பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

facebook.com/iam.suriyaraj

நார்த் இந்தியன்ஸ் டு தமிழ் மக்கள்: சும்மா சாக மாட்டேன், கொளுத்திட்டு வந்து உன்னைத்தான் கட்டிப்பிடிப்பேன்! 

facebook.com/karthekarna

பார்க்ல ஒரு கியூட்டான குட்டிப் பாப்பா நடைபழகுது. பார்க்குற லவ்வர்ஸ் கண்ல எல்லாம் அவ்ளோ கனிவு. தெரியும்டா டேய்...

வலைபாயுதே

facebook.com/gkarlmax 

தலைவன் மோடி பண்ணினது தியானம் இல்லையாம்... நமக்குச் செலுத்தின அட்வான்ஸ் மௌன அஞ்சலியாம்...

twitter.com/shivaas_twitz


அரசுப் பேருந்து ஓட்டுநரின் சட்டையில் வைக்கப்படும் பட்டன்கள் எல்லாம் தேவையில்லாத ஆணிகள்... 

twitter.com/meesaikaran


BJP: பிஎம் சப்போர்ட் இல்லாம நீங்க எப்படி அஞ்சு வருஷம் இருக்கப்போறீங்க?

TN peoples:  நாங்க சிஎம் சப்போர்ட் இல்லாமலேயே மூணு வருஷம் இருந்துட்டிருக்கோம்... போவியா...

வலைபாயுதே
வலைபாயுதே

twitter.com/karambakkattaan

சிகரெட் பிடிக்காதவனுக்கு கேன்சர் வந்த மாதிரி இருக்கு தமிழ்நாட்டோட நிலைமை! 

twitter.com/manipmp

`டி.வி-யை ஆஃப் பண்ணிட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு ஆன் செய்தா, நாம சப்போர்ட் பண்ற அணி ஜெயிச்சிருக்கும்’ என்பது 90’ஸ் கிட்ஸ்-ன் டெக்னிக்.

twitter.com/navin_iv

`தக்காளி கிலோ 60 ரூபா.’
இதெல்லாம் முன்னாடி செய்தியாகும்; எதிர்க்கட்சிகள்லாம் போராட்டம் செய்வாங்க;  விகடன்ல, தங்கம் வாங்கப் போனவர் தக்காளி வாங்கிட்டு வந்த ஜோக் ஒண்ணு மூணு இடத்துல வரும்.
எல்லாம் மாறிடிச்சில்ல. :( 

வலைபாயுதே

twitter.com/selvachidambara

நல்லவேளை அய்யா வைகோ அவர்களின் சென்டிமென்ட் உடைந்திருக்கிறது. ஒருவேளை அது தொடர்ந்திருந்தால், வைகோவே அதை நம்பியிருப்பார்.

twitter.com/kanapraba

`ஒரே மாதிரி இசையமைக்கிறார்’ என்று ஹாரிஸ் ஜெயராஜைப் பழித்தோம் ஒரே மாதிரி பாடும் சித் ஸ்ரீராமைக் கொடுத்தார் கடவுள்.

- சைபர் ஸ்பைடர்