Published:Updated:

பற்றாக்குறையால் தரமற்ற குடிநீர் விநியோகம்... சுத்திகரிக்க மருத்துவர்கள் கூறும் எளிய வழிகள்!

பற்றாக்குறையால் தரமற்ற குடிநீர் விநியோகம்... சுத்திகரிக்க மருத்துவர்கள் கூறும் எளிய வழிகள்!

நம் முன்னோர் தண்ணீரைச் சுத்தமாக வைக்க சில வழிமுறைகளைப் பின்பற்றினார்கள். அதில் ஒன்று தேற்றான்கொட்டையை நீரில் போட்டுவைப்பது. தேற்றான்கொட்டைக்குத் தண்ணீரைச் சுத்திகரிக்கும் குணம் உண்டு. தண்ணீரைச் சேமித்து வைத்திருக்கும் டேங்க் அல்லது பாத்திரத்தில் இந்தக் கொட்டையைத் தேவையான அளவு போட்டுவைக்க வேண்டும். அப்போது கழிவுகள் மற்றும் உடலுக்கு ஒவ்வாத கனிமங்கள் கீழே படிந்துவிடும். நீர் சுத்திகரிக்கப்படும். இதுபற்றி சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன.

ண்ணீர் பற்றாக்குறை எல்லாப் பகுதிகளையும் சுழற்றியடிக்கிறது. மக்கள் காலிக் குடங்களுடன் தெருத் தெருவாகத் தண்ணீரைத் தேடி அலைகிறார்கள். தூக்கத்தைத் தொலைத்து, நள்ளிரவுகளில் தண்ணீர் லாரிக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. போலீஸ் பாதுகாப்புடன் தண்ணீரை விநியோகிக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. `வண்டல் நீரோ, கலங்கிய நீரோ, கழிவுநீர் கலந்ததோ... எதுவாக இருந்தாலும் பரவாயில்லை... தண்ணீராக இருந்தால் மட்டும் போதும் என்கிற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 
தண்ணீர் எங்கும் இலவசமாகக் கிடைப்பதில்லை. அரசின் சார்பில் வழங்கப்படும் நீராக இருந்தாலும் பணம் கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது. சில இடங்களில் ஒரு குடம் 10 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. மக்களின் தேவையைப் பூர்த்திசெய்ய கல்குவாரிகளில் இருந்து நீரை உறிஞ்சி விநியோகிக்கின்றனர். வெகுதொலைவில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்தும் நீரைப் பெற்று லாரிகள் மூலம் கொண்டுவந்து விநியோகம் செய்கின்றனர். ஆனால், அவை குடிக்கத் தகுதியானவையா, சுத்தமானவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பற்றாக்குறையால் தரமற்ற குடிநீர் விநியோகம்... சுத்திகரிக்க மருத்துவர்கள் கூறும் எளிய வழிகள்!

"தற்போதுள்ள சூழலில் தண்ணீரை எப்படிப் பருக வேண்டும், சுகாதாரமற்ற தண்ணீரைச் சுத்திகரிப்பது எப்படி..?" வழிகாட்டுகிறார் மருத்துவர் எழிலன்.

பற்றாக்குறையால் தரமற்ற குடிநீர் விநியோகம்... சுத்திகரிக்க மருத்துவர்கள் கூறும் எளிய வழிகள்!

``சுத்தமான தண்ணீரைப் பெறுவது மக்களின் உரிமை. உலக சுகாதார நிறுவனம் குடிநீருக்கான தர நிர்ணயத்தை வகுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் குடிநீருக்கான தர நிர்ணயத்தை வகுத்துள்ளது. அந்தத் தரநிர்ணயப்படி குடிநீரை அரசு விநியோகிக்க வேண்டும். 

சுகாதாரமற்ற நீரை அருந்துவதால் எலிக் காய்ச்சல், டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படலாம். பற்றாக்குறை இருப்பதால் கிடைக்கும்போது வாங்கி மக்கள் சேமித்து வைக்கிறார்கள். தண்ணீரைச் சேமித்து வைக்கும்போது அதில் கொசுக்கள் வளர வாய்ப்புண்டு. அதனால் டெங்கு காய்ச்சல் வரலாம்.  

தண்ணீரைச் சுத்திகரித்துக் கொடுக்க `ட்ரிபிள் பில்டர் சிஸ்டம்’ (Triple filter system) என்ற முறை இருக்கிறது. அதன்படி `அல்ட்ரா வயலட் வாட்டர் சிஸ்டஸ்ம்ஸ்’ (Ultraviolet (UV) Water Systems), `பாய்லிங் வாட்டர் சிஸ்டம்’ (Boiling water system), `ஃபில்டரேஷன் வாட்டர் சிஸ்டம்’ (Filtration water system) என மூன்று நிலைகளில் தண்ணீர் சுத்திகரிக்கப்பட வேண்டும். அதன் பிறகு வேண்டுமானால் அந்த நீரை அருந்தலாம். இந்த `ட்ரிபிள் பில்டர் சிஸ்டம்' முறையை எல்லோராலும் வீடுகளில் அமைக்க முடியாது. பாய்லிங் மட்டுமே செய்ய முடியும். 

100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சுமார் 10 நிமிடம் நீரைக் கொதிக்க வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் 99 சதவிகிதம் கிருமிகள் அழிந்துவிடும். அதன்பிறகு அந்த நீரை ஆறவைத்து, வடிகட்ட வேண்டும். இதுவே பாய்லிங். இந்தவகையில் பெறப்படும் நீரை அருந்தலாம். அதுதான் பாதுகாப்பானது” என்கிறார் மருத்துவர் எழிலன். 

பற்றாக்குறையால் தரமற்ற குடிநீர் விநியோகம்... சுத்திகரிக்க மருத்துவர்கள் கூறும் எளிய வழிகள்!

`தண்ணீரைக் காய்ச்சி குடித்தால் போதுமானது’ என்றே சித்த மருத்துவமும் கூறுகிறது. அது இந்தக் காலத்துக்கும் பொருந்துமா, இயற்கை முறையில் தண்ணீரைச் சுத்திகரிக்க வேறு ஏதேனும் வழிமுறைகள் இருக்கின்றனவா' என்று சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் கேட்டோம்.

“தண்ணீர் மிக முக்கியமான உணவு. அது சுகாதாரமானதாக இருக்க வேண்டும். தாராளமாக எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். இதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் ஏதேனும் ஒரு நோயைக் கொண்டுவந்துவிடும். தற்போது தண்ணீர் பற்றாக்குறை காரணமாகக் கிடைக்கும்  நீரைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நிறைய தொற்றுநோய்கள் நீரின் மூலம்தான் பரவும். வாந்தி, பேதி, அம்மை மற்றும் குழந்தைகளுக்கு வரும் கழிச்சல் போன்றவை சுகாதாரமற்ற நீரால் வரக்கூடியவை. 

பற்றாக்குறையால் தரமற்ற குடிநீர் விநியோகம்... சுத்திகரிக்க மருத்துவர்கள் கூறும் எளிய வழிகள்!

ஆர்.ஓ வாட்டர், மினரல் வாட்டர் போன்றவை மட்டுமே குடிக்கத் தகுதியான நீர் என்றே பலரும் நினைக்கிறார்கள். அது மட்டுமே சுத்தமான நீர் கிடையாது. நன்றாகக் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு குடித்தால் அந்த நீரும் சுத்தமான நீர்தான். நிலத்தடி நீர், கிணற்று நீர், குடிநீர் வாரியத்தின் மூலம் கிடைக்கும் நீர் என எதுவாக இருந்தாலும் கொதிக்க வைத்து ஆறவைத்துக் குடித்தால் போதுமானது.  

பற்றாக்குறையால் தரமற்ற குடிநீர் விநியோகம்... சுத்திகரிக்க மருத்துவர்கள் கூறும் எளிய வழிகள்!

குடிநீருக்காக `டோட்டல் டிஸால்வ்டு சாலிட்ஸ்’ (Total dissolved solids - TDS) எனும் அளவீடு இருக்கிறது. வீட்டில் நாம் பருகும் தண்ணீர் ஒரு டி.டி.எஸ் அளவில் இருக்கும். ஆனால், அலுவலகத்தில் இருக்கும் பாட்டில் தண்ணீரில் டி.டி.எஸ் அளவு வேறொன்றாக இருக்கும். போகும் வழியில் தாகமாக இருக்கிறது என்று கடையில் ஒரு வாட்டர் பாட்டிலை வாங்கிக் குடித்தால் அது வேறொரு டி.டி.எஸ் அளவுள்ளதாக இருக்கும். ஒன்றில் 300, மற்றொன்றில் 450, இன்னொன்றில் 260 என மாறி மாறி இருந்தால் அவை உடலுக்குள் சிறிய அளவிலான அழுத்தத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்களிடையே ஒரு கருத்து உண்டு. சிறுநீரக நோய்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள் உருவாக மாறுபட்ட டி.டி.எஸ் அளவீடுள்ள தண்ணீரைக் குடிப்பதும்கூட காரணமாக இருக்கலாம்.

பற்றாக்குறையால் தரமற்ற குடிநீர் விநியோகம்... சுத்திகரிக்க மருத்துவர்கள் கூறும் எளிய வழிகள்!

என்ன செய்யலாம்? 

வீட்டிலிருந்து அலுவலகத்துக்கோ, வெளியூருக்கோ கிளம்பும்போது வீட்டிலிருந்து தண்ணீரை எடுத்துச் செல்வது நல்லது.

பற்றாக்குறையால் தரமற்ற குடிநீர் விநியோகம்... சுத்திகரிக்க மருத்துவர்கள் கூறும் எளிய வழிகள்!

நம் முன்னோர் தண்ணீரைச் சுத்தமாக வைக்க சில வழிமுறைகளைப் பின்பற்றினார்கள். அதில் ஒன்று தேற்றான்கொட்டையை நீரில் போட்டுவைப்பது. தேற்றான்கொட்டைக்குத் தண்ணீரைச் சுத்திகரிக்கும் குணம் உண்டு. தண்ணீரைச் சேமித்து வைத்திருக்கும் டேங்க் அல்லது பாத்திரத்தில் இந்தக் கொட்டையை தேவையான அளவு போட்டு வைக்க வேண்டும். அப்போது கழிவுகள் மற்றும் உடலுக்கு ஒவ்வாத கனிமங்கள் கீழே படிந்துவிடும். நீர் சுத்திகரிக்கப்படும். இதுபற்றி சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன. இந்தத் தண்ணீரையும் கொதிக்க வைத்து, ஆறிய பின்னரே அருந்த வேண்டும். இந்த நீரைச் செம்பு மற்றும் மண் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம். 

எதற்காகக் கொதிக்க வைக்க வேண்டும்?

தண்ணீரில் வைரஸ், பாக்டீரியாக்கள் போன்றவை கலந்து உடலில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. சிலர் தண்ணீரைக் கொதிக்க வைத்தால், அதிலுள்ள உயிர்ச் சத்துகள் போய்விடும் என்று நினைக்கிறார்கள். அது தவறு. கொதிக்க வைப்பதால் தண்ணீரிலுள்ள சத்துகள் நீங்காது. 

ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் ஒரு குணம் உண்டு. தற்போது செம்புப் பாத்திரத்தை அதிக பேர் பயன்படுத்துகின்றனர்; தவறில்லை. ஆனால், அந்தப் பாத்திரத்தை அடிக்கடி கழுவி, பயன்படுத்த வேண்டும்...” என்கிறார் கு.சிவராமன்.