என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

##~##

வானிலை அறிவிப்பாளர் பாணியில் சொல்ல வேண்டுமானால், இப் போது சிலிக்கான் வேலி பகுதியில் மிதமானது முதல் கனமானது வரை பண மழை பெய்த படி இருக்கிறது. முதலில் மிதமான மழை.

அலைபேசி கேமராவைப் பயன்படுத்தி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை லேசாக எடிட் செய்து, அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள உதவும் மென்பொருள் இன்ஸ்டாகிராம் (Instagram). பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்த இந்த மென்பொருளின் பயனீட்டாளர்கள் எடுத்து, எடிட்டிய ஈஸ்ட்மென் கலர் படங்கள் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் பகிர்ந்துகொள்ளப்பட ஆரம்பித்து, அதன் மூலம் கிடைத்த வைரல் விளைவு மூலமாகக் கிடுகிடுவெனப் பிரபலமாகத் தொடங்கியது இன்ஸ்டாகிராம்.  

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குள் 10 மில்லியன் பயனீட்டாளர்களைச் சேகரித்த இன்ஸ்டாகிராம், அது வரை ஆப்பிளின் ஐ-போனில் மட்டுமே இயங்கி வந்தது. இந்தத் தளத்தில் கிடைத்திருக்கும் வெற்றி யைக் கருத்தில்கொண்டு ஆண்ட்ராயிடிலும் மென்பொருளை வெளியிட, அதிலும் அமோக வரவேற்பு. வெளியிட்ட முதல் நாளே ஒரு மில்லியன் பயனீட்டாளர்கள் இணைய, இன்ஸ்டாகிராம் என்பது அலைபேசிப் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான ஸ்டாண்டர்டு என்றாகிப்போனது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் டெக்சாஸ் மாநில ஆஸ்டினில் நடக்கும் எஸ்.எக்ஸ்.எஸ்.டபிள்யு. (SXSW) மாநாட்டில், இன்ஸ்டா கிராமின் நிறுவனரான கெவின் சிஸ்ட் ரோம், 'மூன்று வருடங்களுக்கு முன்னால் ஃபேஸ்புக் எப்படி வளர்ந்ததோ, அதே போன்ற வளர்ச்சி இன்ஸ்டாகிராமுக்கு இப்போது இருக்கிறது' என்றார் அதிரடி யாக.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

ஃபேஸ்புக் பெயரை இழுத்துக்கொண் டதில் அர்த்தம் இருக்கிறது. முக்கியமான சமூக ஊடகமாக ஃபேஸ்புக் தன்னை நிலைநிறுத்திக்கொண்டாலும், ஃபேஸ் புக்கின் பயனீட்டாளர்கள் அந்தத் தளத்தைப் பயன்படுத்துவதற்கு முக்கியக் காரணம், புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வது. இந்த மாதக் கணக்கின்படி, நாள் ஒன்றுக்கு 250 மில்லியன் புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் தரவேற்றம் செய்யப்படுகின்றன. கிட்டத்தட்ட 1 பில்லியன் பயனீட்டாளர்களைக்கொண்ட ஃபேஸ்புக்குக்குத் தரமான அலைபேசி மென்பொருள் இன்னும் இல்லை. அலைபேசியில் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்து பவர்களுக்கு இது பரிச்சயமான அனுபவம்தான். ஃபேஸ்புக்கின் அலைபேசி மென்பொருள் இயங்கா மலேயே நின்றுவிடுவது பழகிப்போன ஒன்று. இன்ஸ்டாகிராம் மேட்டருக்கு வருவோம். புகைப் படங்களைப் பகிர்ந்துகொள்ளும் வசதிகொண்ட அலை மென்பொருள் ஒன்று தனக்குப் போட்டியாக உருவாகலாம் என்ற உண்மை புலப்பட ஆரம்பிக்க, இரண்டு வாரங்களுக்கு முன்னால், இன்ஸ்டாகிராமை விலைக்கு வாங்கிவிட்டது ஃபேஸ்புக். விலை, 1 பில்லியன் டாலர்கள்!

1 பில்லியன் டாலர்களுக்கு மதிப்பிடப்பட்டு வாங்கப்பட்டு இருக்கும் இன்ஸ்டாகிராமின் வருமானம் இது வரை என்ன தெரியுமா? ஒரு மிகப் பெரிய பூஜ்யம்!

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

இதுவே மிதமானதா? அப்படி என்றால், கன மழை எப்போது? இன்னும் சில வாரங்களுக்குள் லேடீஸ் அண்டு ஜென்டில்மேன்!

ஃபேஸ்புக் பொதுச் சந்தைக்குள் நுழைவதற்கான எல்லா முஸ்தீபுகளையும் முடித்துவிட்டது. 100 பில்லியன் மதிப்புடன், அதில் 10 சதவிகிதத்தைப் பொதுச் சந்தையில் முதலீட்டாளர்களிடம் நேரடியாகத் திரட்டப்போகிறது. உலக வணிக வரலாற்றில் இடம்பெறும் பிரமாண்டமான சந்தை நுழைவு நிகழ்வாக இருக்கப்போகிறது இது என்கிறார்கள் அனலிஸ்ட்டுகள். மே மாத இறுதிக்குள் நடக்கப்போகும் இந்த நிகழ்வு ஃபேஸ்புக்கில் முதன்முதலாக முதலீடு செய்திருந்தவர்களுக்கும் பணி புரிந்தவர்களுக்கும் பலத்த பண மழையைக் கொண்டுவரப்போகிறது. அவர்களுக்கு ரோல்ஸ் ராய் காரில் இருந்து ஜெட் விமானம் வரை விற்பதற்கான சேல்ஸ்மேன்களும் இந்தப் பகுதியில் தயாராக இருக்கிறார்கள்.

ஃபேஸ்புக்கைப் பற்றி இன்னொரு கொசுறுச் செய்தி... இணையத் தொழில்நுட்ப உலகில் இப்போது பரவலாகியபடி இருக்கும் ஒரு பழக்கம் ஹேக்கதான் (Hackathon). மென்பொருள் தயாரிப்பதை முனைப்புடன் செய்பவர்களைச் செல்லமாக ஹேக்கர் என்று அழைப்பது உண்டு. அதையும் 23 மைல்கள் ஓடும் மாரத்தானையும் கலந்து வந்திருக்கும் பெயர்தான் இது. வேறொன்றும் இல்லை தொடர்ந்து பல மணி நேரங்கள் தனியா கவோ, அல்லது பலருடன் டீமாக இணைந்தோ எதையாவது ஒன்றை உருவாக்கும் நிகழ்வுதான் ஹேக்கதான். சென்ற மாதத்தில் ஒரு டீம் ஃபேஸ்புக் அலுவலக மாடியில் 42 அடி நீளத்தில், க்யூ.ஆர். கோட் ஒன்றை வரைந்துவைக்க, விமானத்தில் இருந்தே அதை அலைபேசிக்கொண்டு படிக்க முடிகிறது. க்யூ.ஆர். கோட் என்ன  என்பவர்களுக்கு... அடுத்த வாரத்தில் சுருக் முன்னுரையுடன், விகடனின் அலை மென்பொருள் க்யூ.ஆர். கோட்களையும் தருகிறேன்!

LOG OFF