Published:Updated:

உயிர் மொழி - 25

உயிர் மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

பெரியார் எனும் ஆல்ஃபா!டாக்டர் ஷாலினி

##~##
போ
ட்டி என்று ஒன்று இருந்தால்தானே, வளமான மரபணுக்களைத் தேர்வு செய்து, ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க முடியும். போட்டியே இல்லை என்றால், அந்த இனத்தின் மரபணுவின் தரம் தாழ்ந்துவிடுமே!

தந்திரம் செய்பவன், சில தில்லுமுல்லு உத்திகளை உபயோகிப்பான். அதில் முதலாவது, 'பெண்கள் இப்படி எல்லாம் ஆண்களைக் கலவிக்காகத் தேர்ந்தெடுப்பது, மகா பாவம். நல்ல குடும்பத்துப் பெண்கள் இப்படி எல்லாம் செய்யவே மாட்டார்கள்’ என்று ஒரு புதுக் கருத்தை முன்வைப்பான். கொஞ்சம் புத்தி உள்ள பெண்ணாக இருந்தால், ''ஏன், சீதைகூடத்தான் ராமனை பலப் பரீட்சைவைத்துத் தேர்ந்தெடுத்தாள். அவள் பத்தினித் தெய்வம் என்றால்... நான் மட்டும் அப்படி செய்யக் கூடாதா?'' என்று கேட்டுவிடுவாள்.

உயிர் மொழி - 25

அதையும் சமாளிக்க, அடுத்த உத்தி. 'பொம்பளைன்னா வாயாடக் கூடாது. எதிர்த்துக் கேள்வி கேட்கக் கூடாது. அடக்க ஒடுக்கமா இருக்கிறதுதான் நல்ல பொண்ணுக்கு அழகு’ என்று சுயமாக யோசிப்பதற்கு ஒரு முட்டுக்கட்டையைப் போட்டுவிட வேண்டியது. இதை நம்பிப் பெண்கள் வாய் அடைத்துக்கிடக்கும்போது, ''பொம்பளை உனக்கு என்ன தெரியும்?'' என இன்னொரு தாழைப் போட்டு, தனக்குப் பிடித்த ஆணைத் தேர்வு செய்யும் உரிமையைத் தடுத்து, எவனையாவது அவள் தலையில் கட்டிவிட வேண்டியது.

இப்படி கட்டாயப்படுத்திக் கட்டிவைத்தும், அவள் அவனோடு வாழ மறுத்துவிட்டால்?

உயிர் மொழி - 25

ம்ஹூம்... கற்பு உள்ள பெண் அப்படி எல்லாம் செய்யவே கூடாது. தெய்வத்தைத் தொழவே இல்லை என்றாலும், கணவனைத் தெய்வம் எனத் தொழும் பெண்கள் ரொம்ப ஸ்பெஷல் சக்திகளைப் பெறுவார்கள். இவள் 'பெய்’ என்றால் உடனே மழை பெய்துவிடும். 'அத்தனை விசேஷ சக்தியைக் கற்பு என்கிற இந்த சமாசாரம் உனக்குத் தரும்’ என்று சொன்னால் கேட்க வேண்டுமா? பெண்களுக்குத்தான் பவர் என்றால் ரொம்பப் பிடிக்குமே!

இவ்வளவு தந்திரங்கள் செய்தும் பெண் மசியவில்லை என்றால், அதற்கும் ஓர் உத்தி கைவசம் இருந்தது. கடவுள் என்கிற பூச்சாண்டி. 'தெய்வம் உன்னைத் தண்டித்து விடும். அப்புறம், அடுத்த ஜென்மத்தில் படாத பாடுபடுவாய்.' இந்த மிரட்டலுக்கும் ஒருத்தியும் மசியவில்லை என்றால், கடைசி ஆயுதமாக இருந்தது, public opinion. இவள் மோசமான பெண், சமூக விதிகளை உடைப்பவள், இஷ்டப்பட்ட ஆணோடு கூடுபவள்... என்று சொன்னால் போதும், அந்தப் பெண்ணுக்கு அதற்கு மேல் பாதுகாப்பே இருக்காது. இப்படித் தங்கள் பாதுகாப்புக்குப் பயந்தே, பல பெண்கள் தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்தும், பலவீனமான ஆண்களின் தந்திர உத்திகளுக்கு அடிபணிந்து போகிறார்கள்.

தலைமைப் பண்புகள் ததும்பி வழியும் ஆல்ஃபா ஆண்களுக்குத்தான் பெண்கள் படிகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமான விஷயம். நிஜமான ஆல்ஃபா ஆண்களுக்கு இதில் எந்தச் சிக்கலும் இல்லை. அவன் சும்மா அவன் வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே போதும், பெண்கள் தாமாகவே வந்து, அவனிடம் ஆஜரானார்கள். ஆனால், நிஜ ஆல்ஃபாத்தனம் எல்லா ஆண்களுக்கும் இருக்காதே. இதைச் சமாளிக்கச் சில ஆண்கள் செயற்கையாகத் தங்களையும் ஆல்ஃபா என்று காட்டிக்கொள்ள முயல்வார்கள். தனக்கு எக்கச்சக்க செல்வாக்கும், அதிகாரமும் இருப்பதாக, ஓவராக பந்தா அடித்துக்கொள்வார்கள். ஆனால், பிரச்னை என்று வரும்போது, புறமுதுகிட்டு ஓடி ஒளிவார்கள். பிரச்னை தானாகத் தீர்ந்ததும், கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல், தன்னால் தான் அது தீர்ந்தது என்று வெட்டி ஜம்பம் வேறு அடித்துக்கொள்வார்கள் இந்தப் போலி ஆல்ஃபாக்கள்.

இன்னொரு வகை ஆண்கள் உண்டு. தாங்கள் ஆல்ஃபாவே இல்லை என்பது இவர் களுக்குத் தெளிவாகத் தெரியும். போலியாக ஆல்ஃபா வேஷம் போடவும் அவர்களுக்கு வராது. அதனால், ஒரு ஆல்ஃபா ஆணின் ஜோதியைக் கடன் வாங்கி, இவர்கள் பிரகாசிக்க முயல்வார்கள். சினிமா ஸ்டாரின் தீவிர விசிறிகள், கட்சித் தலைவரின் தொண்டர்கள், மத குருவின் சிஷ்யகோடிகள், அரசனை பாராட்டிப் பாட்டு எழுதிப் பிழைக்கும் புலவர் கள் என்று செட்டுகள் சேர்வதே இப்படித்தான். சிலர் இதற்கும் ஒரு படி மேலே போய், கற்பனை யில் மிகச் சக்திவாய்ந்த சூப்பர் ஆல்ஃபாவைச் சிருஷ்டித்துவிடுவார்கள். அந்த all powerful ஆல்ஃபாவிடம் இவர்களுக்கு மட்டும் ஏதோ பிரத்தியேக உறவு இருப்பதாகக் காட்டிக்கொண்டு, பொது மக்களின் கோரிக்கைகள் நிறைவேற சிபாரிசு செய்கிறேன் பேர்வழி என்று கதை கட்டிவிட்டே பிழைப்பை நடத்திக்கொள்வார்கள்.

கோயில் பூசாரிகள், ஆவியுடன் பேசும் ஆசாமிகள், குறி சொல்லும் நபர்கள், இவர்கள் எல்லாமே இப்படிக் குறுக்கு வழியில் செகண்ட் ஹாண்ட் ஆல்ஃபா ஆக முயல்பவர்கள்தான்.

உயிர் மொழி - 25

ஆக, கூட்டிக் கழித்துப்பார்த்தால், நிஜ ஆல்ஃபாக்கள், போலி ஆல்ஃபாக்கள், செகண்ட் ஹாண்ட் ஆல்ஃபாக்கள் என மூன்று வகை மனிதர்கள் எல்லாக் காலத்திலும் இருந்து வருகிறார்கள்.

நிஜ ஆல்ஃபாக்கள்... ரொம்பவே ஒரிஜினலாக யோசிப்பவர்கள். அவர்களுக்குப் போட்டியாக யாருமே வர முடியாது. அதனால், 'என் இடத்தை யாராவது அபேஸ் பண்ணிடுவானோ?' என்கிற இன்செக்யூரிட்டி இவர்களுக்கு இருப்பதே இல்லை. அதனால், எல்லோரிடமும் மிக சகஜமாகப் பேசி, அனைவரையும் சரிசமமாக நடத்தும் தன்மை நிஜ ஆல்ஃபாக்களுக்கு உண்டு. இவர்கள் சும்மா இருந்தாலே, இவர்களின் ஒளிவட்டத்தைக்கண்டு எல்லோரும் ஈர்ப்புக்கொள்வார்கள்.

மஹாவீரர் ஆகட்டும், புத்தர் ஆகட்டும், இயேசுகிறிஸ்து ஆகட்டும்... அவ்வளவு ஏன், கடவுளே இல்லை என்று சொன்ன ஈ.வெ. ராம சாமிக்குப் 'பெரியார்’ எனப் பட்டம் சூட்டியதே பெண்கள்தானே. ஆல்ஃபா ஆண் என்றால், பெண்களுக்கு அத்தனை இஷ்டம்!

- காத்திருங்கள்...