என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

என் ஊர் : வத்தலக்குண்டு

அருவியிலும் குளிப்போம்... ஆற்றிலும் குளிப்போம்!

##~##

'''இந்தியாவின் சுவிட்சர்லாந்து’ என்று வர்ணிக்கப்படும் கொடைக் கானலின் மலை அடிவாரத்தில் இருக்கிறது வத்தலக்குண்டு. அதனால்தான் என்னவோ கொடைக்கானலின் குளிர்ச்சியும் மேற்குத் தொடர்ச்சி மலையின் சாரலும் வத்தலக்குண்டில் எப்போதும் இருக்கும்''  - தன் சொந்த ஊர் வத்தலக் குண்டு பற்றிப் பேசும்போதே காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகனின் வார்த்தைகளில் குளுமை வந்து ஒட்டிக்கொள்கிறது.

 ''கொடைக்கானலுக்குச் சுற்றுலாச் செல்லும் பயணிகள் ஒரு பக்கம், சபரிமலைக்குப் போய் வரும் பக்தர்கள் மறுபக்கம் என்று வருடம் முழுவதும் வத்தலக்குண்டு பிஸியாகவே இருக்கும். தேனி, பெரியகுளம், கேரளா செல்லும் வாக னங்கள் எல்லாமே எங்கள் ஊரைக் கடந்துதான் போக வேண்டும் என்பதால் எங்கள் ஊர் பஸ் ஸ்டாண்டில் தினமும் திருவிழாதான். ஊருக்கு நடுவே உள்ள விசாலாட்சிக் கோயில், கொஞ்சம் தள்ளியிருக்கும் மயில் விநாயகர் கோயில், ஆத்தோரப் பெருமாள் கோயில், அக்ரஹாரத் தெருவில் உள்ள மாரியம்மன் கோயில் எல்லாமே ஆன்மிகத்தின் அடையாளங்கள்.

என் ஊர் : வத்தலக்குண்டு

வத்தலக்குண்டை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டியவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்க

என் ஊர் : வத்தலக்குண்டு

ள். எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமையா போன்றவர்கள் வத்தலக் குண்டின் மைந்தர்கள். சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் என்பதாலோ என்னவோ எங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு தேசப்பற்று அதிகம். விடுதலைப் போராட்டத்தில் மட்டுமல்ல; இந்திய ராணுவத்திலும் பலர் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். விமானப் படையின் வைஸ் மார்ஷல் ராஜாராம், உயர்நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சோமசுந்தரம், நீதிபதிகள் பி.எஸ். சிவகுருநாதன், ராஜாராம் என்று எங்கள் ஊரின் ஆளுமைகளைப் பட்டியலே போடலாம். நான் சட்டம் பயின்றதும் அரசியல் கற்றுக் கொண்டதும் இந்த முன்னோடிகளால்தான்.

வத்தலக்குண்டு மற்றும் திண்டுக்கல்லில் வியாபார நிறுவனங்களை நடத்திக்கொண்டு இருந்தார் என்னுடைய பாட்டனார். தந்தை நீதித் துறையில் பணியாற்றியதால் கோடை விடு முறையை ஒவ்வொரு வருடமும் குடும்பத் தோடு வத்தலக்குண்டில்தான் கழிப்போம். போனஸாகக் கொடைக்கானல் வேறு. இப்படி விடுமுறைக்கு ஊருக்குப் போகும்போதுதான் கோயில் திருவிழாக்களும் நடைபெறும். திரு விழாவின்போது, ஊரின் மைதானத்தின் மேடையில் நாடகம், பாட்டுக் கச்சேரி என்று ஒரு வாரத்துக்கும் மேல் ஊரே அல்லோலகல் லோலப்படும். சிறு வயதில் திருவிழாக் கடை களைச் சுற்றிவந்து, இரவில் நாடகம் பார்த்ததும் சில நேரங்களில் இரு கிராமங்களுக்கும் சண்டை மூண்டதை நினைத்துப் பார்க்கி றேன்.

பகல்பொழுதில் அருகில் இருக்கிற குமுளி அருவிக்குப் போய்க் கொட்டும் தண்ணீரில் தலையைக்கொடுத்து நின்றுவிட்டு அப்படியே மூன்று ஆறுகள் சங்கமிக்கின்ற கூட்டாத்தான் ஐயம்பாளையம் என்ற இடத்தில் களைப்புத் தீர இன்னொரு குளியல் போடுவதும் ஆனந்தம். முன்னது அருவி. பின்னது ஆறு.

என் ஊர் : வத்தலக்குண்டு

இப்படியரு அனுபவம் இப்போது வாய்க்குமா என்று தெரியவில்லை. எங்கள் தென்னந்தோப்பில் வயிறு முட்ட இளநீரைக் குடித்துவிட்டு, மோட்டார் பம்ப்செட்டில் மணிக்கணக்காக உடலைத் தண்ணீரில் நனைத்த நாட்களை சென்னையில் இருந்துநினைத் துப் பார்க்கும்போதுதான், ஊரின் அருமை புரிகிறது.  

எங்கள் ஊரின் பொது மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் மரத்தடியில் நோயாளிகளைப் படுக்கவைத்ததைப் பார்த்து மனம் நொந்திருக்கிறேன். ராஜ்ய சபா உறுப்பினர் ஆன பிறகு எம்.பி. நிதியில் இருந்து அந்த மருத்துவமனைக்கு நிறைய வசதிகள் செய்து கொடுத்தேன்.

சுப்பிரமணிய சிவா முதல் சி.சு.செல்லப்பா வரை வரலாற்று மனிதர்களை வழங்கிய வத்தலக்குண்டில் சாக்கடைத் தண்ணீர் கலக்கின்ற மஞ்சளாறு, திறந்தவெளிச் சாக்கடைகள் எனப் பல பிரச்னைகள் சரிசெய்யப்பட வேண்டியவை. இவற்றை எல்லாம் சரிசெய்தால் வத்தலக்குண்டு... மக்கள் வாழும் சொர்க்கம்தான்!''

- எம்.பரக்கத் அலி
படங்கள்: வீ.சக்தி அருணகிரி