பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஆன் லைன்... ஆஃப் லைன் - 3

ஆன் லைன்... ஆஃப் லைன் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன் லைன்... ஆஃப் லைன் - 3

எமோஜி

ஆன் லைன்... ஆஃப் லைன் - 3

லகில் புதிதாக எது வந்தாலும் உடனே அதைப் பற்றி ஓர் ஆய்வோ அல்லது சர்வேயோ செய்துவிடுகிறார்கள். செல்ஃபிதானே இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டு பிடிப்பு, அதை விடுவார்களா? ஓர் ஆய்வின்படி அதிக செல்ஃபி எடுப்பவர்களின் ஐ.க்யூ லெவல் குறைவாம். அதாவது புத்திசாலிகள் அதிகம் செல்ஃபி எடுப்பதில்லை என்கிறார்கள். எனக்கு இந்த ஆய்வில்  நம்பிக்கையில்லை. ஆனால், இன்னொரு விஷயம் உண்டு. அது ஆய்வோ சர்வேயோ இல்லை. உண்மை. 2018-ம் ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 250 பேர் செல்ஃபி எடுக்க முயன்று உயிரிழந்திருக்கிறார்கள்.

ஆன் லைன்... ஆஃப் லைன் - 3

ஒகேனக்கல் பரிசலில் மகிழ்ச்சியாகச் சென்றது ஒரு குடும்பம். அந்தத் தருணத்தைப் படம் பிடிக்க முயன்றார் ஒருவர். எல்லோரும் பரிசலின் ஒரே பக்கத்துக்கு வந்து போஸ் கொடுக்க, கவிழ்ந்தது பரிசல். பரிசல் ஓட்டி உட்பட பத்துப் பேரும் நீரில் மூழ்கினர்.

புதுமணத்தம்பதி. ஹனிமூன் சென்ற இடத்தில் மனைவியிடம் வேற மாதிரி சாகசத்தைக் காட்டியி ருக்கிறார் புதுக்கணவர். விளைவு, மலையுச்சியிலிருந்து செல்ஃபி எடுக்க முயன்ற போது கீழே விழுந்து உடல்கூடக் கிடைக்க வில்லை.

விபத்துகள்கூடப் பரவாயில்லை. ஓர் இரவு முழுவதும் செல்ஃபி எடுத்திருக்கிறார் ஒரு பெண். ஒன்றுகூடப் பிடிக்காததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுவிட்டார்.

உலகம் முழுவதும் அருங்காட்சியகங்கள் செல்ஃபி என்றாலே பதறுகின்றன. “திருடர்கள நாங்க பாத்துக்கிறோம்... கடவுளே, செல்ஃபி எடுக்கிறவங்ககிட்ட இருந்து எங்கள காப்பாத்து” என்கிறார்கள்.  செல்ஃபி ஸ்டிக் நீளம் பல அடிகள் வரை நீள்வதால் இன்னும் பிரச்னை அதிகரிக்கிறது. பெரும்பாலான அருங்காட்சிய கங்களில் செல்ஃபி தடை செய்யப்பட்டிருக்கிறது.

ஆன் லைன்... ஆஃப் லைன் - 3

புகைப்படங்கள் முக்கியமானவை. காலத்தை நிறுத்தி வைக்கும் மேஜிக். ஆனால் நாம் அந்த மேஜிக்கை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் கேள்வி. தங்கையின் திருமணத்தன்று கேமராமேனை எதற்கு வைக்கிறோம்? நாம் நிகழ்வை ரசித்திருக்க, அவர் அந்தக் கணத்தைப் படம்பிடிப்பார். விரும்பும்போதெல்லாம் அதைப் பார்த்து ரசிக்கலாம். ஆனால், ‘ஸ்மார்ட்போன்’ பயனர்கள் என்ன செய்கிறார்கள்? நிகழ்வு நடக்கும்போதே அதை கேமராக் கண்களில்தான் பார்க்கிறார்கள். நிஜத்தையே ரசிக்காதவர்களா நிழலைப் பார்த்துப் பார்த்து ரசிக்கப் போகிறார்கள்?

ஆன் லைன்... ஆஃப் லைன் - 3

உங்கள் மொபைலில் இப்போதிருக்கும் செல்ஃபிகளை எடுத்துப் பாருங்கள். எத்தனை இருக்கின்றன? எதற்காக எடுக்கப்பட்டவை? நான் இதை இப்போது சொல்லாதிருந்தால் அந்த செல்ஃபிகளை நீங்களாக எப்போதாவது பார்த்தி ருப்பீர்களா? இல்லை யெனில் எதற்காக அதை எடுத்தீர்கள்?

செல்ஃபியும் ஒருவிதக் கலை என்கிறார்கள். கண்டி ஷன்ஸ் அப்ளையோடு அதை ஏற்கவும் செய்யலாம். ஆனால், அதை அதன் அழகோடு செய்வதைவிட அறிவோடு செய்வது அவசியம். முன்பெல்லாம் பிரபலங்களைக் கண்டால் அதற்கு ‘நான் சாட்சி’ எனச் சொல்லவாவது ஆட்டோகிராப் வாங்கினோம். இப்போது செல்ஃபிதான். ஆனால், அதை எடுப்பதற்குள் அவர்களை என்ன பாடுபடுத்துகிறோம்? அதுவும் சுமாரான கேமரா என்றால் அந்தப் பிரபலத்தின் இமேஜே காலி. ``இவன் இப்படித்தான் இருப்பானா... சினிமால மேக்கப்பா?” என ஒற்றை கமென்ட்டில் காலி செய்துவிடுவார்கள் நெட்டிசன்கள்.

ஆன் லைன்... ஆஃப் லைன் - 3

செல்ஃபி எடுப்பதற்காகவே மொபைல்களைக் கொண்டு வர ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் செல்ஃபிகளே எடுக்கக்கூடாது என்றால் நம்மை “ஸ்மார்ட்” இல்லையெனச் சொல்லிவிடுவார்கள். ஆனால், செல்ஃபிகளை ஸ்மார்ட்டாக எடுப்பது எப்படியெனச் சொல்லலாம்.

1) எங்கு? நீங்கள் எங்கு நின்று செல்ஃபி எடுக்கிறீர்கள் என்பதுதான் முதல் பாயின்ட். ஆபத்தான இட மென்றால் அந்த செல்ஃபியே நம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஆகிவிடலாம். மருத்துவமனைகள், அருங்காட்சியகங்கள், தடை செய்யப்பட்ட இடங்களில் நோ செல்ஃபி.

ஆன் லைன்... ஆஃப் லைன் - 3

2) எதற்கு? இந்த செல்ஃபி உங்களுக்காகவா, சோஷியல் மீடியாவில் பகிரவா, அல்லது கண்ணாடிக்குப் பதில் செல்ஃபியில் உங்களைப் பார்க்கிறீர்களா? எந்தக் காரணமும் இல்லை யென்றால் உடனடியாக செல்ஃபி அடிக்‌ஷனுக்கு மருத்துவரைப் பாருங்கள்.

3) யார்?
உங்களைத் தவிர வேறு யாராவது திரைக்குள் வந்துவிட்டார்களா? அவர்கள் அனுமதியின்றி நாம் எடுப்பது சரியா?

4) எப்படி? செல்ஃபி எடுப்பது என முடிவெடுத்துவிட்டால் அதைச் சரியாகச் செய்யுங்கள். தெரியாத நபருடன் செல்ஃபி என்றால் அவரை ஒட்டாமல் நின்று எடுங்கள். முகத்தை அருகில் வைத்துக் கொண்டு பேசுகிறேன் என எச்சில் தெறிப்பவர்கள் நிறைய பேர்.

ஆன் லைன்... ஆஃப் லைன் - 3

5) கடைசியாக, எடுக்கப்பட்ட செல்ஃபிகளை அவ்வப்போது (தேவை யென்றால்) பேக்கப் எடுத்துக்கொண்டு மற்றவற்றை டெலிட் செய்துவிடுங்கள். இரண்டு பேர் சேர்ந்து எடுக்கும் அந்தரங்க செல்ஃபிகள் பின்னர் பலரின் வாழ்க்கை யையே புரட்டிப் போட்டிருக்கின்றன.

செல்ஃபிகள் மகிழ்ச்சியான தருணங்களை மீண்டும் ரசிப்பதற்காக வந்தவை. வருத்தப்படுத்துபவையாக அவற்றை மாற்றி விடக் கூடாது. எடுக்கச் சொல்பவற்றை யெல்லாம் மொபைல் ஸ்மார்ட்டாக எடுத்துவிடும். எதை எடுக்கச் சொல்கிறோம் என்பதுதான் நம்மை ஸ்மார்ட் ஆக்கும்.

ஓவியங்கள்: ரமணன்