என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் பாய்ந்த விவசாயிகள்!

பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் பாய்ந்த விவசாயிகள்!

##~##

மீபத்தில் கோவை மற்றும் ஊட்டியில்  உலக விவசாயிகள் கூட்டமைப்பு (லா வயா கம்பெசினா) சார்பில் நடைபெற்ற 'புவி வெப் பம் மற்றும் உணவுப் பாதுகாப்பு’ தொடர்பான கருத்தரங்கில், தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டார்கள் உலக விவசாயிகள்!

 இந்தோனேஷியா, கனடா, பிரேஸில், ஃபிரான்ஸ், ஆப்பிரிக்கா, கொலம்பியா, நேபா ளம் உட்பட 27 நாடுகளில் இருந்து குவிந்து இருந்தார்கள் விவசாயப் பெருமக்கள். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களே. 'லா  வயா கம்பெசினா’ அமைப்பில் உறுப்பினராக உள்ள தமிழக விவசாயிகள் சங்கம்தான் கருத்தரங்குக்கு ஆன மொத்த ஏற்பாடுகளையும் செய்து இருந்தது.

கனடாவில் இருந்து வந்திருந்தார் பெண் விவசாயியான டீனா கோப். ''எங்கள் நாட்டுக்கு எங்கிருந்து வந்

பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் பாய்ந்த விவசாயிகள்!

தார்கள் என்றே தெரியவில்லை. திடீர் என்று பன்னாட்டு நிறுவனங்கள் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப்போட்டுவிட்டார்கள். கேட்டால், கார்ப்பரேட் விவசாயம் செய்கிறோம் என்கிறார்கள். ஆனால், மூன்று மாதத்தில் விளைய வேண்டிய பொருளை ஒரு மாதத்தில் விளைய வைக்கிறார் கள். அந்த விவசாய நிலங்கள் பக்கமே போக முடியாதபடி ரசாயன நெடி அடிக்கிறது. அதில் விளையும் உணவுப் பொருளை உண்ணும் மனிதர்களை நினைத்துப் பார்த்தால் பகீர் என்று இருக்கிறது. இவர்கள், எங்களைப் போன்ற பாரம்பரிய விவசாயிகளை உழவுத் தொழிலில் இருந்தே வெளியேற்றி வருகிறார்கள். இதை எதிர்த்து நாங்கள் தீவிரமாகப் போராடி வருகிறோம்...'' என்றார் ஆவேசமாக!

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அல்போன்ஸின் நெகுபா, ''200 ஆண்டுகள் எங்கள் மண்ணை ஆக்கிரமித்து இருந்த வெள்ளையர்களைத் துரத்தி அடித்தோம். ஆனால், இப் போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. எங்கள் நாட்டு அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து பல லட்சம் ஹெக்டேர் விவ சாய நிலங்களை 99 ஆண்டுகள் குத்த கைக்கு எடுத்துவிட்டன பன்னாட்டு நிறுவனங்கள். உங்கள் நாட்டில் நடக் கும் மாவோயிஸ்ட்களின் போராட் டங்களைக் கேள்விப்பட்டோம். அவர்களைப் போல ஆயுதம் ஏந்தி போராடியாவது எங்கள் நிலங்களை மீட்போம்.'' என்கிறார்!

பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் பாய்ந்த விவசாயிகள்!

இரண்டு முறை நேபாள நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பெண் விவசாயியான சாந்தா மான்வி. ''உலகிலேயே இயற்கை வளம் வற்றாத, மாசு இல்லாத இடம் இமயமலை. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு நீர் ஆதாரமே இந்த மலைதான். இதுவும் பொறுக்க வில்லை பண முதலைகளுக்கு. இங்கும் பதப்படுத்தும் ரசாயன ஆலைகள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகள் என வந்துவிட்டன. இமய மலையில் மட்டும் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேர்கின்றன. இமயமலையில் வாழும் வெள் ளைப் புலிகள், பனிக் கரடிகள், மான்கள் போன்றவைகளை இப்போது பார்க்கவே முடிவது இல்லை'' என்றார் வருத்தத்துடன்!

பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் பாய்ந்த விவசாயிகள்!

இப்படி உலக விவசாயிகளின் குமுறல்களைக் கேட்டபின்பு, கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த அருணாசலம், விவசாயிகளை எல்லாம் தன்னுடைய இயற்கை வேளாண் பண்ணைக்கு அழைத்துச் சென்றார். பண்ணையைப் பார்வையிட்ட உலக விவசாயிகளிடம் ஏகத்துக்கு வியப்பு!  பல வருடங்களாக ரசாயனப் பயன்பாடு இல்லாத அந்த மண், கோடையிலும் ஈரப் பதத்துடன் இருந்தது. சிலர் கையாலேயே மேலாக மண்ணைத் தோண்டி எடுக்க அங்கு ஏராளமான மண் புழுக் கள் நெளிந்தன. இவர்களுக்குத் தானியங்கள் மற்றும் காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட கொங்கு மண்ணின் பிரத்யேக இயற்கை உணவு விருந்தைப் படைத்தார் அருணாசலம்!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவரான செல்லமுத்துவிடம் பேசினேன். '' 'லா’ என்றால் சட்டம். 'வயா’ என்றால் வழி. சட்டப்படியான நேர்மையான விவசாயம் என்பதுதான் இதன் பொருள். 'லா வயா கம்பெசினா’ அமைப்பு 1992-ம் ஆண்டில் இருந்து உலகம் முழுவதும் உள்ளவிவசா யிகளின் உரிமைகளுக்காகப் போராடிவருகிறது. கடந்த ஆண்டுகளில் புவி வெப்பம் அடைதலைத் தடுக்கும் பொருட்டு கோபன்ஹேகன், மெக்ஸிகோ, டர்பன் ஆகிய இடங்களில் நடந்த மாநாடுகளில் இந்த அமைப்பு கலந்துகொண்டது. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் இந்த அமைப்பு கருத்தரங்கு நடத்தும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு தமிழகத்தில் இந்தக் கருத்தரங்கை நடத்தினோம். இந்திய விவசாயிகள் சார்பில்,கர்நா டக விவசாயிகள் சங்கத் தலைவர் நஞ்சுண்டசாமி, வித்யா தின்கர், கேரளாவைச் சேர்ந்த ஆதிவாசிகள் விடுதலைப் போராளி சி.கே.ஜானு, ராகேஷ் திகா யத், தாளவாடி கண்ணையன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்...'' என்றார்!

- ஜி.பழனிசாமி
படங்கள்: வி.ராஜேஷ், க.ரமேஷ், த.சித்தார்த்