எங்கள் ஆசிரியர்

'ஹாரிஸன்’ ராமநாதன்
(வாசன் அவர்களின் மைத்துனர்)
திருமதி பட்டம்மாள் வாசன் எனக்குத் தமக்கை முறை. என் தந்தையும் திருமதி பட்டம்மாளின் தந்தையும்
தொழில் துறையில் தனக்கு உதவியவர்களை அவர் எப்போதும் மறந்ததில்லை. ஒருமுறை, ரிலையன்ஸ் கம்பெனியில் மோட்டார் வண்டி ஒன்றை வாங்க முடிவு செய்தார். ''வெளியூரில் வாங்குங்கள். ஐயாயிரம் ரூபாய் மிச்சமாகும்'' என்று கூறினார்கள் நண்பர்கள். ரிலையன்ஸ் மோட்டார் கம்பெனியை எம்.சி.டி.சிதம் பரம் செட்டியார் நடத்தி வந்தார். ''அவர் எனக்குத் தொழிலில் பல விதங்களில் உதவி இருக்கிறார். எனவே, இங்கேதான் வாங்க வேண்டும்; ஐயாயிரம் பெரிதல்ல!'' என்று சொல்லி, அங்கேயே கார் வாங்கினார் வாசன்.
உணவு விஷயத்தில் மிகச் சிறந்த ரசிகர் வாசன். நன்கு ரசித் துச் சாப்பிடுவார். அதே சமயம், வேலை என்று வந்துவிட்டால், சாப்பாட்டைப் பற்றிக் கவலையே படமாட்டார். 'சந்திரலேகா’ எடுத்துக்கொண்டு இருந்தபோது, பல நேரங்களில் கிரேனிலேயே உட்கார்ந்திருப்பார். கீழே இருந்து டிபன் பாக்ஸில் சாப்பாட்டை அனுப்புவார்கள்

தனது அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வீட்டுத் திருமணங்களுக்குத் தவறாமல் போவார். ஏழை வீட்டுத் திருமண மானாலும், அங்கேயே சாப்பிடு வார். அங்கே, அந்த குடும்பத்தார் இவருடன் நின்றுகொண்டு படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுவார் கள். மறுக்காமல் நின்று, ''சரியாக எடுத்தீர்களா? நன்றாக விழுந்திருக்குமா?'' என்று புகைப்படக்காரரைக் கேட்டுவிட்டே விடைபெறு வார். அவர்களின் ஆர்வத்தைக் குறைத்து மதிப்பிடமாட்டார்.
ஏதாவது ஒரு புதிய விஷயத்தைச் செய்யத் தொடங்கும் முன், அதைப் பற்றி ஒரு சிறு தகவலும் விடாமல் முழுவதுமாகத் தெரிந்து வைத்திருப் பார். நான் ஒரு சமயம் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் சம்பந்தமாக அவரி டம் பேசப் போனேன். எனக்குத் தெரிந்தவற்றை அவரிடம் அளந் தேன். நான் பேசி முடித்தவுடன், ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து, அந்தக் கம்பெனியை நடத்துகிறவர் களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியும் பாமர னுக்கும் புரியும்படி தெளிவாக விளக்கிச் சொன்னார். அதற்கு மேல் நான் ஒரு வார்த்தை பேச வில்லை.
சமுதாயத்திற்கு உதவுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் தவறாமல் பயன்படுத்தினார். அண்மையில் உலகத் தமிழ் மகா நாட்டின்போது, அவருக்கு உடல் நிலை சரியில்லாதிருந்தும், ஊர்வலப் பொறுப்புகளை ஏற்றிருந்தார். சாப் பாட்டைக்கூட விட்டுவிட்டு, அலங் கார வண்டிகளுக்காக இரவும் பகலும் வேலை செய்தார். 'ஒரு கடமையை ஏற்ற பிறகு, அதைச் சரியாக, முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும்’ என்பது அவரு டைய திடமான எண்ணம். ஒரு சுத்தமான கர்ம வீரன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கியவர் வாசன்.