ஸ்பெஷல் 1
ரெகுலர்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ரீடர்ஸ், ஓவியங்கள்: சேகர்

##~##

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

150

 சந்தோஷத்துக்கு வேட்டு வைத்த சட்டை!

கணவருக்குத் தெரியாமல் பேன்ட், ஷர்ட் எடுத்த நான், பிறந்த நாளன்று வாழ்த்துச் சொல்லி, அவரிடம் சர்ப்ரைஸாக கொடுத்தேன். சந்தோஷமாக வாங்கிக் கொண்டவர், அதை அணிந்தபோது... ஏமாற்றம்தான் மிஞ்சியது. பேன்ட், ஷர்ட் இரண்டுமே அவருக்குப் பொருந்தாமல், லூஸாக இருந்தது. ''என்னுடைய சைஸுக்கான ஆடைதான். ஆனாலும், ஒவ்வொரு பிராண்ட்டுக்கும் கட்டிங் காரணமாக அது வித்தியாசப்படும். ஒரு பிராண்டில் 40 சைஸ் சட்டை எடுத்தால், அது 38 சைஸ் உள்ளவருக்கே பொருந்தும். இன்னொரு பிராண்டில் அதே 40 சைஸ் சட்டை, 42 சைஸ் உள்ளவருக்கு பொருந்தும். எனவே, அணிந்து பார்த்துதான் வாங்க வேண்டும்'' என்று சொன்னார் கணவர்.

அனுபவங்கள் பேசுகின்றன!

'சரி, அதை மாற்றிவிடலாம்’ என்று யோசித்தபோது...'பிரைஸ் டேக்’ எனப்படும் விலை அட்டையை வெட்டிவிட்டிருந்தோம். பில்லை கொடுத்து கேட்டுப் பார்க்கலாம் என்று கடைக்குச் சென்றால், ''பில் இருந்தாலும் பிரைஸ் டேக் கட்டாயமாக வேண்டும். அப்போது தான் மாற்றித் தரப்படும்'' என்று கறாராகச் சொல்லிவிட்டனர்.

இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்றெண்ணி 1,500 ரூபாய்க்கு உடை வாங்கி வீணாகி எரிச்சல்அடைந்ததுதான் மிச்சம். ''எப்போது ஆடைகள் வாங்கினாலும் அணிந்து சரி பார்த்து, சாயம் போகாமலிருக்கிறதா என்பது வரை உறுதிபடுத்திக் கொள்ளும்வரை... பில், பிரைஸ் டேக் போன்றவற்றை பத்திரப்படுத்த வேண்டும்' என்பதை மனதில் ஏற்றிக்கொண்டேன்.

- உமா ஜெகதீசன், திருச்சி

சபாஷ் வளர்ப்பு!

காரைக்காலில் நடந்த உறவினர் வீட்டுத் திருமணத்தில், முதல் நாள் மணமேடையில் குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஐந்து வயதுக் குழந்தை கால் இடறி மேடைப் படியில் விழ, நெற்றியின் நடுப்பகுதியில் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்ட

அனுபவங்கள் பேசுகின்றன!

ஆரம்பித்தது. அனைவரும் செய்வதறியாமல் பதற, தன் அறையிலிருந்து முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்த மணப்பெண், நேர்த்தியாக முதலுதவி செய்து, தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இத்தனைக்கும் அந்தப் பெண், கல்லூரியில் துணைப் பேராசிரியராகத்தான் பணிபுரிகிறார். பிறகெப்படி, அத்தனை நேர்த்தியாக முதலுதவி செய்ய முடிந்தது?

''என்னுடைய மூன்று மகள்களுக்குமே அவர்களுடைய 16-வது வயதில், தனியார் மருத்துவமனையில் முதலுதவிப் பயிற்சியைக் கொடுத்துவிட்டேன். சொல்லப் போனால், பள்ளி மாணவர்கள் அனைவருக்குமே இந்தப் பயிற்சியைக் கட்டாயமாக்கலாம்’ என்று விளக்கம் தந்தார் மணப்பெண்ணின் தந்தை!

அருமையான யோசனைதானே?!

- சக்தி சரயு அருண்மொழி, திருச்சி

விருந்தோம்பல் முக்கியம்!

சமீபத்தில் நண்பரின் மகன் திருமணத்துக்காக வெளியூர் சென்றிருந்தோம். அண்ணனின் திருமணத்துக்காக தன் தோழிகளையும் அழைத்திருந்தாள் நண்பரின் மகள். திருமணம் முடித்து ரயிலில் திரும்பியபோது, அந்தப் பெண்களும் எங்களுடன்தான் ரயிலில் வந்தனர்.

அனுபவங்கள் பேசுகின்றன!

அவர்கள் அனைவரும் இறுக்கமாக இருக்க, விசாரித்தேன். ''ஆன்ட்டி... எங்க ஃப்ரெண்டு வற்புறுத்திக் கூப்பிட்டதாலதான் எல்லார் வீட்டுலயும் எங்களை இவ்வளவு தூரம் அனுப்பி வெச்சாங்க. ஆனா, கல்யாணத்துல எங்களுக்கு தங்குறதுக்கு, குளிச்சு கிளம்புறதுக்கான வசதிகளைப் பார்த்து செய்துகொடுக்க ஆள் இல்லாம திணறிட்டோம். யாரும் 'சாப்பிட்டீங்களா..?’னுகூட ஒரு வார்த்தை கேட்கல. தோழியோ... அண்ணனோட கல்யாண வேலைகள்ல 'பிஸி’யா இருந்தா'' என்றனர் வேதனையுடன்.

வீட்டு விசேஷங்களுக்கு நண்பர்கள், தோழிகளை அழைக்கும் இளசுகளே... அவர்களை மனம் கோணாமல் விருந்தோம்ப வேண்டியது உங்கள் பொறுப்பு இல்லையா? அப்படி கவனிக்க இயலாது எனில், அழைக்காமல் விட்டுவிடலாம், நட்பாவது பாதிக்காமல் இருக்கும் இல்லையா?!

- சுபா தியாகராஜன், சேலம்

சேவைப் பணியில் கேளிக்கையா?

அனுபவங்கள் பேசுகின்றன!

தனியார் மருத்துவமனை ஒன்றில் எனக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. ஓர் இரவு முழுவதும் ஐ.சி.யூ-வில் இருந்த எனக்குத் துணையாக ஒரு நர்ஸை அமர்த்திச் சென்றிருந்தார் டாக்டர். அந்த நர்ஸோ தன்னுடன் வேலை பார்க்கும் மற்ற செவிலியர்களையும் அதே ஐ.சி.யூ வார்டில் ஒன்று சேர்த்து ஜாலி அரட்டை அடிக்க, அறுவை சிகிச்சை ரணத்தை மறக்க தூக்கத்துக்கு ஏங்கிக்கொண்டிருந்த எனக்கு, அவர்களின் செயல் வேதனையை அதிகப்படுத்தியது. ''கொஞ்சம் அமைதியா இருங்க...'' என்று அவர்களை அறிவுறுத்தியும், கண்டுகொள்ளவில்லை.

செவிலியர் பணி என்பது, சேவைப் பணி. ஆனால், தன் பணியின் மாண்பை உணராமலிருந்த அந்தப் பெண்களை என்னவென்று நோவது? இந்த விஷயத்தை... மருத்துவர், மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்க அதிக நேரமாகியிருக்காது. என்றாலும், அவர்களின் வேலைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அவ்வாறு செய்யவில்லை. இதைப் படிக்கும் அத்தகைய செவிலியர்கள், இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்!

- தி.சங்கீதா கணேசன், திருச்சி