Published:Updated:

ஆசிரியர் தகுதி தேர்வில் நீடித்து வந்த குழப்பம் - கால அவகாசத்தை நீட்டித்த தேர்வு வாரியம்

தமிழ்நாடு அரசின் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்கும் அறிவிப்பினை கடந்த பிப்ரவரி மாதம் 28 -ம் தேதி வெளியிட்டது. அதன்படி, மார்ச் மாதம் 15 முதல் ஏப்ரல் 5 வரை  http://trb.tn.nic.in எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தது. 2013 -ம் ஆண்டிலிருந்து 2017 -ம் ஆண்டு வரையில் இந்தத் தேர்வு நடத்தப்படாததால், ஏராளமானவர்கள் இதில் விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக, இதற்கான இணையதளத்தின் சேவை சரியாக இல்லை என்ற புகார் எழுந்தது. குறிப்பாக, விண்ணப்பிப்பவர் அளிக்கும் மின்னஞ்சல் வழியே ஒரு பாஸ்வேர்டு (OTP) வரும். அதைப் பதிவு செய்தாலே விண்ணப்பம் செய்வதன் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும். ஆனால், கடந்த ஐந்து நாள்களாக அந்த பாஸ்வேர்டு பலருக்கும் வரவில்லை என்பதால் குழப்பத்தின் உச்சத்துக்குச் சென்றனர் விண்ணப்பித்தவர்கள்.

இந்த நிலையில், தமிழ்நாடு தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாளை ஏப்ரல் 5 -ம் தேதியிலிருந்து ஏப்ரல் 12  ஆகா நீட்டித்துள்ளது.