மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

அதை சீக்கிரம் கத்துக்காதீங்க!

##~##

எஸ்.வினோத்குமார், சென்னை-12.

முன்பெல்லாம் எந்த ஆபீஸில் நுழைந்தாலும் முதலில் கண்ணில்படுபவர் - காதுகளில் வயர்களைச் செருகிக் கொண்டு அமர்ந்து இருக்கும் டெலிபோன் ஆபரேட்டர். இப்போது அவர்கள் காணாமல் போய்விட்டார்களே?

இன்னும் இருக்கிறார்கள். ஆனால், டெக்னா லஜி மாறிவிட்டது. 'முன்பெல்லாம் ஆபீஸில் 'அக்கவுட்டன்ட்’டுக்கு அக்கவுன்ட்ஸ் மட்டும்தான் தெரியும். டெக்னிக்கல் பணியாளருக்கு டெக்னிக் கல் விஷயம் மட்டும்தான் தெரியும். டெலிபோன் ஆபரேட்டருக்கு மட்டும் ஆபீஸில் நடக்கிற எல்லாமே தெரியும்’ என்று ஒரு ஜோக் உண்டு. மொபைல் போன் வந்தவுடன் டெலிபோன் ஆபரேட்டர்கள் அந்தத்

ஹாய் மதன் கேள்வி - பதில்

'தகுதி’யை இழந்துவிட்டது உண்மை!

க.யுவராஜ், திண்டுக்கல்.

இன்லேண்ட் லெட்டரில் உங்களுக்குக் கேள்விகள் எழுதி அனுப்பலாமா?

போஸ்ட் கார்டுதான் சீப் அண்ட் பெஸ்ட். அடுக்கிவைத்து, ஒவ்வொன்றாகப் பார்ப்பது சுலபம். தவிர, நான் வசிப்பது கடற்கரை ஓரமாக உள்ள சென்னை நகரம் என்பதால், இன்லேண்ட் லெட்டர்கள் வந்து சேருமா என்கிற 'டவுட்டு’ எனக்குக் கொஞ்சம் உண்டு!

எம்.சௌந்தரி, சென்னை-31.

எப்போதும் (நான்) மகிழ்ச்சியாக இருக்கச் சுலபமான வழி சொல்லுங்க மதன்?

மகிழ்ச்சி என்பதும் ஒரு மாயை. அந்த மாயையை எந்தக் கேள்வியும் கேட்காமல் ஜஸ்ட் அனுபவிக்க வேண்டும். அதாவது, 'நான் உண்மையில் சந்தோஷமாக இருக்கிறேனா?’ என்று உங்களைப் பார்த்து நீங்களே கேள்வி கேட்டுக்கொண்டால்... போச்சு!

வி.குமரன், மதுரை.

காதலைப் பற்றி தத்துவம் என்ன சொல்கிறது?

தத்துவத்துக்கு 'எமோஷன்’ கிடையாது! ஆனால், காதலுக்குத் தத்துவம் உண்டு! காதல் - முட்டாளுக்குப் பிடிக்கும் ஞானம். ஞானிகளுக்கு ஏற்படும் முட்டாள்தனம்! (மற்றவை - நான் மேலும் சிந்தித்த பிறகு!)

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஏ.ஆர்.சாதிக், திருச்சி.

அறிவுக்குத் தந்தை - அனுபவம். அப்படியென்றால் தாய்?

திருமதி ஞாபகம்!

ஹாய் மதன் கேள்வி - பதில்

யு.எம்.சஜ்ஜன், கோயம்புத்தூர்.

ஒரு வேலைக்காக இன்டர்வியூ போகப் போகிறேன். முக்கியமான டிப்ஸ் ஒன்றாவது தர முடியுமா?

முக்கியமான விஷயம் - பதற்றப்படாதீர்கள். ஒரு இன்டர்வியூவில் இளைஞரிடம் 'முப்பது வயசு... கல்யாணமாகவில்லை... நீங்கள் ஹோமோ செக்ஸ் இல்லையே?’ என்று கேட்டார் அதிகாரி. இளைஞர் பதற்றத்துடன் 'இல்லை சார். ஆனா, எதுவானாலும் என்னால சீக்கிரமே கத்துக்க முடியும்!’ என்று பதில் சொல்லி விட்டார்.

ல.குஞ்சிராம், செகந்திராபாத்.

பறவையான கிளி கூடப் பேசுகிறது. நமக்கு

ஹாய் மதன் கேள்வி - பதில்

நெருக்கமான சிம்பன்ஸி போன்ற குரங்குகளை ஏன் பேசவைக்க முடியவில்லை?

உண்மையில் குரங்கால் பேச முடியும். ஆனால், அந்தத் திறமையை அது படு ரகசியமாக வைத்துக்கொண்டு இருக்கிறது. வெளியே தெரிந்தால் எல்லா ஆபீஸ்களிலும் தன்னை வேலைக்கு வைத்துக்கொள்வார் கள் என்று குரங்குக்கு ரொம்பப் பயம் உண்டு. கடைசியாகப் பேசியவர் அனுமார் மட்டும்தான். உடனே, அவருக்கு முக்கிய வேலை தரப்பட்டது என்பது உங்களுக்கே தெரியும்!

சந்தியா கிருஷ்ணன், புதுவை.

ஒரே மனிதன் 'இரு மனிதர்’களாக மாறும் Split Personality என்கிற மனநோயைக் குணப்படுத்த முடியுமா?

நோயின் தீவிரத்தைப் பொறுத்து பெருமளவு கட்டுப்படுத்த முடியும். ஆனால், 'பர்சனாலிட்டி’க்கு ஒருவர் என்று இரண்டு டாக்டர்கள் வருவார்கள். Bill இரண்டு வரும்! (அட, சீரியஸா எடுத்துக்காதீங்க!)

ஐ.ஜார்ஜ், சென்னை-7.

அநேகமாக எல்லா ஹாலிவுட் நடிகைகளுமே ப்ளேபாய் இதழின் (புகழ்பெற்ற) நடுப் பக்கத்தைத் திறந்த மேனியோடு அலங்கரித்தவர்கள்தான் என்கிறார் என் நண்பர்?

எல்லோரும் கிடையாது. ஆனால் பலர்! அதற்குப் பல லட்சம் டாலர்கள் கொடுப்பார்கள். டயானா ரிக் என்கிற நடிகையை அதற்காகக் கேட்டார்கள். அவர் மறுத்துவிட்டுச் சொன்ன குறும்பான காரணம், 'நடுப்பக்க போட்டோ என்றால், அதில் என் தொப்புளுக்குக் கீழே 'Pin’ அடிப்பார்கள். அது எனக்குப் பிடிக்கவில்லை!’