மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

##~##

ஓநாய் குலச்சின்னம் - ஜியாங் ரோங்

 தமிழில்: சி.மோகன்

சீனாவில் நடந்த கலாசாரப் புரட்சியை மட்டுமே நாம் அறிவோம். அதன் தொடர்ச்சியாகத் தொன்மை வாய்ந்த மங்கோலிய மேய்ச்சல் புல் நிலம் என்ன ஆனது என்பதன் வரலாற்றுப் புனைவே இந்த நாவல். மங்கோலிய மேய்ச்சல்காரர்களுக்குப் புல்தான்... நாய், ஆடு, மாடு, குதிரைகளைவிடப் பெரிய உயிர். இரக்கத்துக்கு உரிய உயிர். புல்லை மேயும் மான்கள் அவர்களைப் பொறுத்த வரை மோசமானவை. மான்களை வேட்டையாடும் ஓநாய்கள், மேய்ச்சல் நிலத்தின் பாதுகாவலன்கள். ஓநாய்கள், மேய்ச்சல் நிலத்தின் ஆன்மா. மான்களோடு சேர்ந்து தங்கள் ஆடு, மாடுகளை ஓநாய்கள் வேட்டையாடினால், பதிலுக்கு மங்கோலியர்கள் ஓநாய்களை வேட்டையாடுவார்கள். ஆனாலும், அது அவர்களின் குலச்சின்னம். தாங்கள் இறந்ததும் தங்களது நிர்வாண உடலை ஓநாய்க்குத் தின்னக் கொடுப்பார்கள். கலாசாரப் பரவலாக்கத்தின் முதல்படியாக மேய்ச்சல் நிலத்துக்குள் அடியெடுத்துவைக்கிறார்கள் சீன விவசாயிகள். அவர்களைப் பொறுத்தவரை நிலம் முதலில் மனிதனுக்கானது. ஓநாய்கள் அழிவுச் சக்தி என்று நினைப்பதால், அவற்றைக் கண்மூடித்தனமாக வேட்டை யாடுகிறார்கள். மேய்ச்சல் நிலத்தின் தொன்மையான ஆன்மா சிதைக்கப்படுகிறது.

விகடன் வரவேற்பறை

மங்கோலிய மக்களோடு வாழ்ந்த 11 வருடங்களில் தான் பார்த்தவற்றை சீன விவசாயப் பாரம்பரியத்தில் வந்த ஜென் சென் என்கிற பாத்திரத்தின் பார்வையில் விவரிக்கிறார் ஆசிரியர். நமக்கு அந்நிய உயிரினமான ஓநாய், மிக அந்நிய மேய்ச்சல் நிலக் கலாசாரம்பற்றிய வாசிப்பு ஆரம்பத்தில் லேசான சலிப்பைக் கொடுக்கிறது. அதுவே, ஓநாய்களின் வேட்டை முறைகள், அவற்றின் புத்திசாலித்தனம் என்று நகர்ந்ததும் ஓநாய்கள் மேல் ஆர்வமும் விருப்பமும் நமக்கும் தொற்றிக்கொள்கிறது. ஓநாய்களின் கூட்டுக் குடும்ப வாழ்க்கை, மனிதர்களை ஏமாற்றும் அவற்றின் புத்திசாலித்தனமான வேட்டை வியூகங்கள், குட்டிகளைப் பறிகொடுத்த தாய் ஓநாய்களின் தற்கொலையில் முடியும் எதிர்த் தாக்குதல்கள், வலி நிறைந்த துயரமான நள்ளிரவு ஊளைகள், மங்கோலியக் குதிரைகளின் வீரம் என எழுத்தில் ஒரு நேஷனல் ஜியாக்ரஃபி சேனலைக் காட்சிப்படுத்தியிருப்பது வன அழகியல்.

''சிங்கம், புலி போன்ற பெரிய மிருகங்கள்கூட சர்க்கஸில் ரிங் மாஸ்டருக்குப் பணிந்து வித்தை செய்வதைப் பார்த்திருப்பாய். உலகில் எங்காவது சர்க்கஸில் ஏதாவது ஓர் ஓநாய் மனிதனுக்குப் பணிந்து, பயந்து நடந்து பார்த்திருக்கிறாயா... அவை புனிதமான ஆன்மாக்கள்!''- இது மாதிரியான சின்னச் சின்ன உரையாடல் கள் மூலம் ஓநாய்கள் மீதான பிம்பத்தை, ஆர்வத்தைப் பிரமாதமாக நம் மனதில் கட்டமைக்கிறார் ஜியாங் ரோங்.

இறுதியில் சீன ராணுவத்தால் ஈவு இரக்கம் இன்றி ஓநாய்கள் கொல்லப்பட்டு, அதனால் எலிகள் பெருகி மேய்ச்சல் நிலம் பாலையாகிவிடுவதும், புற்கள் அழிந்துவிடுவதால் பீஜிங் நகரம் புழுதிப் புயலால் அடிக்கடி தாக்கப்படுவதுமான பதிவுகள் மனித குலத்துக்கான எச்சரிக்கை.

மீண்டும் மீண்டும் பெரும் வர்ணனைகள், நீளமான வசனங்கள் ஆகியவை வேக நடையில் ஒரு வேகத் தடை. ஆனாலும், 30 வருடக் கலாசாரப் பலம் மிகுந்த, தீரமான மக்களோடு வாழ்ந்த உணர்வைத் தருகிறது இந்த நாவல்!

வெளியீடு: அதிர்வு பதிப்பகம், எண்: 38, இரண்டாவது தெரு, இராமலிங்க நகர், விருகம்பாக்கம், சென்னை - 93

பக்கம்: 672; விலை:

விகடன் வரவேற்பறை

500

விகடன் வரவேற்பறை

தேமதுரத் தமிழோசை! http://tamil.cri.cn/

சீனாவில் இயங்கும் தமிழ் வானொலியின் அதிகாரப்பூர்வ இணைய தளம் இது. ஆனால், வானொலி சேவைகளைத் தாண்டி சீனாவின் வரலாறு, அங்கு வாழும் பல தேசிய இனங்களின் வரலாறு, வாழ்க்கை முறை, சீன அரசின் அன்றாட அறிவிப்புகள் என அனைத்து வகையான தகவல்களும் தமிழில் வாசிக்கக் கிடைக்கின்றன. சீனாவில் வாழும் தமிழ்க் குடும்பங்களின் பேட்டிகளையும் படிக்கலாம். தமிழ் வழியே சீன மொழியைக் கற்றுக்கொள்ளவும் முடியும். முடிந்த வரையிலும் ஆங்கிலக் கலப்பில்லாத தமிழில் அனைத்துச் செய்திகளையும் வலையேற்றி இருப்பது சிறப்பு. எங்கோ இருக்கும் சீனாவில் இருந்து இவ்வளவு தரத்துடன் ஒரு தமிழ் இணையதளம் இயங்குவது ஆச்சர்ய மானது. அட... இந்த சீன வானொலிக்கும் பிரத்யேகப் பேட்டி அளித்திருக்கிறார், நம் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி!  

விகடன் வரவேற்பறை

கேடி பில்லா கில்லாடி ரங்கா

இசை: யுவன்ஷங்கர் ராஜா;     வெளியீடு: சோனி மியூஸிக்;   விலை:

விகடன் வரவேற்பறை

99

'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ அப்பா பாசம் பேசும் பாடல். நா.முத்துக்குமாரின், 'நமக்கென வந்த நண்பன் தந்தை’ போன்ற மென்வருடல் வரிகளை அம்பாரி ஊர்வலமாக ஆடி அசைந்து அழைத்துச் செல்கிறது இசை. வழக்கமாக அதிரடிக்கும் வேல்முருகனின் குரல் 'கொஞ்சும் கிளி பாட வெச்சா...’ பாடலில் நெக்குருகி நெகிழவைக்கிறது. 'சாராயத்தில் ஏது போதை... அந்தப் புள்ள பார்த்தா... சட்டுனு மாறும் பாதை...’ எனக் காதல் கிறக்கமும் மயக்கமும் தளும்பி நிரம்புகிறது யுகபாரதி வரிகளில். சிம்பு, யுவன் குரல்களில் 'ஒரு பொறம்போக்கு மொத மொதல்ல சரக்கடிக்கக் கத்துத் தந்தான்’ பாடல்... பக்கா டாஸ்மாக் கீதம். 'லார்ஜுக்கு நோ... ஸ்மாலுக்கு நோ... ஃபாரின் நோ... லோக்கல் நோ’ என்று குடிக்கு எதிராகப் பாடினாலும், பத்து மணி டெட்லைனை நினைவுபடுத்தும் பாடல். தேர்தல் பிரசாரமாக ஒலிக்கும் 'உள்ளதை நான் சொல்லப்போறேன்...’ பாடலின் வாக்குறுதிகள் சுவாரஸ்யம்!

விகடன் வரவேற்பறை

வக்ரி சொக்கு (குறவன் மகன்)  

இயக்கம்: ஏ.கிருஷ்ணமூர்த்தி;  வெளியீடு: எம்.ஜி.ஆர். அரசுத் திரைப்படக் கல்லூரி

விகடன் வரவேற்பறை

குறவர்களின் பேச்சுமொழியான வக்ரி மொழியில் எடுக்கப்பட்ட குறும்படம். மனைவியை இழந்த குறவர் காசி, தெருத்தெருவாகக் காடைகளை விற்று மகன் மருவனைப் படிக்கவைக் கிறார். முதல் தலைமுறையாகப் பள்ளியில் சேரும் மருவன் பள்ளியில் மற்ற மாணவர்களின் புதிய ஷூவைப் பார்த்து அதைப் போலவே வேண்டும் என்று காசியிடம் அடம்பிடிக்கிறான். மகனின் ஆசையை நிறைவேற்ற நாள் முழுக்கக் காடைகளைத் தூக்கிக்கொண்டு அலைகிறார் காசி. தான் ஆசை ஆசையாக வளர்க்கும் காடை இட்ட முட்டைகளில் ஒன்றை உடைத்துவிடுகிறான் மருவன். தன் தாயைப் போல மீண்டும் வரவே முடியாத இடத்துக்கு அந்த உயிர் சென்றுவிட்டது என்று மனம் கலங்குகிறான். காடைகளின் உயிர் காக்க தந்தையும் மகனும் எடுக்கும் முடிவே நெகிழ்ச்சியான க்ளைமாக்ஸ். 'நான் காடைக் கறி சாப்பிட மாட்டேன். ஆனால், உன் மகன் செருப்பு வாங்க இதை வைத்துக் கொள்’ என்று பணம் கொடுக்கும் பூக்காரப் பாட்டி, ஒரு வீட்டு வாசலில் புத்தம் புது ஷூக்களைப் பார்த்ததும் குரல் கம்ம இடத்தைக் காலி செய்யும் காசி என மனித உணர்வுகளை உருக்கமாகப் பதிவுசெய்திருக்கிறார்கள். தரமான முயற்சி!  

விகடன் வரவேற்பறை