வலையோசை : வீடு.சுரேஸ்குமார்...

கில்மா பட விமர்சனம்

நண்பர்களே! இந்தப் படம் எங்காவது ஓடுதானு நியூஸ் பேப்பர் எதையும் தேட வேண்டாம். காரணம், நான் விடலையா இருக்கச்சே கோபிசெட்டிபாளையத்துல ஒரு தியேட்டர்ல பார்த்தேன். கில்மா படத்துக்குனே நேர்ந்துவிடப்பட்ட தியேட்டர் அது. இப்ப அநியாயமா அதை இடிச்சுட்டாங்க.
இங்கேதான் கணேசன்ங்கிற நண்பனோடு இந்தப் படத்தைப் பார்த்தேன். கணேசன் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வேஸ்ட் லேண்ட். பல கில்மாப் படங்களை தலையில் துண்டு போட்டுக்கொண்டு பார்ப்பதில் கில்லாடி. பள்ளிக் காலங்களில் அவனுடைய அலம்பல்களால் டார்ச்சரான சின்னசாமி வாத்தியார், அவனை ஆக்டோபஸ் மாதிரி தன்னுடைய கால்களுக்கு இடையில் இடுக்கிக்கொண்டு, குமுறு குமுறு என குமுறிடுவார். இப்படிச் செய்கையில் ஒரு முறை அவருடைய தொடையைக் கடித்துவிட்டு அவன் தப்பித்ததும், அவர் 'ஐயோ அம்மா’ என்று கதறியதும் உண்டு. இதனால் பள்ளியில் டி.சி. கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.
அப்புறம் தன் அப்பாவின் ரேடியோ ரிப்பேர் கடையில் ஐக்கியமான கணேசன், சின்னச் சின்ன கோளாறுகளுடன் வரும் ரேடியோக்களைச் சுத்தமாக அவுட் ஆக்கும் விஞ்ஞானி ஆகிவிட்டான். இப்படிப்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த கணேசனுடன் நான் ஷகிலாவின் படம் பார்க்கச் சென்றதும் வரலாற்றில் முக்கியமான நிகழ்வுதானே. இருவரும் தலையில் துண்டுடன் படத்துக்குப் போனோம். ஜிலேபியைப் பிய்த்துப் போட்டது மாதிரி எழுத்துப் போட்டார்கள். ஒண்ணும் புரியல. அடேய், விமர்சனத்துக்கு வாடா என்று நீங்கள் கடுப்பாவது புரிகிறது. ஹி... ஹி! ஷகிலா படத்துக்கு எல்லாம் விமர்சனம் தேவையா பாஸ்!
புத்தம் புது பூமிகள்!
குண்டேரிப்பள்ளம் ஏரி:

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து கொங்கர்பாளையம் செல்ல ஒரு பேருந்து மட்டுமே செல்கிறது. அதனால் கார் அல்லது பைக்கில் செல்வது நல்லது. இங்கு உள்ள ஏரியில் கிடைக்கும் மீன் சுவையானது மட்டுமல்ல; மருத்துவக் குணம் வாய்ந்தது என்கிறார்கள். மாலை நேரங்களில் யானைக் கூட்டம் இங்கே தண்ணீர் குடிக்க வருவதைப் பார்த்து ரசிக்கலாம்.
பி.கு: இந்த இடத்தில்தான் ரேஞ்சர் சிதம்பரத்தை வீரப்பன் சுட்டுக் கொன்றானாம். அவர் இறந்தபோது அவருடைய குழந்தை இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தது.
தெங்குமரஹடா:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை அருகே பெரும் அடர் வனத்தில் கிராமம். இங்கு ஓடும் மாயாறு, கல்கண்டு சுவை உடையதாம். ஆனால், முதலைகள் ப்ளஸ் சுழல் அபாயமும் உண்டு. அரிதாக அரசுப் பேருந்து உண்டு. ஜீப் வகை வாகனங்களில் செல்வது நலம். யானைகள், காட்டு மாடு, மான்கள் என ரகம் ரகமாக வன விலங்குகளைப் பார்க்கலாம். உங்களுக்கு யோகம் இருந்தால் புலியாரும் தரிசனம் தருவார். இங்கு பயணிக்க வனத் துறையின் அனுமதி அவசியம்.
புளியங்கோம்பை:

சத்தியமங்கலத்தின் அடர் வனப் பகுதியில் உள்ள இங்கு ஒரு ஜில்ஜில் நீர்வீழ்ச்சி உள்ளது. ஜாலியாகக் குளிக்கலாம்தான்; ஆனால், இரண்டு கி.மீ. வனத்தினுள் நடக்க வேண்டும்.
மு.கு: மேற்கண்ட இடம் உள்ளிட்ட எந்த வனப் பகுதியிலும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தாதீங்க ப்ளீஸ்!
பாக்தாத் போருக்குப் பின்னால்...

போர்... எல்லாவற்றையும் எப்படி எல்லாம் புரட்டிப் போட்டுவிடுகிறது. பாக்தாத்தில் அமெரிக்கக் கூட்டுப் படையின் சமையல்காரரும் 'வீடு’ வலைப்பூவின் வாசகருமான என்னுடைய நண்பர், உயிர் போராட்டத்துக்கு நடுவே தாயகம் திரும்பினார். அங்கே எடுத்த பல படங்களையும் அனுப்பியுள்ளார். அவற்றில் சில அவருடைய அனுமதியுடன்...
