என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

வலையோசை : வண்ணநிழல்

வலையோசை : வண்ணநிழல்

வலையோசை : வண்ணநிழல்

பவர் ஸ்டார் சீனிவாசன் நாமம்!

நீதான் எங்க தலை,
உன் கண்ணு ரெண்டோ மலை,
பொண்ணுங்கள கவுக்கும்
உன் பார்வை வலை,
உன்னைப் பார்த்ததுமே அவங்க
மனசுல ஓர் அலை.

வலையோசை : வண்ணநிழல்

நீ ஓர் அழகிய சிலை,
உன் கண்ணசைவே ஒரு கலை,
உன் அன்புக்கு இல்லை விலை,
நானோ உன்னுள் ஒரு கிளை.

அன்பு வெச்சா நீ பனி மலை,
அதிரடினா நீ எரிமலை,
உன்கிட்ட மாட்டினா இல்லை விடுதலை,
உன்னை எதிர்த்தா எடு தலை.

உனக்குப் பிடிக்காது சத்தம்,
மீறினா சிந்திடும் ரத்தம்.
நீ ஒரு சிங்கம் ஆனா
மனசுல சுத்தத் தங்கம்.

உன் அதிரடியே ஒரு வித்தை,
உன்னை எதிர்த்தா அவன் சொத்தை,
உன்கிட்ட பணக்கட்டு கத்தை,
அழகுப் பொண்ணோட அம்மா உனக்கு அத்தை.

நீ ஒரு காட்டுப்புலி,
எவன் எதிர்த்தாலும் கிழி,
பிடிச்சதோ பழிக்குப் பழி,
உன் வழி எப்பவுமே தனி வழி.

வேதாளம் ட்விட்ஸ்...

•  முட்டாள் சோகத்தைக் கண்களில் மறைக்கிறான், புத்திசாலி அதையே தன் உதடுகளில் மறைக்கிறான் # உண்மை

•  அமைதிக்குப் பெயர்தான் .......... (ஃபில் இன் தி பிளாங்க்ஸ்)

வலையோசை : வண்ணநிழல்

இப்போது டைரியில் தொடங்கும் ஃப்ளாஷ்பேக் வருங்காலத்தில் பென் டிரைவினால் தொடங்கலாம் # சினிமா

•  கரும்பு தின்ன கூலி... சென்சாரில் வேலை!

•  தான் படிக்காத படிப்பை மகன் படிக்க வேண்டும் என்று ஆண்களும், தான் போடாத மேக்-அப்பை மகள் போட வேண்டும் என்று பெண்களும் நினைக்கின்றனர்.

•  வடநாட்டில் ராகுலை ராகுல்ஜி, சோனியாவை சோனியாஜி என்று அழைக்கின்றனர். ஒருவேளை பாலாஜி என்று யாராவது இருந்திருந்தால்?

•  ட்விட்டுலகமே கொஞ்சம் கொஞ்சமா இலக்கிய உலகமா மாறிக்கிட்டு வருது... பயமா இருக்கு.

•  காதலிக்கும்போது காதலியிடம் தெரியும் 'குழந்தைத்தனம்’ திருமணத்துக்குப்பிறகு 'கிறுக்குத்தனம்’ ஆகிவிடுகிறது # ரியாலிட்டி

• தமிழ் சினிமா ஆஸ்கரே வாங்கினாலும் நம்ம ட்விட்டர்ஸ் கிட்ட நல்ல பேரு வாங்க முடியாது போல!

•  கொள்கையில் சமரசம் கிடையாது - ராமதாஸ் # சமசாம்பார், சமமோர் ட்ரை பண்ணுங்களேன்!

•  ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயரின் சோம்பேறித்தனம் அவன் டெஸ்க்டாப்பில் இருக்கும் ஐகான்களின் எண்ணிக்கைகளில் தெரிந்து விடுகிறது.

காதலிக்க வைப்பது எப்படி?
ஒரு பெண்ணை காதலிக்கவைப்பது எப்படி?

* விளையாட்டான காரணங்களுக்காகக் காதலை ஆரம்பிக்காதீங்க. 'எதிர்காலத்துல இவளுக்குத்தான் தோசை சுட்டுத் தரப் போறோம்’னு உங்க மூளை சொல்லும். அப்ப முடிவு பண்ணுங்க அந்தப் பொண்ணுதான் உங்க காதலினு!

*

வலையோசை : வண்ணநிழல்

உங்களுக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிட்டா, மொதல்ல அவங்ககிட்ட நல்ல பேர் வாங்கணும். உங்க லுக்தான் அவங்களுக்கு ஃபர்ஸ்ட் இம்ப்ரஸ். மஞ்ச கலர், ரோஸ் கலர், கிளிப் பச்சை கலர்னு சட்டை போட்டா அந்தப் பொண்ணு இல்ல, வேற எந்தப் பொண்ணும் உங்களை லவ்வாது!

* 'அவங்க இம்ப்ரெஸ் ஆகிருப்பாங்க’ன்னு நீங்க நெனைச்ச உடனே போய், 'ஹாய், ஹலோ...’ சொல்லி அடுத்த நிமிஷமே நம்பர் கேட்டா அப்புறம் அம்புட்டுத்தான். பொறுமை வேணும் பிரதர். கொஞ்ச நாளைக்கு அவங்கள தூரத்துல இருந்து பார்க்கணும். அப்பப்ப லேசா ஒரு புன்னகை. எந்தக் காரணத்துக்காகவும் நம்பர் கேட்டுடாதீங்க.

* அவங்க சகஜமாப் பேசத் தொடங்கினதுமே அவங்க தோழிங்ககிட்ட இருந்து கொஞ்சம் விலகியே இருங்க. பத்தோட பதினொண்ணா இருக்கிறது எந்தப் பொண்ணுக்குமே பிடிக்காது. இதுவே உங்க மேல நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்!

* தனக்கு வரப்போறவனுக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் இருக்கக் கூடாதுனு நினைக்கிறது பொண்ணுங்க இயல்பு. உங்களுக்குக் கெட்டப் பழக்கம் ஏதாவது இருந்தா, அவங்க சொன்ன பின்னாடி அதை நிறுத்தினதாக் காட்டிக்கணும். முடிஞ்சா நிறுத்திக்கணும்!

* திறமைசாலியா இருந்தா பொண்ணுங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். கஷ்டப்பட்டு கிளாஸ் ஃபர்ஸ்ட் எடுங்க. கவிதை, கதை ட்ரை பண்ணலாம்!

* பொண்ணுங்களுக்கு அழகு, பணத்தை விட ரொம்ப முக்கியம் அவங்க மேல நீங்க காட்டுற அக்கறை. அவங்க பிறந்தநாளை எக்காரணம் கொண்டும் மறந்துடக் கூடாது.

* நீங்க இவ்வளவு பண்ணினாலும், நேர்மையா இருந்தா மட்டுமே உங்க காதல் ஜெயிக்கும். உங்க நேர்மைதான் காதல்ல ரொம்ப முக்கியம்.

### இதைப் படிச்சுட்டு ட்ரை பண்ணப் போறவங்களுக்கு ஒரு ஆல் தி பெஸ்ட். 'ஆணியே புடுங்க வேண்டாம்’னு சொல்றவங்களுக்கு டபுள் ஆல் தி பெஸ்ட்!

ஒரு பையனை காதலிக்கவைப்பது எப்படி?

* ஓரக்கண்ணால பார்த்து, லைட்டா கொஞ்சம் சிரிச்சுட்டு போங்க. அவ்ளோதான். அங்க 'கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்’னு பேக்ரவுண்ட் மியூஸிக் ஸ்டார்ட் ஆகி இருக்கும்!

வலையோசை : வண்ணநிழல்