Published:Updated:

"பொன்னியின் செல்வன் கதை கேட்க ரெடியா?" கூகுள் பாட்காஸ்டில் கதை சொல்லும் கவிதா!

"பொன்னியின் செல்வன் கதை கேட்க ரெடியா?" கூகுள் பாட்காஸ்டில் கதை சொல்லும் கவிதா!

"பொன்னியின் செல்வன் கதை கேட்க ரெடியா?" கூகுள் பாட்காஸ்டில் கதை சொல்லும் கவிதா!

"பொன்னியின் செல்வன் கதை கேட்க ரெடியா?" கூகுள் பாட்காஸ்டில் கதை சொல்லும் கவிதா!

"பொன்னியின் செல்வன் கதை கேட்க ரெடியா?" கூகுள் பாட்காஸ்டில் கதை சொல்லும் கவிதா!

Published:Updated:
"பொன்னியின் செல்வன் கதை கேட்க ரெடியா?" கூகுள் பாட்காஸ்டில் கதை சொல்லும் கவிதா!
"பொன்னியின் செல்வன் கதை கேட்க ரெடியா?" கூகுள் பாட்காஸ்டில் கதை சொல்லும் கவிதா!

எம்.ஜி.ஆர் நடிக்க ஆசைப்பட்ட கதை, கமல்ஹாசன் நடிக்க விருப்பட்ட கதை, இயக்குநர் மணிரத்னம் இயக்க நினைத்த கதை... இப்படிப் பலரும் இக்கதையை வெள்ளித்திரைக்குள் கொண்டுவர திட்டமிட்டது எழுத்தாளர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலைத்தான். 1950 முதல் 1955 வரை தொடர்கதையாக வெளிவந்த நாள் முதல் தமிழ் வாசிப்பு உலகில் தனக்கான தனி இடத்தைப் பிடித்துக்கொண்டது இந்நாவல். தமிழக மன்னர்களில் புகழ்பெற்றவரான ராஜராஜ சோழனின் கதையை, தன் அழகான தமிழ் மொழிநடையால் நாவலாக்கியிருப்பார் கல்கி. இன்றுவரை அதிகமாக விற்பனையாகும் புத்தகப் பட்டியலில் தவறாமல் இருக்கும் புத்தகம் பொன்னியின் செல்வன். இதை, கூகுள் பாட்காஸ்ட்டில் ஒலி வடிவில் தந்துகொண்டிருக்கிறார் மும்பையில் வசிக்கும் கவிதா. பொதுவாக ஒலி புத்தகம் என்றால், நூலில் உள்ளவற்றை அப்படியே வாசிப்பார்கள். ஆனால், கவிதா இன்றைய பேச்சு மொழியில் கதையைச் சொல்கிறார். இரண்டு லட்சத்துக்கும் மேல் இது டவுண்லோடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த முயற்சி குறித்து, அவரிடம் பேசினோம். 

"பொன்னியின் செல்வன் கதை கேட்க ரெடியா?" கூகுள் பாட்காஸ்டில் கதை சொல்லும் கவிதா!"எனக்குத் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணிதான் சொந்த ஊர். பொறியியல் படித்ததும் தஞ்சாவூரில்தான். பிறகு, சென்னையில் பத்தாண்டுகளுக்கு வேலை செய்துகொண்டிருந்தேன். அப்போதுதான் திருமணம் நடந்தது. ஆறாண்டுகளுக்கு முன், கணவரின் பணி மும்பைக்கு மாறுதல் கிடைத்தது. அதனால் இங்கே வந்துவிட்டோம். எங்கள் மகனுக்கு சின்ன வயதிலிருந்தே கதைகள் சொல்வது வழக்கம். குறிப்பாக, நான் விரும்பிப் படித்த பொன்னியின் செல்வன் கதை. 

நான் ஏழாம் அல்லது எட்டாம் வகுப்புப் படிக்கும்போதுதான் முதன்முதலாகப் பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தேன். அப்போதே எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை எத்தனை முறை அதைப் படித்திருப்பேன் என்று கணக்கே கிடையாது. 40 முறைகளாகவது முழுமையாகப் படித்திருப்பேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஏதோ ஒரு பகுதி அல்லது வரி புதிய கோணத்தில் தெரியும். அந்த ரகசியம்தான் என்னை மீண்டும் மீண்டும் படிக்க வைக்கிறது. காரில் செல்லும்போது, என் மகனோடு கணவரும் நான் சொல்லும் கதைகளைக் கேட்பார். சில பகுதிகளை மீண்டும் சொல்லும்போதும், புதிதாகக் கேட்பதைப்போல ஆர்வமாகக் கேட்பார். அவர்தான் ஒருமுறை என்னை யூடியூபில் கதைகள் சொல்லச் சொன்னார். நான் அதிகம் சோசியல் மீடியாவைப் பயன்படுத்துவதில்லை என்பதால், அந்த முயற்சியை எடுக்கவில்லை. இப்போது அவரே மீண்டும், 'கூகுள் பாட்காஸ்ட் தமிழில் கதைகள் வருவதில்லை. அதிலாவது நீ கதைகள் சொல்ல ஆரம்பி' என்றார். 

"பொன்னியின் செல்வன் கதை கேட்க ரெடியா?" கூகுள் பாட்காஸ்டில் கதை சொல்லும் கவிதா!இந்த முறை நிச்சயம் முயற்சி செய்துபார்ப்போம் என்று முடிவெடுத்தேன். வழக்கமாக, நாவலின் வரிகளை அப்படியே வாசிக்காமல், இந்தக் கதை அடுத்த தலைமுறைக்குப் போய் சேர வேண்டும். அதற்கான கதையையும் உரையாடலையும் மாற்றாமல் சொல்லும் முறையையும் மொழிநடையையும் மாற்றி, ஒரு பேப்பரில் எழுதிக்கொடுத்தேன். அதைப் படித்த கணவர் நன்றாக இருக்கிறது என்று சொன்னதும், ஆர்வத்தோடு இறங்கினேன். முதலில் ஒரு இன்ட்ரோ கொடுத்தேன். பிறகு ஒவ்வொரு எபிசோட்டாகப் பதிவேற்றி வருகிறேன்" என்ற கவிதாவிடம், கல்கியின் எழுத்தை, ஒலியாக்கும் விதம் குறித்துக் கேட்டோம். 

"இந்தக் கதையின் ஒவ்வொரு பகுதியும் எனக்கு நன்குத் தெரியும். ஆனாலும், ஒவ்வோர் அத்தியாயத்தையும் படித்து, அதில் வரும் உரையாடல்களை அப்படியே பயன்படுத்த வேண்டும் என்பதாக எழுதிக்கொள்வேன். பிறகு, என் பாணியில் அதைச் சொல்லும் விதத்துக்கு ஒரு ஸ்கிரிப்ட் எழுதுவேன். 10 நிமிடங்கள் பேசுவதென்றால் பத்து பக்கங்களுக்காகவது எழுதியாக வேண்டும். அடுத்து, இதற்காகவென்று வாங்கியிருக்கும் மைக்கில் பேசிப் பதிவு செய்வேன். அதில், என் மகன் தேவையான இடத்தில் சில இசைகளைச் சேர்ப்பான். இறுதியாக ஒருமுறை கேட்டுவிட்டு, அப்லோட் செய்துவிடுவேன். இதற்கென கூகுள் பாட்காஸ்டில்  KadhaiPodcast's PonniyinSelvan என்று சேனல் வைத்திருக்கிறோம். இப்போது 46 பகுதிகள் வந்திருக்கின்றன. யூடியூபிலும் பதிவேற்றி வருகிறோம். என் மகன் 10-வது படிப்பதால், அதிகம் அவனைத் தொந்தரவு செய்ய முடியாது" என்றவரிடம், கேட்டவர்களிடமிருந்து விமர்சனம் வந்ததா எனக் கேட்டோம்.

"நிறைய பேர் பேசினார்கள். சிலர் ரொம்ப நெகிழ்ந்துவிடுவார்கள். அவர்களுக்கும் கல்கியின் எழுத்துகளுக்கும் இருக்கும் உறவு பற்றியெல்லாம் பேசுவார்கள். குறிப்பாக, சிறுவர்களும் கேட்கிறார்கள் என்பது சந்தோஷமாக இருக்கிறது. அவர்களால்தானே இந்தக் கதை இன்னும் அதிக காலம் பயணிக்கப்போகிறது. ஒரு சிலர், ஆங்கிலச் சொற்கள் கலந்து, கதை சொல்வது பற்றி எதிர் விமர்சனமாகச் சொன்னார்கள். அவர்களின் உணர்வு புரிகிறது. தமிழ் மீது ஆர்வம் இருக்கும் எல்லோருக்கும் இந்த உணர்வு இருக்கத்தான் செய்யும். அதனால், நான் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலச் சொற்கள் கலந்துபேசுவதைக் குறைத்துக்கொண்டே வருகிறேன். தமிழ் எழுதத் தெரியாமல், பேச மட்டுமே தெரிகிற ஒரு தலை முறை வந்துவிட்டது. அவர்களை மனதில் கொண்டும் கதை சொல்லும்போக்கை அமைத்துவருகிறேன். இப்போது வாரத்துக்கு மூன்று நாள்கள் வெளியிட்டு வருகிறேன். தினமும் ஒரு எபிசோட் என அப்லோட் செய்யுங்கள் எனப் பலரும் கேட்கிறார்கள். வீட்டு வேலைக்கு மத்தியில் அது முடியுமா என்று தெரியவில்லை. முயன்று பார்க்க வேண்டும். 


பொன்னியின் செல்வன் நாவல் முடிந்ததும், சிவகாமியின் சபதம், சாண்டில்யனின் 'கடல் புறா' நாவல் கதையைச் சொல்லுங்கள் எனக் கேட்கிறார்கள். எனக்குமே அந்நாவல்கள் ரொம்பப் பிடிக்கும் என்றாலும், சோழர் காலம் தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன்" என்கிறார் கவிதா. 

பொன்னியின் செல்வன் நாவல் படித்திருக்கிறீர்களா... அப்படியெனில் அதில் இடம்பெற்றுள்ள வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன், குந்தவை, நந்தினி, ஆதித்த கரிகாலர் ஆகியோரில் யாரை உங்களுக்குப் பிடிக்கும் என்பதை கமென்டில் பதிவு செய்யுங்கள்.