”மதுரை மல்லி ரகசியம்!”
பெண்கள் நினைத்தால், ஒரு சூழலையே மாற்றிக் காட்டி விட முடியும் என்பதற்கு திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டைப் பகுதி 'களஞ்சியம்’ மகளிர் சுய உதவி குழுவினரே நல்ல உதாரணம். 'லைஃப்’ எனும் அமைப்புடன் இணைந்து கணினி, தையல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில் பயிற்சிகளைப் பெற்றும் அளித்தும் சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள் இவர்கள்.
##~## |
நிலக்கோட்டை 'களஞ்சியம்’ குழுவின்தலைவி களில் ஒருவரான புஷ்பம் பேசும்போது, 'இங்க எல்லாருக்கும் விவசாயம்தான் பொதுவான தொழில். ஆனால், விவசாயம் முன்ன மாதிரி இல்லைங்கிறதால எல்லார் வீட்டுலயுமே ரொம்பக் கஷ்டப்பட்டோம். அப்போதான் எங்க ஊர் பெண்கள், 'களஞ்சியம்’ குழுவில் சேர்ந்தோம். இப்ப குழுவில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் இருக்காங்க.
வழக்கமா குழுன்னாலே லோன் வாங்குறதும் திரும்பக்கட்டுறதும்தான். ஆனா, லோன் வாங்கி நிறைய தொழில் பயிற்சிகள் பெற்று, அதைவெச்சு சொந்தக் காலில் நிற்க முடிவு பண்ணினோம். இந்தச் சமயத்தில் எங்களுக்கு 'லைஃப்’ அமைப்பு ரொம்ப உதவியா இருந்துச்சு. மேலும் இதுலஎங்க குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் இல் லாம, மற்ற ஏழை பெண்களுக்கும் பயிற்சிகொடுக் கிறோம். கடந்த நாலு வருஷத்துல 1,700 பெண் களுக்கு பயிற்சிக் கொடுத்து இருக்கோம்.
கம்ப்யூட்டர், டெய்லரிங், பியூட்டிஷியன் டிரெய்னிங், ஜுவல்லரி மேக்கிங்னு எந்தத் துறையைப் பெண்கள் ஆசைப்படுறாங்களோ அந்தத் துறைச் சார்ந்தவங்களை அழைச்சிக்கிட்டு வந்து குறைந்த செலவில் பயிற்சிக்கொடுப்போம். நாங்க செய்ற நகைகளை பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்றாங்க. அதோடு வாஷிங் பவுடர், மெழுகுவத்தி தயாரித்தல்னு ஒருநாள் பயிற்சியும் கொடுக்கிறோம்'' என்கிறார்.
மற்றொரு தலைவியான காஞ்சனா, ''இங்க பயிற்சி பெற்ற பெண்கள் எல்லாம் சொந்தக் கால்ல நிக்கிறாங்க. சிலருக்கு வெளியில வேலையும்வாங் கிக்கொடுக்கிறோம். ஆரம்பத்தில் ஒவ்வொரு பயிற்சிக்கும் வெளியில இருந்துதான்பயிற்சியா ளர்கள் வந்துக்கிட்டு இருந்தாங்க. ஆனால், இப்போ இங்க பயிற்சி பெற்ற பெண்களேபயிற்சி யாளர்களாக வர்றாங்க. அடுத்ததா 'மதுரை மல்லி’னு ஒரு பயிற்சி கொடுக்கலாம்னு இருக் கோம். பொதுவா எங்க ஊர் பக்கத்தில்தான் மல்லிப் பூ அதிகமா விளையும். ஆனால், அதை மதுரைக்கு எடுத்துக்கிட்டுப் போய், 'மதுரை மல்லி’னு சொல்லி வித்துடுறாங்க. அதே பூ இங்கே ரொம் பக் குறைச்சலான விலைக்குத்தான் போவுது.
மதுரைக்கும் எங்க ஊருக்கும் பூ கட்டுறதுலயே நிறைய வித்தியாசம் இருக்கும். அப்படி மதுரை மல்லி மாதிரி கட்டுற முறைகளை கத்துக்கொடுக் குறதுதான் 'மதுரை மல்லி’ பயிற்சியோட முக்கிய நோக்கம்.
இப்படி எல்லாம் வெவ்வேறுவிதமானதொழில் களைக் கத்துக்கிட்டு சொந்தக் கால்ல நிக்கிறதால... எங்க கைலயும் நாலு காசைப் பார்க்க முடியுது. நிம்மதியா குடும்பம் நடத்த முடியுது!'' என்றுகாஞ்சனா சொல்ல, ஆராவாரத்தோடு ஆமோதிக்கி றார்கள் மற்றவர்கள்!
- உ.அருண்குமார்
படங்கள்: வீ.சிவக்குமார்