Published:Updated:

அழகாக அறிவோம் ஆங்கிலம் !

முழுமதி மணியன் படங்கள் : என்.ஜி.மணிகண்டன்

##~##

முதல் அத்தியாயத்தில் ப்ரொநவுன் (Pronoun) எனப்படும் பிரதிப் பெயர்ச்சொற்களை வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டோம். இப்போது, Noun&-ஐ தொடர்ந்து வருகின்ற Verb (வெர்ப்) எனப்படும் வினைச்சொல்லை வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வோமா?

Verb-ல் இரண்டு வகை உண்டு. அவை Main Verb (மெயின் வெர்ப்) மற்றும் Helping Verb(ஹெல்ப்பிங் வெர்ப்) ஆகும். மெயின் வெர்ப் என்பதை வினைச்சொல் என்றும், ஹெல்ப்பிங் வெர்ப் என்பதை துணை வினைச்சொல் என்றும் குறிப்பிடலாம்.

ஹெல்ப்பிங் வெர்ப்பற்றி முதலில் தெரிந்துகொள்வோம். ஏனென்றால், இந்தச் சொற்கள் ஒவ்வொரு வாக்கியத்திலும் வந்துகொண்டே இருக்கும். அடிக்கடி வரக்கூடிய சொற்களை வாசிக்கத் தெரிந்துகொள்ளும்போது, நமக்கு தன்னம்பிக்கை ஏற்படும். அது, நம் ஆங்கில வாசிப்புத் திறனை மேம்படுத்தும்.

Helping Verb :

‘do’ forms - do, does,
did ‘have’ form -
have, has, had

அழகாக அறிவோம் ஆங்கிலம் !

இந்தச் சொற்கள் மெயின் வெர்ப் உடன் சேர்ந்து, செயல் நடைபெற்ற காலத்தை Tense (டென்ஸ்) உணர்த்தும் பணியைச் செய்கின்றன. முதலில், இந்தச் சொற்களை வாசிக்கவும் எழுதவும் தெரிந்துகொள்வோம். பின்னர், இந்தச் சொற்களைப் பயன்படுத்துவதுபற்றி பார்த்துக்கொள்ளலாம்.

d,o - do(டு)

(do என்பதன் பொதுவான அர்த்தம் - செய்)
d,o,e,s - does (டஸ்)
d,i,d - did(டிட்)  

('லட்டு’ என்பதை வாசிக்கும்போது உண்டாகும் லபீடு உச்சரிப்பைப் போல், டிட் என்பதை உச்சரிக்க வேண்டும்)

h,a,v,e - have(ஹேவ்)
(have என்பதன் பொதுவான அர்த்தம் - பெற்றிரு)
h,a,s - has (ஹேஸ்)
h,a,d - had (ஹேட்)

(ஹேட் என்பதில் 'ட்’-ஐ லபீடு  உச்சரிப்பைப் போல் உச்சரிக்க வேண்டும்)

அழகாக அறிவோம் ஆங்கிலம் !

இனி, ஹெல்ப்பிங் வெர்ப்-ஐ எழுதிப் பழகுவோம். அடுத்த பக்கத்தில் உள்ள இரண்டு அட்டவணைகளிலும் பயிற்சி செய்யுங்கள். ஓர் அட்டவணைக்கு இரண்டு நாட்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது, ஹெல்ப்பிங் வெர்ப் சொற்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் வரை நடைபெற வேண்டும்.

மேலே உள்ள இரண்டு அட்டவணைகளிலும் எழுத்துகளை உச்சரித்துக்கொண்டே எழுத வேண்டும். இந்தப் பயிற்சிக்குப் பிறகு, ஓர் ஆங்கில நாளிதழின் ஒரு பக்கத்தை எடுத்துக்கொண்டு, அதில் இந்தச் சொற்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அவற்றைப் பென்சிலால் வட்டமிடுங்கள். இதனால், ஹெல்ப்பிங் வெர்ப் சொற்களைப் பார்த்தவுடன் சொல்லும் திறன் உங்களுக்குள் வந்துவிடும்.

நமக்குத் தெரிந்த தமிழ் மொழியின் உதவியுடன் மேற்கண்ட சொற்களை உச்சரித்தால், எளிதாகவும் விரைவாகவும் வாசிக்கலாம்.

(தொடர்ந்து அறிவோம்...)