடவுள்”னு சொன்னா அது “நாத்திகம்.”  

வலைபாயுதே

twitter.com/happylife_twitz

எடப்பாடியார் வாழ்க்கை வரலாறு ஒரு வரியில்: குப்புற விழுந்தேன் குபேரனாக எழுந்தேன்.

twitter.com/vickytalkz

RCB fans: நாங்கவேணா எல்லார் கிட்டயும் போய் அடிபட்ட சிங்கத் துக்கு இன்னும் மூச்சுத் திணறல்   இருக்குன்னு சொல்லிட்டு வரவா?
 
facebook.com/Aadhavan Dheetchanya

காலி சேர்களுக்கும் வாக்குரிமை என்று சட்டத்திருத்தம் செய்தால் தமிழகத்தில் பா.ஜ.க அமோக வெற்றி பெறும்போல.

வலைபாயுதே

twitter.com/manipmp

நம்ம சுயசரிதையை Bank passbook entry-யைப் பார்த்தாலே தெரிஞ்சுக் கலாம்.

twitter.com/kumarfaculty


இந்தியாவின் தேசிய மிட்டாய் ஆரஞ்சு மிட்டாய்...!

facebook.com/Abdul Hameed Sheik Mohamed


இரண்டு தொகுதிகளில் ராகுல் போட்டியிடுவது மாண்பு அல்ல - கமல். கட்சி ஆரம்பித்துவிட்டு எந்தத் தொகுதியிலும் போட்டியிடாமல் பதுங்குவது மரியாதை அல்ல.

வலைபாயுதே

twitter.com/s tar_nakshatra

சிறுவயதில் தாயை இழப்பதைவிடக் கொடுமையானது  முதிர்வயதில் மனைவியை இழப்பது.

facebook.com/puthiyaparithi

என்னுடன் விவாதம் செய்ய ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் தயாரா? - அன்புமணி. இப்படித்தான் இந்தத் தேர்தலில் மெல்ல மெல்ல எதிர்க்கட்சிக்காரர்களே உதய்ணாவை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்...

twitter.com/rp_tweety

சுடச் சுடத் தேநீர்கூடப் பருக முடியாத நாக்கு தான் பிறர் மனம் நோக அனலை உமிழ்ந்து விடுகிறது...

சைபர் ஸ்பைடர்