Published:Updated:

அதிகரிக்கும் மனித - யானை எதிர்கொள்ளல்..! - மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

மக்களவைக் கூட்டம் நேற்று கூடியபோது மனித காட்டுயிர் எதிர்கொள்ளல் குறித்து கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி அன்டோ அன்டோனியோ கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், கடந்த 2018-ம் ஆண்டில் மட்டுமே 494 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ள தகவலைத் தெரிவித்தனர். 

அதிகரிக்கும் மனித - யானை எதிர்கொள்ளல்..! - மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

மேலும் கடந்த ஐந்தாண்டுகளில் யானை தாக்குதலுக்கு உள்ளாகிச் சுமார் 2,300 பேர் மரணித்துள்ளதாகவும் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சுமார் 200 பேர் இறந்துள்ளதாகவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மக்களவையில் தெரிவித்தது. 

2014-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை மனித-யானை எதிர்கொள்ளல் காரணமாக 2,398 மக்கள் இறந்துள்ளனர். அதில் மேற்கு வங்கத்தில் மட்டுமே 403 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்ததாக நாகாலாந்தில் 397 பேரும் ஜார்க்கண்டில் 349 பேரும் இதனால் உயிரிழந்துள்ளனர். 2017-18-ம் ஆண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 516. அது தற்போது 494 ஆகக் குறைந்துள்ளது. புலிகள்-மனித எதிர்கொள்ளல் காரணமாகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் 224 பேர் இறந்துள்ளனர். அதிலும் மேற்கு வங்கத்தில்தான் இருப்பதிலேயே அதிகமாக, 71 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. புலிகள் தாக்குதலால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டில் 29. அது தற்போது 44 ஆக உயர்ந்துள்ளது. 

அதிகரிக்கும் மனித - யானை எதிர்கொள்ளல்..! - மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

2015 முதல் 2018-ம் ஆண்டுக்குள் 373 யானைகள் இறந்துள்ளன. மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் பிரச்னை இந்தியாவில் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இதனால் ஒவ்வோர் ஆண்டும் நானூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளும் இறந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்னைக்கு மத்திய அரசு உடனடித் தீர்வு காண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதைத் தவிர்த்தால், எதிர்காலத்தில் மனிதர்கள் மற்றும் காட்டுயிர்கள் இருபுறமும் அதிகமான சேதங்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.