என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

சொல்வனம்!

சொல்வனம்!

##~##

ஒரு கடவுளும் சில பூக்களும்

 ருவறைக்குள்
மூலவராய் நின்று
அருள்பாலிக்கும்
எங்களூர் சாமி
வருடம் ஒருமுறை
உற்சவராய்
உலா வருவார் தெருக்களில்

மூட்டு வலியில்
முடங்கிப்போன அப்பா
விதவையான பின்
வீட்டைவிட்டு வெளியே வராத பாட்டி
நேரில் போய்
தரிசிக்க முடியாத
வேலைப் பளுவோடு அம்மா

இப்படியாக
வருடம் முழுக்க
தன்னை வந்து பார்க்க இயலாத
பக்தர்களுக்காக
வீதி இறங்கி வர
சம்மதித்த சாமி...

படையல் வைத்து
நாள் தவறாமல் விரதமிருந்து
அர்ச்சனையாலும் அபிஷேகத்தாலும்
ஆராதித்து
வெள்ளி, செவ்வாயில்
விரல் நோகக் கட்டிய
பூச்சரம் சாற்றி
வழிபட்டிருந்தாலும்
 

எல்லோராலும் விலக்கப்பட்டு
கொல்லையில்
உட்கார்ந்திருந்த எனக்கு
தரிசனம் தர
மனம் இரங்காமல்
திரும்பிப் போன அன்றும்

அடுத்த வார
அர்ச்சனைத் தட்டின்
பூக்களுக்காக
மொட்டுவிட்டது
என் வீட்டு பவளமல்லிச் செடி.

    - சுமதிஸ்ரீ

என்ன சொல்லவருகிறார் கடவுள்?

கரத்தின் ஓசை
மெள்ள அடங்கத் துவங்குகிறது
மூடப்படும்
ஒரு ரயில் நிலையத்தின்
ஆளற்ற படிக்கட்டுகளில்
ஒரு தொழுநோயாளி
நாணயங்களை எண்ணிக்கொண்டு இருக்க
தண்டவாளங்களில்
சிதறிக்கிடந்தவற்றை
முகர்ந்து சோம்பலுடன்
நகர்கிறது நாய்
யாரிடமும் பகிர வழியற்ற துயரத்தைக்
கண்ணீருடன் தணித்துக்கொள்கிறான்
அந்த இளைஞன்
விற்காத பழச் சுமையை

சொல்வனம்!

வேறேதும் வழியின்றி
நாளை வரை சுமந்து கடக்கிறாள் பழக்காரி
நாய்க்குக் கிடைத்ததும் கிடைக்காது
குழாய் நீரில் பசியாறுகிறான்
ஊரைவிட்டு ஓடிவந்த சிறுவன்
என்ன சொல்லவருகிறார் கடவுள்
என்றெண்ணியபடி
காலி சிகரெட் பெட்டியை
உதைத்தபடி நடந்து செல்கிறேன் நான்.

 - சுந்தர்ஜி

ராகம்

ம்மி கொத்துபவரும்
கீரை விற்பவரும்
சாணை பிடிப்பவரும்
வாழைப் பழ வியாபாரியும்
கூவிக் கூவி விற்கிறார்கள்
ஏதோ ஒரு ராகத்தை.

- தெ.சு.கவுதமன்

நேரம் என்ன?

கரின் மையத்தில்
கம்பீரமாக நிற்கும்
அந்த மணிக் கூண்டின்
நான்கு கடிகாரங்களும்
நான்கு விதமான நேரம் காட்டி
ஓடாமல் நின்றன
'மணிக் கூண்டின் அருகில்’

சொல்வனம்!


என்று முகவரியை
அறிமுகப்படுத்தும் கடைகளோ
கடிகாரங்களை வழங்கியோர் என்று  
பெயர் விளம்பரம் தேடிய நிறுவனங்களோ
மணிக் கூண்டின் அருகில் இருக்கும்
தலைவர் சிலைக்கு அடிக்கடி
மாலையிடும் கட்சிகளோ
எதுவுமே சரிசெய்ய
முன்வரவில்லை
பள்ளி அருகே நடைபாதை ஓரம்
துண்டு விரித்து
நாவல் பழக் கடை போடும் நாகம்மா
பள்ளி விடும் நேரம் பார்க்க
மணிக் கூண்டை நோக்கும்போது எல்லாம்
சலித்துக்கொள்கிறாள்
'தன்னைப்போல்
மணிக்கூண்டுக்கும்
நேரம் சரியில்லை’ என்று.

- திருமாளம் புவனா நித்திஷ்