என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

எனக்கு நானே ரோல் மாடல்!

'முதல்' முதல்வர்!

##~##

ம்.கே.பிரபு... பார்வை சவால் கொண்ட மாற்றுத் திறனாளி. ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பேராசிரியராகப் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றியவர், இப்போது திருப்பூர்- அரசு கலைக் கல்லூரியின் முதல்வர்.தென்னிந்திய அளவில் பார்வை சவால் உள்ள ஒரு மாற்றுத் திறனாளி, கல்லூரி முதல்வர் ஆவது இதுவே முதல்முறை. பிரபுவை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தேன்.

 ''நான் படித்தது, வளர்ந்தது எல்லாம் சென் னையில்தான். என் தந்தை சைதாப்பேட்டை கல்வியியல் கல்லூரியின் முதல்வராக இருந்த வர். 16 வயதில் இரு கண்களின் பார்வை யையும் இழந்தேன். இன்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்கிற என் ஆசை, நிராசையானது. மனம் தளரா மல் ஆங்கிலம் படித்தேன். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு, சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி. முடித்தேன். நான் முனைவர் பட்டம் பெற்ற அதே மேடையில் தான், தற்போதைய முதல்வர் அவர்களும் முனை வர் பட்டம் பெற்றார். 'கண் பார்வை இல்லாத இவர் எப்படி முனைவர் பட்டம் பெறுகிறார்’ என வியந்துபோன முதல்வர், என்னை அழைத்து வாழ்த்தினார்.

எனக்கு நானே ரோல் மாடல்!

'நான் ஒரு மாற்றுத் திறனாளி. என்னால் இதை எல்லாம் செய்ய முடியாது’ என நான் ஒருநாள்கூட நினைத்தது இல்லை. முனைவர் பட்டம் வாங்கிய பிறகு, சென்னை மாநிலக் கல்லூரியில் பேரா சிரியராகப் பணிபுரிந்தேன். நான் கற்ற கல்வியை அன்பு, அரவணைப்பு சேர்த்து மாணவர்களிடம் கொண்டுசேர்த்தேன். வழக்கமாக வகுப்பைப் புறக்கணிக்கும் மாணவர்கள்கூட, என் வகுப்புக்கு

எனக்கு நானே ரோல் மாடல்!

வந்துவிடுவார்கள். இதற்குஇடை யில்தான் தமிழக அரசு என்னை திருப்பூர் அரசு கலைக் கல்லூரிக்கு முதல்வராக நியமித்தது.

கல்லூரி முதல்வர் பணியை இதுநாள் வரை வெற்றிகரமாகச் செய்துவருகிறேன். இதற்கு இடையில் நான் எழுதிய விஷயங் களை 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களாகத் தொகுத்து உள்ளேன். நான் உடல் அளவில் குறைபாடு உள்ளவனாக இருந்தாலும் எண் ணத்தில், திறமையில், முயற்சியில் எள் முனை அளவும் குறைந்தவன் கிடையாது. 'இப்படி ஊனமானவனை பிரின்சிபாலா போட் டால் கல்லூரி வெளங்கின மாதிரிதான்’ என என் காதுபடவே  சிலர் கிண்டலடித்தார்கள். எல்லாம் பொறாமைதான் காரணம். சமயங்களில் 'இவன் எப்படி வேலை செய்யறான்னு பார்ப் போம்’ என நினைத்து என்னிடம் அதிக வேலை களைத் திணிப்பார்கள். ஆனால், 'இவர்களின் கிண்டலும் கேலியும் நமக்கு ஒரு பாடம்’ என நான் எடுத்துக்கொண்டு அனைத்து வேலைகளை யும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து வருகிறேன்.

எனக்கு நானே ரோல் மாடல்!

டைப்பிங், கம்ப்யூட்டர், சமையல் எனப் பல கலைகளை பார்வை போன பின்பே நான்கற்றுக் கொண்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எனக்கு ரோல் மாடல் என்று யாரும் வேண்டாம் என்றே முடிவு செய்துவிட்டேன். எனக்கு நானே ரோல் மாடல்.  வேலை செய்யும்போது எல்லை, நேரம், காலம்  எதுவும் வகுத்துக்கொள்ள மாட் டேன். இது மாதிரியான எண்ணங் களால்தான் என்னால் எந்த வேலை யையும் துளி பதற்றம் இல்லாமல் செய்ய முடிகிறது.

எனக்கு அரசாங்கம் இதுவரைக்கும் ஏராள மான உதவிகளைச் செய்து உள்ளது. சொல்லப் போனால் அரசின் உதவிகள் இல்லை என்றால் நான் இல்லை என்றே சொல்லலாம். அனைத்துத் துறைகளிலும் என்னைப் போன்ற மாற்றுத் திற னாளிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். கூடிய விரைவிலேயே பல்கலைக்கழகத் துணை வேந்தராக ஆவேன் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது'' என்று அழுத்தமாகக் கைகுலுக்கும் போது, அவருடைய தன்னம்பிக்கையின் வெளிச் சம் தெரிந்தது!

- சா.வடிவரசு
படங்கள்: க.கோ.ஆனந்த்