மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

மலர் பந்தா!

ஹாய் மதன் கேள்வி - பதில்

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

 பேசாமல் நம் பிரதமருக்கு மன்மோகன் சிங் என்ற பெயரைவிட மௌனமோகன் சிங் என்று பெயர்வைத்து இருக்கலாமோ?

இன்னும் யோசித்தால் 'மோகன்’ என்பது எதற்கு? 'மோகன’ என்றால் மயக்கும் அழகு என்று பொருள். அவசியமா அது? சரி, 'சிங்’ என்றால் சிங்கம். அது மட்டும் பொருத்தமாகவா இருக்கிறது? ஆகவே, 'திரு மௌனா’ என்பது மட்டுமே போதாதா என்பது என் தாழ்மையான கருத்து!

என்.பாலகிருஷ்ணன், மதுரை.

முதன்முதலில் கடல் வழிப் பயணம் செய்தது யார்?

சுமார் 1,60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா வில் உருவெடுத்த 'ஹோமோ ஸேபியன்ஸ்’ என்கிற உயிரி (நாமதாங்க!) 'எத்தனை காலத்துக்குத்தான் ஆப்பிரிக்கக் காடுகளிலேயே வாழ்வது’ என்று முடிவு கட்டி, 50,000 ஆண்டுகளுக்கு முன்பு 'உலகப் பெரும் பயண’த்தை அவர்கள் ஆரம்பித்தார்கள். என்ன ஆச்சர்யம்! அதில் ஒரு பெருங்கூட்டம் கட்டுமரங்களை உருவாக்கி கடலைக் கடக்க முடிவு செய்தது. ஆப்பிரிக்கா டு ஆஸ்திரேலியா (வழியில் இந்தியாவிலும் பலர் இறங்கியிருக்கலாம்). அந்தச் சாதனையை நிகழ்த்திய மனிதர்களுக்கு... பெயர் கிடையாது!

##~##

எம்.சிவகுருநாதன், தஞ்சாவூர்.

வானத்தில் தெரியும் நட்சத்திரங்களின் மொத்த எண்ணிக்கை... தோராயமாக?

தோராயமாகத்தான் சொல்ல முடியும். ஒரே ஓர் இடத்தில் நின்று அண்ணாந்து பார்த்தால், 2,000 நட்சத்திரங்கள் வரை எண்ணலாம். பார்வையை மேயவிட்டால், சுமார் 6,000. பைனாகுலர் பயன்படுத்தினால் 50 ஆயிரம். டெலஸ்கோப் மூலம் என்றால், 3,00,000. நவீன (16 அங்குல) டெலஸ்கோப் மூலம் பார்த்தால், ஏராளமான கேலக்ஸிகளே தெரியும். சுமார் ஒரு லட்சம் கேலக்ஸிகளை விஞ்ஞானிகள் பார்த்தாகிவிட்டது. இன்னும் கோடான கோடான கோடி பாக்கி!

10,000; 1,00,000 எல்லாம் ஒரு கணக்கே இல்லை. நம்முடைய பால்வீதி கேலக்ஸியில் மட்டுமே சூரிய நட்சத்திரத்தைப் போல சுமார் 50,000 கோடி நட்சத்திரங்கள் உண்டு. சூரியனுக்கு மிக அருகில் உள்ள 'பக்கத்து வீட்டு’ நட்சத்திரம் ப்ராக்ஸிமா ஸென்டாரி. அங்கேயாவது போகலாமா? ஓ யெஸ்... ஒரு விநாடிக்கு 3,00,000 கி.மீ. வேகத்தில் (ஒளி  வேகம்) பயணித்தால், ப்ராக்ஸிமாவுக்குப் போய்ச் சேர நான்கு ஆண்டுகள் பிடிக்கும். அகண்ட கண்டம், மனிதனால் கற்பனையே செய்ய முடியாத அளவுக்குப் பிரமாண்டமானது.

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

சில பெண்கள் தலைமுடியே தெரியாத அளவுக்கு அதிகமாகப் பூ வைத்துக்கொண்டு விசேஷங்களில் பந்தா காட்டுகின்றனரே?

சின்னமனூரில் அப்படியா? இங்கே, சென்னையில் ஓர் இளம்பெண்கூடப் பூ வைத்துக்கொள்வது இல்லை. 'ஓ... நோ... ஐ யம் அலர்ஜிக்!’ என்கிறார்கள். உலக வரலாற்றில் முதன்முதலாகப் பூக்களை அன்றாட வாழ்க்கையிலும் சடங்குகளிலும் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள்தான். மலர் களைக் கோத்து மாலைகளை முதன்முதலில் கண்டுபிடித்துத் தயாரித்தவர்களும் தமிழர் களே. இன்று தமிழ் மண்ணில் எல்லாப் பெண்களும் மலர்களை அணிந்துகொண் டால், எவ்வளவு தனித்தன்மையோடு இருக் கும்?!

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஊஹூம்... ஏதோ கிராமங்களிலும் சிற்றூர்களிலும்தான் மலர் சூடிய பெண் களைப் பார்க்க முடிகிறது. ஆகவே, 'மலர் பந்தா’ தப்பே இல்லை.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

ஏழையின் காதல். பணக்காரனின் காதல். இவற்றில் நிலையான காதலாக வெற்றிபெறுவது எந்தக் காதல்?

சோஷலிஸம் தங்கியிருக்கும் ஒரே விஷயம், காதல் மட்டுமே! எட்வர்ட் கோமகன் பிரிட்டிஷ் அரியணையைத் துறந்து, சாதாரணக் குடி மகனாக மாறி, தன் காதலி வாலியை மணந்து கடைசி வரை காதலோடு வாழ்ந்தார். ('காதல் வாழ்க’ புத்தகத்தில் இதுபற்றி விவரமாக எழுதி இருக்கிறேன்!) தெரு ஓரத்தில், ஒரு காலை இழந்த தன் பிச்சைக்காரக் கணவ னின் காலை அன்போடு பிடித்துவிட்டு, தலையைக் கோதிவிடும் மனைவியையும் நான் பார்த்தது உண்டு!

ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

ஹாய் மதன் கேள்வி - பதில்

கழுதைகளின் தாயகம் எது?

நாம் கழுதை என்று பொதுவாகச் சொல்கிறோம். ஆனால், ஆஸ் (Ass) வேறு, டாங்கி (Donkey) வேறு. (இரண்டும் சேர்ந்தால் மலடுதான் பிறக்கும்!) வரிக்குதிரை உட்பட இவை எல்லாமே ஈக்விடே (Equidae) என்று அழைக்கப்படும் குதிரை இனத்தில் இருந்து வந்தவைதான். இரண்டு வகைக் கழுதை இனம்தான் உண்டு. ஆப்பிரிக்க மற்றும் ஆசியக் கழுதைகள். ஆஸ்-ல் இருந்து பரிணாம வளர்ச்சியில் உருவா னதுதான் டாங்கி. எகிப்தியர்கள்தான் முதலில், 6,000 ஆண்டுகளுக்கு முன்பே கழுதையை வழிக்குக் கொண்டுவந்து வீட்டுப் பிராணியாக வளர்த்தார்கள். அடுத்தபடி 'புகழ்’பெற்றது இந்தியக் கழுதை (தப்பாக எடுத்துக்கொள்ளாதீர் கள்). ஆப்பிரிக்கக் காடுகளில் வசிக்கும் கழுதை 60 கி.மீ. வேகத்தில் ஓடும். 50 வயசு வரை வாழும். இந்தியக் கழுதை ரொம்ப 'ஸ்லோ’வாகிவிட்டது; ஆக்கிவிட்டோம்.