Published:Updated:

கதை கேளு... கதை கேளு..!

தன்னம்பிக்கை தவளை ! இ.மாலா

##~##

பொங்கல் கரும்பெல்லாம் சாப்பிட்டு குஷியா இருக்கீங்களா குட்டீஸ்! கதையை ஆரம்பிப்போமா?!

ஒரு ஊரோட எல்லையில கொஞ்சம் காட்டுப்பகுதியும், கொஞ்சம் உயரமா பாறைகள் நிறைந்த மலைப்பகுதியும் இருந்துச்சு. அந்த மலைப்பகுதியில செங்குத்தா, உயரமா ஒரு பாறை. காட்டுப்பகுதியில அஞ்சு தவளைகள் ஃப்ரெண்ட்ஸ்ஸா இருந்தாங்க. எல்லாருக்கும் விளையாட்டுத்தனம் அதிகம். ரொம்ப  jollyயா அங்கேயும் இங்கேயுமா குதிச்சுட்டு அலைஞ்சுட்டே இருப்பாங்க. அதனால எல்லா விலங்குகளுக்கும் இவங்க அஞ்சு பேரும் friendsதான்.

இந்தத் தவளைங்களுக்கு தணியாத ஒரு ஆசை. 'என்னிக்காவது, எப்படியாவது அந்த பாறையோட உச்சிக்குப் போய் பார்க்கணும்'கிறதுதான் அந்த ஆசை. ஆனா, மத்த விலங்குகள் எல்லாம் இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுதுங்க. ''இதுவரை எந்த விலங்கும் மலையுச்சிக்குப் போனதுகூட கிடையாது, உச்சிக்குப் போறதுக்கு யாரும் துணிஞ்சது இல்ல. அங்கே ஆபத்து அதிகம். விளையாட்டுத்தனமா ஆசைப்படாதீங்க''னு எச்சரிச்சதுங்க.

கதை கேளு... கதை கேளு..!

ஆனா, தவளைகள் யார் பேச்சையும் கேட்கல. போயே தீருவதுனு முடிவு பண்ணி, ஒரு நாளைக் குறிச்சு, எல்லாருக்கும் தகவல் தந்துச்சுங்க அந்த தவளைகள்.

கதை கேளு... கதை கேளு..!

எல்லா விலங்குகளும் அன்பா, மிரட்டலானு எப்படியெல்லாமோ சொல்லிப் பார்த்தும்... தவளைகள் பிடிவாதமா இருந்ததால, யாராலயும் ஒண்ணும் செய்ய முடியல. தவளைகள் குறிச்ச நாள்ல மலை ஏறுறதைப் பார்க்கறதுக்காக எல்லா விலங்குகளும் ஆவலா வந்ததுங்க. அஞ்சு தவளைகளும்  ரொம்ப மகிழ்ச்சியா எல்லார் கிட்டயும் ஜாலியா பேசி, அந்தச் சூழலை அதிக உற்சாகமா ஆக்கிட்டு,  ready... start...சொன்ன வுடன் தவளைகள் தாவிக்குதிச்சு ஒண்ணா ஓட ஆரம்பிச்சதுங்க. விலங்குகள் கவலையோடு பார்த்ததுங்க.

மலைப்பகுதிங்கறதால மலையில வசிக்கற காட்டு விலங்குகளும் அங்கங்கே நின்னு பார்த்திட்டு இருந்ததுங்க. பாதி தூரம் ஓடின பிறகு அங்கே நின்னுட்டிருந்த விலங்குகள், ''தவளைகளே... இவ்வளவு தூரம் ஓடி வந்தது போதும்... இன்னும் மேலே போனா பொல்லாத காட்டு மிருகங் கள் இருக்குது... உங்களைச் சாப்பிட்டுடும்... ஜாக்கிரதை... போகாதீங்க''னு எச்சரிக்கை கொடுத்துச்சுங்க. இதைக் கேட்டு பயந்த ஒரு தவளை அப்படியே நின்னுடுச்சு. மத்த நாலு தவளைகளும் விடாம தொடர்ந்து ஓட ஆரம்பிச்சதுங்க.

இன்னும் கொஞ்ச தூரம் போனதும்... அங்கிருந்த விலங்குகள், ''தவளைகளே... உங்களுக்கு அறிவில்லையா..? உங்களோட வந்த ஒரு தவளை புத்திசாலித்தனமா அங்கேயே நின்னுடுச்சு. நீங்க மட்டும் ஏன் ஓடறீங்க? மேலே போகாதீங்க. தண்ணிகூட கிடைக்காது. செத்துப் போயிடுவீங்க''னு சத்தம் போட்டுதுங்க. இதைக் கேட்டு பயந்த ஒரு தவளைக்கு நிஜமாவே தண்ணி தாகம் எடுத்து, நா வறண்டு கீழே விழுந்து செத்து போயிடுச்சு.

கதை கேளு... கதை கேளு..!

மத்த மூணு தவளைகளையும் திட்டித்தீர்த்த காட்டு விலங்குங்க... ''உங்களுக்கு என்ன பைத்தியமா? உங்க ஃப்ரெண்ட் ஒருத்தன் செத்துட்டான். இன்னும் முடிவை மாத்திக்காம ஓடிட்டே இருக்கீங்க. மேலே போனா நிறைய snakes இருக்கும். போகாதீங்க''னு சத்தம் போட்டுச்சுங்க. பயந்து போன இன்னொரு தவளை, அங்கேயே நின்னுடுச்சு. மத்த ரெண்டு தவளைகள் மட்டும் குதிச்சு குதிச்சு ஓடிக்கிட்டே இருந்ததுங்க.

''இந்த ரெண்டு தவளைகள் மட்டும் யார் பேச்சையும் கேட்காம மேலே போய்க்கிட்டே இருக்குதே... என்ன ஆகுமோ''னு எல்லா விலங்குகளும் கவலையா பார்த்திட்டே இருந்ததுங்க. கொஞ்ச நேரத்துல இன்னொரு தவளையும் ரொம்ப சோர்வடைஞ்சு... கீழே விழுந்து செத்துப் போயிடுச்சு. தன்னந்தனியா ஒரே ஒரு தவளை மட்டும் மேலே போயிட்டே இருந்துச்சு.

''கீழே வா... மேலே போகாதே... ஓடாதே... உன் friends ரெண்டு பேர் செத்துப் போயிட்டாங்க... இதுவரை யாருமே மேல போனது கிடையாது... பெரிய ஆபத்து அங்கே இருக்கும்... நீயும் செத்துடுவே... வந்துடு... உன்னால முடியாது... போகாதே''னு எல்லா விலங்குகளும் சேர்ந்து கத்துச்சுங்க. ஆனா, அந்தத் தவளை நிக்கவும் இல்லை... கீழே திரும்பி வரவும் இல்லை. நிதானமா குதிச்சு, குதிச்சு மேலே மேலே போயிட்டே இருந்துச்சு. கடைசியா அந்தப் பாறை மேலேயும் ஏறி வெற்றிக்கொடியை நாட்டிருச்சு. இதைப் பார்த்துக்கிட்டே இருந்த எல்லா விலங்குகளும் ரொம்ப ஆச்சர்யப்பட்டதுங்க. எல்லோருக்கும் சந்தோஷமாவும் இருந்துச்சு.

நினைச்சபடியே உச்சிக்குப் போய் பார்த் துட்டு கீழே வந்த தவளைகிட்ட, ''உன்னோடு வந்த நாலு பேர்ல ரெண்டு பேர் பாதியிலயே நின்னுட்டாங்க, ரெண்டு பேர் செத்துட்டாங்க. மலை உச்சியில பெரிய snakes இருக்கு, தண்ணியே கிடையாது, நீயும் செத்திடுவேனு எல்லா விலங்குகளும் சேர்ந்து கத்தினாங்களே... உனக்குப் பயமே கிடையாதா? நீ மட்டும் எப்படி சாதிச்சே?''னு உங்களைப் போல ஒரு குட்டிப் பையன் கேட்டான்.

தவளை பதிலே சொல்லலை. சந்தோஷமா குதிச்சு ஓடிருச்சு. ஏன் தெரியுமா? அதுக்குக் காது கேட்காது! அதனால்தான் எந்த எதிர்மறை விமர்சனங்களும் அதைப் பாதிக்கலை. குறிக்கோளை அடைய அதன் ஆர்வமும், முயற்சியும் துணை இருந்துச்சு!

குட்டீஸ், நீங்களும் எதிர்மறை விமர்சனங்கள், குறைகளைக் கேட்டு தயங்கி நிக்க வேண்டாம். தன்னம்பிக்கையோடு உங்க இலக்கை அடைய முயற்சி செய்யுங்க. சரியா?!

- இன்னொரு கதை..?
நாளைக்கு சொல்றேன்!