மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

கட்சி தொடங்கினால்... கார்ட்டூன்!

##~##
எஸ்.ஜெயகாந்தன், புன்செய்ப்புளியம்பட்டி.

என்கவுன்ட்டர்கள்-சரியா... தவறா?

பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரையில் - சரி. மனித உரிமைப் பாதுகாவலர்கள் பார்வையில் - தவறு! நடுநிலையாளர்கள் கோணத்தில் - கேள்விக் குறி!

எஸ்.சையது முகமது, சென்னை-93.

தாயின் வயிற்றில் உள்ளபோது குழந்தை உணவு சாப்பிடுகிறது. அதே சமயம், அந்தக் குழந்தையின் கழிவுகள் எங்கே செல்கின்றன?

  எங்கே உணவு சாப்பிடுகிறது?! பெலோப்பியன் குழாயில் காத்து இருக்கும் முட்டையை ஆணின்

ஹாய் மதன் கேள்வி - பதில்

உயிரணு துளைத்தவுடனே, முட்டை கர்ப்பப்பை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. போகிற வழியி லேயே செல்கள் நாலாக, எட்டாக, பதினாறாகப் பிரிய (Divide) ஆரம்பிக்கிறது. அந்தப் 'பயணத்’ தின்போதே மனிதன் உருவாகத் தொடங்கிவிடுகிறான்!

பிறகு, கர்ப்பப்பையில் ஒட்டிக் கொண்டவுடன் ஆம்னியான் (Amnion) என்கிற திரை அந்தப் 'புள்ளி’ மனிதனை மூடிக்கொள்ள, மூன்றாவது மாதத்துக்குள் கருவுக் கும் கர்ப்பப்பைக்கும் இடையே ரத்த நாளங்களால் ஆன 'பாலம்’ கட்டப்படுகிறது. இதுதான் பிளஸன்ட்டா (Placenta). இதன் வழியே அம்மாவின் ரத்தம் குழந்தையின் உடலுக்குள்ளும் போய் வர, ஆம்னியான் நீரில் மூழ்கி மிதக்கும். குழந்தை இப்போது அம்மாவின் உடலில் ஒரு பகுதி. தனியாக மூச்சுவிடவோ, உண்ணவோ, கழிவுகளைப் போக்கவோ தேவை இல்லை!

வே.ரவிக்குமார், சென்னை-15.

ஹோமோ எரெக்டஸ், நியாண்டர்தால், ஹோமோ ஸேபியன்ஸ்  இவற்றுக்குள்ள வேறுபாடு என்ன, மற்றும் வாழ்ந்த காலகட்டங்கள் என்ன?

  நாம் எல்லோரும் 'ஹோமோ ஸேபியன்ஸ்’தான். அதாவது, இன்றைய மனிதன். 'க்ரோ மேக்னன்’ (Cro magnon) நம்ம தாத்தா. அவரிடம் இருந்து சற்று 'இம்ப்ரூவ்’ ஆனவர்கள் நாம். 35,000 ஆண்டுகளுக்கு முன்பு க்ரோமேக்னன் என்கிற மனித இனமும், நியாண்டர்தால் என்கிற மனித இனமும் தனித் தனியாக வாழ்ந்து... பிறகு, ஹோமோ ஸேபியன்ஸ் (நாம்!) நியாண்டர்தால் இனத்தை அடியோடு அழித்தொழித்தோம். எல்லாவற்றுக்கும் ஆரம்பம் 'ஆஸ்ட்ரலோ பித்திகஸ்’ (Australopithecus) என்கிற - குரங்கில் இருந்து பிரிந்த முதல் மனித இனம். அந்த இனம் நடமாடியது சுமார் 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்!

ஹாய் மதன் கேள்வி - பதில்

அவர்களுடைய எலும்புகளின் மிஞ்சிய பகுதிகள் (Fossils) எத்தியோப்பியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் கிடைத்திருக்கின்றன. சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ எரெக்டஸ் என்கிற வேறு ஒரு மனித இனத்தின் எலும்புகள் ஜாவாவில் கண்டெடுக்கப் பட்டு உள்ளன.

ஆக, ஒரு காலத்தில் குரங்கு வகைகளைப்போல நிறைய, விதவிதமான மனித இனங்கள் வாழ்ந்து, இப்போது மிச்சம் இருப்பது, நாம் மட்டுமே. நாம் அடித்துக்கொண்டு, அணுகுண்டுகளை உருவாக்கிக்கொண்டு, கூடவே

ஹாய் மதன் கேள்வி - பதில்

2 லட்சம் கோடி ஊழல் எல்லாம் பண்ணிக்கொண்டு 'வாழ்ந்து’கொண்டு இருக்கிறோம். ஆட்டம் எத்தனை காலத்துக்கு என்று தெரியவில்லை!

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

சாதி, மதம், இனம், மொழி இல்லாமல் உலகம் படைக்கப்பட்டு இருந்தால் மனித இனம் எப்படி இருக்கும்?

  ஜாலியாக... குரங்கு இனமாகவே இருந்து இருக்கும்!

தேவசேனாதிபதி, வேலூர்.

'நமக்கு நிச்சயம் மரணம்’. இதில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

  தேவலை, நாம் இந்த விநாடி உயிரோடு இருக்கிறோம். பலே!

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

புதிய கட்சி தொடங்கப்போகிறேன்... உங்கள் ஆதரவு உண்டா?

  பழைய, புதிய, எல்லாக் கட்சிகளுக்கும் என் ஆதரவு உண்டு! நிறையக் கட்சிகள் வந்தால்தான், நிறைய கார்ட்டூன்கள் போடலாம்! வெற்றிகரமாக உங்கள் கட்சியை நடத்தினால், ஏ.மூர்த்தி விரைவில் 'ஏராள’ மூர்த்தியாகும் சான்ஸ் உண்டு. கட்சியை ஆரம்பித்த கையோடு உண்டியல் எடுத்துக்கொண்டு மட்டும் என்னிடம் வந்துவிடாதீர்கள்!