உங்கள் வீட்டில் பழைய பயன்படுத்தாத சாக்ஸ்கள் நிறைய இருக்கின்றவா? அவற்றையெல்லாம் வீட்டை அலங்கரிக்கும் பொருள்களாக மாற்றும் வகையில் எளிமையான கிராஃப்ட் செய்யக் கற்றுக்கொடுக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஷோபனா.

சாக்ஸ் பவுச்

தேவையான பொருள்கள்:
சாக்ஸ் - 1
கத்தரிக்கோல்
ஃபெவிக்கால்
டெகரேஷன் பாசிகள்
ரன்னர் (ஜிப்)
ரப்பர் பேண்ட் - 2
செய்முறை:
ஸ்டெப் - 1
சாக்ஸின் வாய்ப்பகுதிக்குக் கீழ் இருக்கும் வளைவு கோட்டில் சாக்ஸைக் கத்தரித்துக்கொள்ளவும்.
ஸ்டெப் - 2

சாக்ஸை உட்புறமாகத் திருப்பிக்கொள்ளவும்.
ஸ்டெப் - 3
சாக்ஸின் நடுப்பகுதியில் ரன்னரை ஒட்டி, ஒரு மணிநேரம் காயவிடவும்.

ஸ்டெப் - 4

சாக்ஸின் மீது ரன்னர் நன்றாக ஒட்டி காய்ந்த உடன், ரன்னரைத் திறந்து மூடி, பயன்படுத்தும் விதமாக ரன்னருக்கு நடுவில் இருக்கும் சாக்ஸ் பகுதியினை கட் செய்து விடவும்.
ஸ்டெப் - 5
மீண்டும் வெளிப்புறமாகத் திருப்பிக்கொள்ளவும்.
ஸ்டெப் - 6

உங்களுக்குப் பிடித்தாற் போல் டெகரேட் செய்து கொள்ளவும். அவ்வளவுதான் சாக்ஸ் பவுச் ரெடி.
சாக்ஸ் ஸ்நோ மேன்
தேவையானவை:
சாக்ஸ் -1 (வெள்ளை நிறம்)
கத்தரிக்கோல்
ஃபெவிக்கால்
ரப்பர் பேண்ட்- 3
கிஃப்ட் ரிப்பன் - அரை மீட்டர்
ரெக்கரேஷன் பாசிகள்
குண்டூசி
அரிசி - ஒரு கப்

செய்முறை:
ஸ்டெப் - 1
சாக்ஸில் அரசியை நிரப்பிக்கொள்ளவும்.

ஸ்டெப் -2
சாக்ஸ் பெரியதாக இருந்தால் அரிசி நிரப்பியது போக மீதம் இருக்கும் பகுதியை கட் செய்து கொள்ளவும்.
ஸ்டெப் - 3
அரிசி வெளியே வராமல் இருக்க சாக்ஸின் வாய்ப்பகுதியில் ரப்பர் பேண்ட் போட்டு கட்டிக்கொள்ளவும்.

ஸ்டெப் - 4
அரிசி நிரப்பியுள்ள சாக்ஸின் நடுப்பகுதியில் ரப்பர் பேண்ட் போட்டுக்கட்டி தலைப்பகுதியைத் தனியாகவும், உடல் பகுதியைத் தனியாகவும் பிரித்து, கிப்ஃட் ரிப்பன் ஒட்டிக்கொள்ளவும்.

ஸ்டெப் - 5
நாம் கட் செய்து வைத்த சாக்ஸின் ஒரு பகுதியை ஸ்நோ மேனின் தலைப்பகுதியில் குல்லா போன்று மாட்டிவிடவும்.
ஸ்டெப் - 6
டெகரேஷன் பாசிகளில் குண்டுசிகளை மாட்டி ஸ்நோ மேனுக்கு கண்கள், மூக்கு ஒட்டி அலங்கரித்துக் கொள்ளவும்.

உங்கள் வீட்டு அலமாரியை அலங்கரிக்கும் சாக்ஸ் ஸ்நோ மேன் தயார்.
சாக்ஸ் முயல்
தேவையானவை:
சாக்ஸ் - 2 (கலர் சாக்ஸ்)
கூக்ளி ஐஸ்
ஸ்கெட்ச் - 1
நூல்
ஊசி
ஃபெவிக்கால்
காட்டன் பஞ்சு
செய்முறை:
ஸ்டெப் - 1
சாக்ஸில் உள்ள வளைவுப்பகுதியில் மேற்புறமாகத் தூக்கி சாக்ஸை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளவும்.

ஸ்டெப் - 2
சாக்ஸை உட்புறமாகத் திருப்பி படத்தில் காட்டியுள்ள படி கை, கால்கள் வரைந்து கொள்ளவும்.

ஸ்டெப் - 3
வரைந்துள்ள கோட்டின் மீதே ஊசி பயன்படுத்தி தைத்து காட்டன் பஞ்சினை நிரப்ப்பிக் கொள்ளவும்.
ஸ்டெப் - 4
பஞ்சு வெளியே வராமல் இருக்க சாக்ஸின் வாய்ப்பகுதியை நூல் வைத்துத் தைத்துவிடவும்.
ஸ்டெப் - 5

பொம்மையின் உடல் பகுதி தயார்.
ஸ்டெப் - 7
மற்றொரு சாக்ஸில் வாய்ப்பகுதியை தனியே கத்தரித்துக் கொள்ளவும்.
ஸ்டெப் - 8
சாக்ஸை உட்புறமாகத் திருப்பி காதுகள் வரைந்து அந்தக் கோட்டின் மீதே தைத்துக்கொள்ளவும்.
ஸ்டெப் - 9

சாக்ஸை வெளிப்புறமாகத் திருப்பி காட்டன் பஞ்சை நிரப்பவும்.பஞ்சு வெளியே வராமல் இருக்க வாய்ப்பகுதியை நூலால் தைக்கவும்.
ஸ்டெப் - 10
மொம்மையின் உடல்பகுதியை, தலைப்பகுதியுடன் சேர்த்து தைத்துக்கொள்ளவும்.
ஸ்டெப் -11

கண்கள், மீசை மற்றும் பற்களை ஒட்டி அலங்கரித்தால் அழகான முயல் பொம்மை தயார்.