சினிமா
தொடர்கள்
Published:Updated:

கடிதங்கள்: ஸ்பெஷல் மீல்ஸ் பார்டல்!

கடிதங்கள்: ஸ்பெஷல் மீல்ஸ் பார்டல்!
News
கடிதங்கள்: ஸ்பெஷல் மீல்ஸ் பார்டல்!

கடிதங்கள்: ஸ்பெஷல் மீல்ஸ் பார்டல்!

கடிதங்கள்: ஸ்பெஷல் மீல்ஸ் பார்டல்!

ட்டையை அலங்கரித்த ‘தல’ அஜித்தின் படம் செம கெட்டப். வழக்கறிஞர் உடையில் அவரைப் பார்த்ததும் கோடையில் சாரலடித்ததுபோல இருந்தது!
- கே. இந்து குமரப்பன், விழுப்புரம்.

ரிந்துரையில் ஃபேஷனா என்று ஆச்சர்யத்தோடு படித்தேன். அதில் ஆண்களுக்கும் ஒரு பத்தி ஆலோசனை சொன்ன பெருந்தன்மைக்கு நன்றிங்கோவ்!
- மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

டாக்டர் கு.சிவராமனின் இன்னா நாற்பது இனியவை நாற்பது தொடர் என்னா அருமை... என்னா இனிமை! படித்து உணர்ந்து, செயல்படுத்த வேண்டிய எழுத்து!
- விஜயலட்சுமி சிவசங்கரன், சென்னை 87.

வி
யாழன் வந்தாலே ஆனந்தவிகடனின் சோறு முக்கியம் பாஸைப் படிக்காமல் வயிறும் மனமும் நிறையாது. சின்னச் சின்ன கடைகளையும் சிரத்தையோடு தேர்ந்தெடுத்து  அவற்றின் சிறப்பை எழுத்தின் வழியே எங்களுக்கு ஊட்டிய வெ.நீலகண்டனுக்கு ஒரு ஸ்பெஷல் மீல்ஸ் பார்சல்!
- வெங்கட், பெங்களூரு.

யிலன். ஜி. சின்னப்பனின் அன்நோன் சிறுகதை அபாரம்! பல வரிகள் மனதை விட்டு அகல மறுக்கின்றன.
- என். பாலகிருஷ்ணன், மதுரை.

`சொல்வனம்’ பகுதியின் மழை விற்பவன் கவிதை காட்சிகளாக மனதில் விரிந்து குளுமையாக்கியது!
- கி.தா.துரைசாமி, மேட்டுப்பாளையம்.

க்கன் வீடு குறித்த கட்டுரையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் படித்து அவரின் மகனது கோரிக்கையைப் பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன்.
- கருணாகரன், சென்னை.

சென்ற வார ஆனந்த விகடன் இதழில் வெளியான கிரிஷ் கர்னாட் அஞ்சலிக் கட்டுரையில்  ‘1986ஆம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘துக்ளக்’ நாடகத்தை அரங்கேற்றினார் 26 வயதான கிரிஷ் கர்னாட்’ என்ற தகவல் தவறானது. `நேரு இறந்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு, 1966-ல் அரங்கேற்றப்பட்டது ‘துக்ளக்’ நாடகம். அப்போது கர்னாட் வயது 28. அந்தக் காலகட்ட அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட நாடகம் ‘துக்ளக்’ என்பதே சரியானது. தவற்றுக்கு வருந்துகிறோம்.