Published:Updated:

ஒற்றை யானை... இரண்டு மாநிலம்... ஆறு உயிர்கள்! - மிரளும் தேவாரம் மக்கள்

ஒற்றை யானை... இரண்டு மாநிலம்... ஆறு உயிர்கள்! - மிரளும் தேவாரம் மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஒற்றை யானை... இரண்டு மாநிலம்... ஆறு உயிர்கள்! - மிரளும் தேவாரம் மக்கள்

ஒற்றை யானை... இரண்டு மாநிலம்... ஆறு உயிர்கள்! - மிரளும் தேவாரம் மக்கள்

Published:Updated:

ஒற்றை யானை... இரண்டு மாநிலம்... ஆறு உயிர்கள்! - மிரளும் தேவாரம் மக்கள்

ஒற்றை யானை... இரண்டு மாநிலம்... ஆறு உயிர்கள்! - மிரளும் தேவாரம் மக்கள்

ஒற்றை யானை... இரண்டு மாநிலம்... ஆறு உயிர்கள்! - மிரளும் தேவாரம் மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஒற்றை யானை... இரண்டு மாநிலம்... ஆறு உயிர்கள்! - மிரளும் தேவாரம் மக்கள்

மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டியுள்ளப் பகுதிகளில் மனித – வன உயிரின மோதல்கள் அடிக்கடி நிகழும். தேனி மாவட்டம் தேவாரமும் இப்படியொரு பகுதிதான். தண்ணீர் தாராளமாகக் கிடைப்பதால் வாழை, தென்னை, மா, முந்திரி, மரவள்ளிக்கிழங்கு எனச் செழிப்பான விவசாய பூமி இது. ஆனால், ஒரே பிரச்னை... பக்கத்திலுள்ள காட்டிலிருந்து கூட்டம் கூட்டமாகக் கிளம்பிவரும் யானைக் கூட்டம்தான்!

கடந்த ஏழாண்டுக்கும் மேலாக ஒற்றைக் காட்டுயானை ஒன்று, பயிர்களை மட்டுமன்றி மனித உயிர்களையும் சாய்த்து விவசாயிகளை வேதனையில் வாட்டுகிறது. தமிழகம், கேரளம் என இரு மாநில எல்லைகளிலும் சேர்த்து இதுவரை ஒரு சிறுவன் உட்பட ஆறு பேர் அந்த ஒற்றை யானையின் தாக்குதலுக்குப் பலியாகியுள்ளனர்.

ஒற்றை யானை... இரண்டு மாநிலம்... ஆறு உயிர்கள்! - மிரளும் தேவாரம் மக்கள்

தேவாரம் மலையடிவாரத்தில் விவசாயம் செய்துவரும் பழனியிடம் இதுகுறித்துப் பேசியபோது, ‘‘அந்த ஒற்றைக் காட்டு யானை, தமிழக கேரள எல்லையான ராசிமலை பகுதியிலுள்ள பள்ளத்தாக்கில்தான் இருக்கிறது. அங்கிருந்து தினமும் கிளம்பி வந்து என்னுடைய தோட்டத்தைக் கடந்து கோம்பை வழியாக பொட்டிபுரம்புதூர் மலை வரை செல்லும். இதனாலேயே மாலை ஆறு மணிக்கு மேல் இங்கே யாரும் இருக்க மாட்டார்கள். நான் புளியமரத்தில் 20 அடி உயரத்தில் டென்ட் அமைத்து வாழ் கிறேன். என் குடும்பம் இந்த யானைக்குப் பயந்து தேவாரத்தில் வீடு எடுத்திருக்கிறார்கள். இரண்டு நாளுக்கு முன்னர்தான் பக்கத்துத் தோட்டத்தில் ஒருவரை யானை மிதித்துக் கொன்றது” என்றார்.

அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மண்டலச் செயலாளர் திருப்பதி வாசகன், ‘‘மலையடிவாரம் தாண்டி மீனாட்சிபுரம் பெட்ரோல் பங்க் வரை ஒற்றை யானை வருகிறது. தினமும் இரண்டு மூன்று தென்னை மரங்களை முறித்துவிடுகிறது. முன்பெல்லாம் மா, தென்னைத் தோட்டங்களில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு இரவில் மலையேறி கேரளத்துக்குப் போய்விடும். ஆனால், கடந்த மூன்றாண்டுகளாக அடிவாரத்திலேயேதான் இரவு பகலாக முகாமிட்டிருக்கிறது. காரணம்... கேரளப் பகுதிகளில் உணவகம் மற்றும் சொகுசு விடுதிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இவற்றைச் சுற்றிலும் மின் வேலி அமைத்திருக்கிறார்கள். இந்த யானையால் அவற்றைக் கடந்து செல்ல முடியவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில், மலையடிவாரத்திலிருந்த நூற்றுக்கணக் கான ஏக்கர் விவசாய நிலங்கள் கேரள முதலாளிகளின் வசம் போய்விட்டன. மீதமுள்ள நிலங்களையும் விலைக்குக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சிலர் நிலத்தைக் கொடுக்க மறுக்கிறார்கள். நில உரிமையாளர்களிடமிருந்து நிலத்தைப் பறிக்க யானை பயத்தைக் காட்டலாம் என்று நினைத்து இந்த ஒற்றை யானையைத் திட்டமிட்டு இங்கே துரத்திவிடுகிறார்களோ என்ற சந்தேகமும் எங்களுக்கு இருக்கிறது!’’ என்று அதிர்ச்சிக் குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

வழக்கமாக மக்னா யானைதான் (தந்தம் இல்லாத ஆண் யானை) இப்படி மனிதர்களை அதிகமாகத் தாக்கும். ஆனால், இது பெண் யானை என்பதுதான் ஆச்சர்யம். இந்த யானை தாக்கி பலியான ஆறு பேரில் மூவர் கேரள மாநிலத்துக்கு வேலைக்குச் சென்ற தமிழர்கள். 2017, 2018, 2019 எனத் தொடர்ச்சியாக இந்த மூன்று ஆண்டுகளிலும் ஜூன் மாதத்தில்தான் இவர்கள் வரிசையாகப் பலியாகியுள்ளனர். இதனால் ஜூன் மாதத்தைக் ‘கறுப்பு ஜூன்’ என்கிறார்கள் தேவாரம் மக்கள்.

ஒற்றை யானை... இரண்டு மாநிலம்... ஆறு உயிர்கள்! - மிரளும் தேவாரம் மக்கள்

கடந்த 2018 ஜூன் 11-ம் தேதி இந்த யானை தாக்கி சேகர் என்பவர் இறந்ததும் மக்கள் கொந்தளித்துப் போராட்டம் நடத்தினர். மக்களைச் சமாதானம் செய்ய முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்து கலீம், மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன. அந்த கும்கி யானைகள் வந்தும்கூட இந்த ஒற்றை யானையைத் துரத்தமுடியவில்லை. இந்த நிலையில், கும்கி யானைகளுக்கும் விவசாயிகளே உணவு, தண்ணீர் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நொந்து போன விவசாயிகள், துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸிடம் முறையிட்டனர். அவரது உத்தரவின்பேரில் கடந்த செப்டம்பரில் வசீம், விஜய் என்ற இரண்டு கும்கி யானைகள் மீண்டும் தேவாரம் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டன. அவற்றாலும் ஒற்றை யானையைப் பிடிக்க முடியவில்லை. எனவே, இரண்டு யானைகளும் திரும்பிவிட்டன. இதற்குப் பின் யானையைப் பிடிக்க வனத்துறை சார்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் கெளதமிடம் பேசியபோது, ‘‘அந்த ஒற்றை யானையோடு மக்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அதுதான் தேவாரம் பகுதி மக்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது’’ என மிகவும் ‘பொறுப்பாக’ பதிலளித்தார்.

- எம்.கணேஷ்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி