என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

வலையோசை : முத்துச்சரம்

வலையோசை : முத்துச்சரம்

வலையோசை : முத்துச்சரம்

நில நடுக்கம் வந்த மறுநாள் மாலை. பெங்களூரு ஜி.எம். பாளையாவில் உள்ள ஐந்து மாடிக் குடியிருப்பின் நாலாவது மாடியில் வசிக்கும் ஒரு பெண்மணி, தங்கள் கட்டடத்துக்கு வெகு அருகில் பயங்கரமாகச் சத்தம் கேட்க, கிலியில் நடுங்கிவிட்டாராம். 'நேற்றுதான் நிலம் நடுங்கியது, இப்போது இது என்ன சத்தம்?’ என நினைத்து முடிக்கும் முன்னரே தலைக்கு மேலே 'தட் தடார்’ என ஏதோ

வலையோசை : முத்துச்சரம்

இறங்கியதுபோலிருக்க... மொட்டை மாடிக்கு ஓடியிருக்கிறார். பார்த்தால் அங்கே ஒரு ஹெலிகாப்டர் லேண்ட் ஆகியிருக்க, பைலட்டுகள் பதற்றமாக இறங்கி ஓடிவந்தபடி 'பக்கத்துல வராதீங்க. கீழே ஓடுங்க’ எனத் துரிதப்படுத்தியிருக்கிறார்கள். தொடர்ந்து கட்டடத்தில் இருந்தவர்கள் எல்லோரும் வெளியேற்றப்பட்டு 'ஆபத்து இல்லை’ என உறுதி ஆன பிறகே அமைதி அடைந்து உள்ளனர்.

விஷயம் இதுதான். ஒரு பயிற்சி ஹெலிகாப்டரின்  இன்ஜி னில் திடீரென கோளாறு ஏற்பட, உடனடியாக இறக்கியாக வேண்டிய சூழல். அடுக்கு மாடிக் கட்டடங்கள் நிறைந்த அந்தப் பகுதியின் ஒரு மைதானம் கண்ணில்பட்டுள்ளது. ஆனால், அங்கே விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்களும், உயர் அழுத்த மின் கம்பிகளும் அதற்குத் தடையாக இருக்க, 'எங்கடா இறங்கறது?’ எனப் பார்த்தபடியே வந்து, இந்தக் குடியிருப்பின் மொட்டை மாடியில் இறக்கிவிட்டார்கள். மறுநாள் கிரேன் மூலமாக ஹெலிகாப்டர் அகற்றப்படும் வரை குடியிருப்பினர் தவிர, யாரும் பாதுகாப்புக் காரணமாக உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஹெலிகாப்டர் சாலைக்கு இறக்கப்பட்டதும், அதில் ஏறிப் பார்க்க வேண்டும் என்று அழுத ஒரு குழந்தையை அதிகாரிகள் வேறு வழியே இல்லாமல், ஹெலிகாப்டருக்குள் ஏறி கொஞ்ச நேரம் விளையாட அனுமதித்து இருக்கிறார்கள். பின்னே மொட்டை மாடியில் ஒருநாள்  முழுக்க நிறுத்திவைத்ததற்குப் பிரதிபலனாக இதைக்கூட செய்யாவிட்டால் எப்படி?

வலையோசை : முத்துச்சரம்

பெங்களூரு மருத்துவமனை ஒன்றில் சட்டத்துக்குப் புறம்பாக, கருவில் வளர்வது பெண்ணா, பையனா எனக் கண்டறிந்து சொல்கிறார்கள் எனத் தெரியவந்து, சோதனை செய்திருக்கிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 10 பேராவது இந்தச் சோதனையைச் செய்துகொள்ள வந்தபடி இருந்தது தெரியவந்துள்ளது. இந்த அவலம் இந்தியாவின் எல்லா இடங்களிலும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. வறுமைக் கோட்டில் உள்ளவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள்தான் இப்படிச் செய்கிறார்கள் எனச் சொல்ல முடியாது. என்ன குழந்தை எனத் தெரிந்து அதன் துடிப்பை நிறுத்திடத் துடிக்கும் வசதியானவரும்தான் இதில் அடக்கம். இதற்கு மெத்தப் படித்த மருத்துவர்களும் உடந்தை என்பது தலைகுனிவுக்கு உரிய விஷயம்.

'எந்தக் குழந்தையானால் என்ன? தாயும் சேயும் நலமாக வந்தால்போதும்’ எனச் சொல்லியபடியே பிரசவ வார்டில் புது வரவுக்குக் காத்திருக்கும் சுற்றங்களும்கூட, பிறந்தது பெண் எனச் சொல்லும்போது, 'பெ...ண்ணா’ என இழுப்பதையும், அதுவே ஆண் குழந்தை எனச் சொல்லும்போது, 'ஆகா’ என ஆனந்தத்தில் துள்ளுவதையும் இன்றைக்கும்கூட பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்!

''இன்னைக்குப் பொருட்காட்சிக்குப் போகலாமா?''  என்று தம்பி கேட்டதும் சகோதரிகளான எங்கள் மூவருக்கும்  குஷிதான். சிறு வயதில் பொருட்காட்சிக்குப் போனதுதான்.

வலையோசை : முத்துச்சரம்

'பொருட்காட்சின்னா என்னம்மா?' இது தங்கை மகனின் வினா. அமெரிக்காவிலும் பெங்களூருவிலும் பெரிய பெரிய மால்களுடனும் குளிரூட்டப்பட்டு அல்லது ஒரே கொட்டகையின் கீழ் கம்பளமிடப்பட்ட பொருட்காட்சிகளுக்குமே பழகிவிட்டிருந்த பிள்ளைகளுக்கு விளக்க முற்பட்டபோது, 'ஓ கைப்புள்ள திருவிழா மாதிரியா?' என்றார்கள். நல்ல தெளிவுதான். வாழ்க வடிவேலு.

கோயில் மற்றும் விசேஷ வீடுகளுக்குச் செல்லும்போது அழ காகப் பாவாடை சட்டை அணியப் பழகியிருந்த தங்கை மகளுக் காகவே கொட்டிவைத்திருந்தார்கள் வண்ண வண்ண வளையல் களை. ஒலிபெருக்கியில் ஓங்கி இசைத்த பாடலுக்குத் தானாக ஆட்டம் வந்தது தம்பியின் செல்ல மகனுக்கு. தோள்களை ஸ்டை லாக அசைத்து கைகளைச் சொடுக்கிட ஆரம்பிக்க... சுற்றி நின்று ரசித்தார்கள் மற்றவர்கள். 'எதை எடுத்தாலும் ஆறு ரூபாய்’... இந்தக் கடையைப் பார்த்து தாளமாட்டாத ஆச்சர்யம். 'ஒன்லி சிக்ஸ் ருபீஸ்... எப்படிச் சாத்தியம்?’ என ஒரே வியப்பு.

சின்னத் தங்கையின் சின்ன மகன் அங்கே ஆறு ரூபாய்க்கு ஓர் அசத்தல் கண்ணாடி வாங்கி முகத்தில் மாட்டிக்கொண்டான். அடுத்தடுத்த கடைகளில் ராமரின் வில் அம்புகள், இந்திய ரூபாய்கள் கொண்ட கீ-செயின் எனப் பார்த்துப் பார்த்து ஏதேதோ வாங்கிப் பையை நிரப்பிக்கொண்டான். தற்சமயம் அவனுடைய அமெரிக்கப் பள்ளியில் இந்த பர்ச்சேஸ் எல்லாம்தான் ஹாட் டாபிக் என சாட்டில் தெரிவித்தாள் தங்கை. தன் மேஜையில் வரிசையாக அடுக்கிவைத்து அங்கே ஒரு கண்காட்சியே நடத்திக்கொண்டு இருக்கிறானாம் பொடியன்!

அறிமுகமற்ற பெரியவர்
என்னை நிறுத்தி...
என்னுள் தேடுகிறார்
அறிமுகமான யாரையோ!

         மூலம்: முரசாகி சிக்கிபு

         ஆங்கில மொழியாக்கம்: கென்னத் ரெக்ஸ்ரோத்

வலையோசை : முத்துச்சரம்