மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை !

விகடன் வரவேற்பறை !

பெருந்திணைக்காரன் - கணேசகுமாரன்

##~##
ஓர்
இசைக்கருவிக்குள் வாயுவாகப் புகுந்து இசையாக வெளிப்படும் காற்றைப் போல... மனதின் இண்டு இடுக்குகளில் புகுந்து உணர்வுகளை மொழி வடிவில் வெளிக்கொண்டுவருகின்றன கணேசகுமாரனின் கதைகள். 'பெருந்திணைக்காரன்’ என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் 12 கதைகளும் அக மனதின் உணர்வுகளை நுட்பமாகப் பேசுபவை.

இளம் வயதில் இருந்தே தனது ஆதர்ஷமாக இருந்து, தன் ஆளுமையைத் தீர்மானித்த சித்தப்பா இறந்துவிட்டார். அவரது சடலம் கிடத்தப்பட்டு இருக்கிறது. 'எவ்விதச் சலனமுமின்றி மூடியிருந்த கண்களுக்குள் கண்ட கடைசி பிம்பம் என்னவென்று, அவர் கண்களைப் பிரித்துப் பார்க்கும் ரகசிய ஆசை இவனுக்குள் கிளர்ந்தது’ என்று அதைப்பற்றி எழுதுகிறார். சாவு வீட்டின் விவரணையில் எட்டிப் பார்க்கும் கவித்துவ மொழி உறுத்தலாக இல்லை. மாறாக, இந்தத் தொகுப்பின் தனித்துவமாகவும் பலமாக வும் இருப்பது கணேசகுமாரனின் இந்த மொழிதான். தன் கதை மாந்தர்களின் மனதுக்குள் புகுந்து உளவியல்பூர்வமாக அணுகு கிறார்.

விகடன் வரவேற்பறை !

'மழைச்சன்னதம்’ என்றொரு கதை. மனப் பிறழ்வுள்ள ஒரு தாயின் வாழ்க்கையைக் கொண்டாட முடியாத அந்தத் தாய்மையின் அவலத்தை, சங்கிலியிட்டுக் கட்டிவைக்க வேண்டிய யதார்த்தத்தை அவர் விவரிக்கும் விதம் கதையோடு நம்மை இணைத்துக்கொள்கிறது. மொத்தக் கதைகளிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, 'கொம்பன்’. காலம்தோறும் மனிதர்கள் தங்களின் வீரத்தை

நிரூபிப்பதற்காக யானை என்னும் பிரமாண்ட உயிரை எப்படி எல்லாம் சித்ரவதை செய்துவருகிறார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் முக்கியமான பதிவு இது. சங்ககாலத்தில் துவங்கி, 'தண்டவாள’க் காலம் வரை வரலாறு நெடுகிலும் மனிதகுலம் யானைகளின் எதிரிகளாகவே மாறிவிட்டிருக்கும் அநீதிக்கு எதிராகத் தன் எழுத்தை முன்வைக்கிறார்.

தொகுப்பின் அனைத்துக் கதைகளிலுமே நம்மை ஈர்ப்பது வேறுபட்ட கதை சொல்லும் உத்திதான். ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு முறையில் சொல்கிறார். அது நம்மை ஈர்க்கிறது. 'நான் சகாயம்’ என்ற கதையின் முன்பின் கதை சொல்லும் பாங்கு குறிப்பிடத்தகுந்தது. ஆனால், ஒரு கதை சொல்லியாக, கணேசகுமாரன் தேர்ந்தெடுக்கும் தருணங்கள் அந்தரங்கமானதாக இருக்கும் அளவுக்கு அபூர்வமானவையாக இல்லை. ஆனாலும், தன் தனித்துவமான மொழி மற்றும் கதை சொல்லும் உத்தியால் தனக்கான இடத்தைப் பிடிக்கிறார் கணேசகுமாரன்.  

கிழக்கு தைமூர் - ஒரு தேசத்தின் மரணம் றீ இயக்கம்: ஜான் பில்ஜெர்

வெளியீடு: விடியல் பதிப்பகம் : விலை:

விகடன் வரவேற்பறை !

100  

விகடன் வரவேற்பறை !

போர்ச்சுக்கல்லின் காலனி ஆதிக்கத்தில் இருந்தும், பங்களாதேஷின் ராணுவ ஆதிக்கத்தில் இருந்தும் விடுபட்டு, இன்று சுதந்திர நாடாக இருக்கும் கிழக்கு தைமூரின் ரத்தக் கறை படிந்த வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் ஆவணப்படம். ஆறு லட்சம் மக்கள்தொகை கொண்ட கிழக்கு தைமூரை பிரிட்டன் மற்றும் அமெரிக்க உதவியோடு 'கம்யூனிஸ்ட்கள்’ என்று முத்திரை குத்தி பங்களாதேஷ் எப்படி வேட்டையாடியது என்பதைப் புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் விளக்கிப் பதறவைக்கிறார்கள். 1970 முதல் 1997 வரை பிரிட்டனின் ஆயுதங்கள் மூலம் பங்களாதேஷ் ராணுவம் இரண்டு லட்சம் மக்களைக் கொன்றதும், அது தொடர்பாக உலக நாடுகள் சாதித்த மௌனமும், தைமூரியர்கள் ஆயுதப் பாதைக்குத் திரும்பியதும் மனம் கனக்கும் ரண வரலாறு. பத்திரிகைச் செய்திகள், அரசு ஆவணங்கள், புகைப்பட வீடியோ தொகுப்பு, மக்களின் வாழ்க்கை முறை, கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள், போராளிகளின் பேட்டிகள் என ஓர் அடிமைப்பட்ட தேசத்தின் வரலாற்றைக் கடின உழைப்போடு தொகுத்திருக்கிறார் போர் முனைச் செய்தியாளர் ஜான் பில்ஜெர். அவசியம் காண வேண்டிய அபூர்வமான வரலாற்றுப் பதிவு!

விகடன் வரவேற்பறை !

அன்னக்கொடியும் கொடிவீரனும்

வெளியீடு: சாகா மியூஸிக் றீ விலை:

விகடன் வரவேற்பறை !

99

விகடன் வரவேற்பறை !

ஜி.வி.பிரகாஷின் ஆடுகளத்தில் பாரதிராஜாவின் மண்வாசனை! 'என் இனிய தமிழ் மக்களே...’ என ஆல்பத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் இனிய இன்ட்ரோ கொடுக்கிறார் பாரதிராஜா.

'ஆவாரங்காட்டுக்குள்ளே...’ பாடலில் வெள்ளாட்டுப் பாலு, ஆடோட்டும் புள்ள, மாராப்பு என்று கிராமத்துக்கே அழைத்துச் செல்கிறது வைரமுத்து வின் வரிகள். கேட்டுப் பழகிய மெட்டாக இருந்தாலும் 'நரிக ஒறங்க...’ பாடலில் சந்தோஷ், ஹரிஹரன், பூஜா, ஹரிணி சுதாகர் குரல்கள் தாளம் போடவைக்கின்றன. ஏகாதசியின் வரிகளாலும் இசையாலும் காதல் தனிமையின் சோகம் கடத்துகிறது 'அன்னமே அன்னமே...’ பாடல்.

'போறாளே... என்ன விட்டு அன்னக்கொடிதான் போறாளே...’ பாடல் பழக்கவழக்கமான காதல் சோக பேத்தாஸ். 'பொத்தி வெச்ச ஆசத்தான்...’ பாடலில், 'பத்தி விட்ட ஆடுதான் பட்டி வந்து சேர்ந்ததாம்... பட்ட வலியாவுமே இனிக்கிறதே’ என்று அந்தரங்கம் பேசுகிறது அறிவுமதியின் வரிகள். 'கொலவாள எடுங்கடா... குரல்வளைய அறுங்கடா...’ பாடல் கொடி வீரன் சாமிக்கு டெடிகேட்.  கிராமத்து அதிர்வேட்டாக இல்லாமல், தெம்மாங்குத் தென்றலாக ஈர்க்கிறது ஆல்பம்!

விகடன் வரவேற்பறை !

கதை கேளு... கதை கேளு !  WWW.Sirukathaigal.com

விகடன் வரவேற்பறை !

நீங்கள் சிறுகதை ரசிகரா? 'ஆம்’ எனில், நிச்சயம் இந்தத் தளம் உங்களுக்குப் பிடித்துப்போகும். தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொடங்கி, புதிதாக எழுதுபவர்களின் எழுத்துகள் வரை ஏராளமான தமிழ்ச் சிறுகதைகளைத் தொகுத்து வைத்திருக்கின்றனர். கதைகளைப் பதிந்த நாள், இதுவரை அதைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை என ஒவ்வொரு கதைக்கும் கொடுக்கப்பட்டு இருக்கும் விவரங்கள் சிறப்பு. ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் கதையை மட்டும் தேர்ந்தெடுத்துப் படிக்கும் வசதியும் உண்டு. எழுத்தாளர்களின் சிறுகதைகள் தவிர, சிறுகதைகள் குறித்து எழுத்தாளர்களின் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு இருப்பது சீரிய உழைப்பு!