என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
Published:Updated:

மூன்றாம் உலகப் போர் சில எண்ணங்கள்...

ஓவியம் : ஸ்யாம்

##~##

'மூன்றாம் உலகப் போர்’ தொடர் மலர்ந்ததும் உதிர்ந்ததும் மின்னல் வேகத்தில் அரங்கேறிவிட்டது. ரத்தச் சேற்றுடன் தொடரை நிறைவு செய்ததில் வருத்தமே. கருத்தமாயி, சிட்டம்மா, முத்துமணி, சின்னப் பாண்டி, எமிலி, இஷிமுரா பாத்திரங்கள் வாசகர்கள் நெஞ்சில் என்றும் வாழ்வார்கள்!

 - எம்.எஸ்.இப்ராகிம், சென்னை.

விப்பேரரசர் அவர்களுக்கு வணக்கம். உமது மூன்றாவது காவியம் 'மூன்றாம் உலகப் போர்’ ஓயவில்லை... இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது.

சின்னப் பாண்டியாய் அவதாரம் எடுக்க நினைக்கும் ஒவ்வோர் இந்திய இளைஞனுக் கும், தன்னம்பிக்கைதான் எமிலியாகவும் இஷிமுராவாகவும் இருந்து மூன்றாம் உலகப் போரில் வெற்றி வாகை சூடத் துணை நிற்க வேண்டும்!

- இருங்கோவேள், சென்னை.

மூன்றாம் உலகப் போர் சில எண்ணங்கள்...

து கதையோ... சினிமாவோ, பொதுவாக வெளிநாட்டு மாந்தர்கள் இந்தியர்களுக்கு அறிவுரை சொல்வதுபோலவே அமைப்பார் கள். ஆனால், உலகத்துக்குச் சொல்ல நம்மிடமும் செய்திகள் பல உண்டு என்பதை மலைக்கவைக்கும் அளவுக்கு அடுக்கிவிட்டார் கவிஞர். 'தமிழன்’ என்று சொல்லிக்கொள்ள இந்த 'மூன்றாம் உலகப் போர்’ இன்னுமொரு பெருமிதம்!

- செ.மணிவாசகம், போடி.

லக மயமாக்கலின் தாக்கம், ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம், எல்லை தாண்டிய கலாசாரச் சீரழிவுகள் இவற்றுக்குள் சிக்கி, கிராமிய விவசாயப் பொருளாதாரச் சமூக அமைப்பு சீரழிந்துபோனதை மக்கள் மொழி யில் பதிவு செய்தது 'மூன்றாம் உலகப் போர்’!

- எஸ்.பாபு, அறந்தாங்கி.

ம் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை இதைவிட இனி நுட்பமாகப் பதிவு செய்ய இயலாது. அந்த அளவு சிறப்பான பதிவாக அமைந்திருந்தது 'மூன்றாம் உலகப் போர்’!

- மு.இளங்கோவன், புதுச்சேரி.

லகின் எண் திசைகளிலும் பயணம் செய்த அனுபவங்களை, அந்தந்த நாட்டு இளைஞர்களின் சிந்தனைகளைச் செயலாக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி வாழும் பாத்திரங்களாகப் படைத்து, அனை வரின் உணர்ச்சிகளைப் பிரதிபலித்துக் காட்டியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. படித்த கருத்துகளை அனைவரும் செயல்படுத்தினால் 'மூன்றாம் உலகப் போர்’ மூளும் வாய்ப்பே அமையாது!    

- கோவிந்தராம், மதுரை.

ப்பான் மீது அணு குண்டு வீசப்பட்ட காலகட்டத்தில், அந்த நாட்டுப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மனதில் இரண்டே இரண்டு கட்டளைகளை மட்டும் வேண்டுகோளாய் விதைத்தார்களாம்.

1. சிக்கனம் வேண்டி, ஒரு சிறிய அரிசிப் பருக்கையைக்கூட வீணாக்கக் கூடாது.

2. மழைக்காகவும் சுவாசத்துக்காகவும் ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை ஊன்றி அவரவரே பராமரிக்க வேண்டும்.

அன்று ஏற்ற உறுதிமொழிகளை இன்று வரை கடைபிடிக்கின்றனர்.

அதைப்போல் இந்தக் காவியத்தைப் படித்த அனைவரும் கீழ்க்காணும் இரண்டு உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

1. விளைநிலங்களை விற்பதில்லை.

2. விளைநிலங்களை அழிப்பதில்லை.

'இலக்கியம் மற்றும் உலக அமைதி (சுற்றுச் சூழலைக் காப்பதின் மூலம் தண்ணீருக்காக உருவாக இருக்கும் மூன்றாம் உலகப் போரைத் தடுத்து நிறுத்தியதற்காக)’ என இரண்டு பெரும் பரிசுகள் இந்தக் காவியத்துக்காகக் காத்திருக்கும்!

- டாக்டர் அருள் வீரப்பன்,
கார்னல் பல்கலைக்கழக விஞ்ஞானி, நியூயார்க், அமெரிக்கா.

40 வாரங்களாகக் கதை வடிவில் பெய்த கருத்து மழை சட்டென நின்றுவிட்டது வருத்தம்தான். 'பசுமை இயக்கம்’ போன்ற மேலை நாடுகளின் விழிப்பு உணர்வை நம் பண்பாட்டு மணம் கமழக் கமழ... அட்டணம்பட்டி மொழி நடையில் படைத்துக் கொடுத்தது கவிஞரின் ஆகப் பெரிய சாதனை.

- டாக்டர் ராம், லண்டன்.