என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
Published:Updated:

உசிலம்பட்டி சயின்டிஸ்ட்!

உசிலம்பட்டி சயின்டிஸ்ட்!

உசிலம்பட்டி சயின்டிஸ்ட்!

'உசிலம்பட்டியா?’ என்று பலரும் இளக்காரமாகப் பார்த்த காலத்தில், அப்துல் கலாம் கையால் விருது பெற்று, டெல்லிவாலாக்களையே வியக்கவைத்தவர் நாகராஜன். படித்தது பி.யூ.சி. என்றாலும் ஆர்வம், அனுபவ அறிவு, புத்திக் கூர்மையைத் துணையாகக்கொண்டு புதிய புதிய விஷயங்களை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்.  

உசிலம்பட்டி சயின்டிஸ்ட்!
##~##

உசிலம்பட்டியில் ஒரு பழைய கட்டடம்தான் இவருடைய ஆராய்ச்சிக்கூடம். ஊறுகாய் கம்பெனியில் ஆரம்பித்து, முந்திரிப் பருப்பு உற்பத்தியாளர்கள் வரை இவரைத் தேடிவந்து தங்களுடைய தொழில் பிரச்னைகளை முன்வைக்கிறார்கள். எல்லாவற்றையும் தீர்த்துவைக்கிறார் நாகராஜன். மனித உழைப்பு, நேரம், பணம் எல்லாவற்றையும் மிச்சப்படுத்தித் தருவதுதான் இவருடைய கண்டுபிடிப்புகளின் ஸ்பெஷல்!

'என் அப்பா முத்தையா பிள்ளைக்கு ரைஸ் மில்களில்  மிஷின்களை பொருத்துறதும் ரிப்பேர் செய்றதும்தான் வேலை. அவரோடு சேர்ந்து நானும் வேலைக்குப் போவேன். 'நாளைக்கு வேலை இருக்குமா? இருக்காதா?’ங்கிற பயத்தோட வாழ்ற அந்த வாழ்க்கை எனக்குப் பிடிக்கலை. மாவட்டத் தொழில் மையம் மூலம் 25 ஆயிரம் லோன் வாங்கி, தனியாக லேத் போட்டு அரிசி மில்லுக்குத் தேவையான சல்லடை (கிரைடர்) தயாரிக்க ஆரம்பிச்சேன். அப்பா பேச்சை மீறி தொழில் தொடங்கினாலும் அவருடைய ஒட்டுமொத்த அனுபவத்தில் இருந்து பெற்ற 'ஜூஸ்’தான் என் மூலதனம். ஒரு கட்டத்தில் அவரே மனசு மாறி, எனக்கு ஆர்டர் பிடிச்சுக்கொடுக்க ஆரம்பிச்சார். ஆள் போட்டால் கட்டுப்படி ஆகாது. அதனால இரும்பையும் தகடுகளையும் வளைக்கிறதுல இருந்து, மிஷின் ரெடியாகும் வரைக்கும் அத்தனை வேலைகளையும் தனி ஆளாகப் பார்த்தேன். ஒரு கிரைடருக்கு  1,000 ரூபாய் கிடைச்சுது. மாசம் நாலு கிரைடர் செஞ்ச 4,000 ரூபாய்  லாபம். 1970-ம் வருஷம் அந்தப் பணம்

உசிலம்பட்டி சயின்டிஸ்ட்!

அப்பாவோட வருமானத்தைவிட பல மடங்கு பெருசு. இந்த வெற்றிதான், சின்னச் சின்ன ஐடியாவைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை செய்யலாம்னு எனக்கு நம்பிக்கை கொடுத்துச்சு. அந்த நேரத்துல, ரைஸ் மில்களில் இருந்த மிகப் பெரிய பிரச்னை தவிடுதான். நெல்லை அரைச்சதும் நெல் தனியாகவும் உமி, தவிடு, குருணை எல்லாம் ஒண்ணாவும் விழும். உமி, தவிடு, குருணை மூன்றையும் தனித் தனியாப் பிரிக்கிற மிஷின்தான் என்னோட முதல் கண்டுபிடிப்பு.

உசிலம்பட்டி ஏரியாவுல இருந்த பிரபல ஊறுகாய் கம்பெனிக்கு ஒரு பிரச்னை. லோடு லோடா எலுமிச்சம் பழங்களை வாங்குற அவங்களுக்கு, அதை வெட்டுறதுக்கு  50-60 ஆட்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டி இருந்துச்சு. அதிலும் பலருக்குக் கையில் வெட்டுப்படும். தொடர்ந்து எலுமிச்சம் பழம் வெட்டுறதால  கை வெந்துபோகும். அந்த ஓனர் 'இதுக்கொரு மிஷின் இருந்தா தேவலை!’னு சொன்னார். உடனே உட்கார்ந்து கண்டுபிடிச்சேன். மொத்த பழத்தையும் கொட்டிட்டா, ஒரு சொட்டுச் சாறுகூட சிந்தாம  ஒவ்வொரு பழத்தையும் ஆறு துண்டா வெட்டிக்கொடுக்கும். அந்த நேரத்தில்  குஜராத்ல இருக்கிற 'நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன்’ல இருந்து என் மிஷினைப் பற்றி கேள்விப்பட்டு அதிகாரிகள் வந்து பார்த்து அசந்துட்டாங்க. அவங்க சிபாரிசுல 2005-ல் டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி கலாம் எனக்கு விருதுகொடுத்தார். இன்னும் என்கிட்ட நிறைய ஐடியாக்கள் இருக்கு. ஆனா, அதைச் செயல்படுத்துவதற்கான நேரமும் பணமும்தான் இல்லை. எல்லாம் கூடி வந்தா, நிறைய மிஷின்களைச் செய்வேன். எந்தத் தொழிலைச் செஞ்சாலும் நமக்குனு ஒரு ஸ்டைல், புதிய முயற்சி இருந்தா வெற்றி நிச்சயம்!'' என்று வெற்றி ரகசியம் சொல்கிறார் நாகராஜன்.

உசிலம்பட்டி சயின்டிஸ்ட்!

- கே.கே.மகேஷ்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்