மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

##~##

மிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவை, அடித்தட்டு மக்களின் நோக்கில் ஆய்வு செய்துவருபவர் பேராசிரியர் தொ.பரமசிவன். மிகக் கறாராக நூல் பிடித்து வரலாற்றை அணுகாமல் நெகிழ்ச்சிப் போக்கோடு பன்மைத்தன்மையைப் பேணுவது தொ.பரமசிவத்தின் சிறப்பு. அதனாலேயே தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் என அனைவராலும் கொண்டாடப்படுபவராக இருக்கிறார் தொ.ப.

'செவ்வி’ என்ற இந்த நூலில் அவருடைய ஏழு நேர்காணல்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். பண்பாடு, வரலாறு, மதம், சிறுதெய்வ மரபு... என நாம் அறிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்களைச் சுமந்திருக்கிறது இந்த நூல். தன்னுடைய வளர்ப்பு தொடர்பான கேள்விக்கு,  ''சமய நல்லிணக்கம்’ என்பது பெரியாரைப் படித்து எனக்கு வரவில்லை. அது இயல்பாகவே என் வீட்டில் இருந்தது. இந்த ஊரில்கூட இதைப் பார்க்கலாம். சவேரியார் கோயில் திருநாளில் மற்ற மதத்துக்காரர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். கிறிஸ்துமஸுக்கு 'பாலகன் பிறப்பு’னு இருக்கும். பிறந்த குழந்தையைப் பார்க்க சோப்பு, பால், பவுடர் டின் எல்லாம் வாங்கிட்டு எல்லா சாதி, மத மக்களும் போவாங்க. இந்தச் சமய நல்லிணக்கம், பெண்களிடம்தான் இயல்பா இருக்கு. நம்மில் சரிபாதியாக பெண்கள் இருக்கிறதாலதான் இங்க மதக் கலவரங்கள் இல்லை’

விகடன் வரவேற்பறை

என்று தமிழகத்தின் தென்பகுதி மக்களிடம் நிலவும் எல்லை கடந்த பண்பாட்டு நினைவுகளைச் சொல்கிறார்.

13-ம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்தில் செல்வாக்குச் செலுத்திய பண்பாட்டுப் படையெடுப்புகள் தொடர்பாகப் பேசும்போது, 'விஜயநகர ஆட்சியில் பிராமணர்கள் தொடங்கி ஒடுக்கப்பட்டவர்கள் வரை தெலுங்கு மக்கள் தமிழகத்தில் குடியேறினார்கள். அவர்களுடைய வருகைக்குப் பிறகுதான் நிறைய விஷயங்கள் புராண அடிப்படையிலும் ஆகம அடிப்படையிலும் மாற்றப்பட்டன. அதற்கு முன்பு காரடையான் நோன்பும் வரலட்சுமி நோன்பும் இங்கே கிடையாது. தீபாவளிகூடச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதில்லை. விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் இவர்களின் வருகைக்குப் பின்னர், தமிழகத்துக்கு ஏற்பட்ட பாதகம்தான் அதிகம். சாதகமான அம்சம் என்று பார்த்தால், அங்கிருந்து வந்த உழைக்கும் மக்கள் வேளாண்மைக்கும் நெசவுக்கும் செய்த தொண்டுகள் அதிகம். குறிப்பாக, சௌராஷ்டிரர்களின் பங்கு கணிசமானது’ என்கிறார்.

கருணாநிதி ஆட்சியில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பங்கேற்காதது தொடர்பான கேள்வியன்றுக்கு இப்படிப் பதில் சொல்கிறார். 'ஏனெனில், தூக்கமில்லாமல் கழிந்த இரவுகள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகின்றன. அதனால் அதில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று முடிவெடுத்தேன். கலைஞர் அழைத்ததினால் சிவத்தம்பி போகலாம். நான் போக மாட்டேன்!’

நாட்டார் தெய்வங்கள், மறைக்கப்பட்ட மக்கள் பண்பாடு, மன்னர்கள் பற்றிய மதிப்பீடுகள், பெரியாரை கிராம தெய்வ நோக்கில் அணுகல்... எனக் காய்த்தல் உவத்தல் இன்றி வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் தொ.ப-வோடு பயணிக்கலாம்!

விகடன் வரவேற்பறை

பிரியாணி

இசை: யுவன்ஷங்கர் ராஜா

வெளியீடு: சோனி மியூஸிக்  விலை:

விகடன் வரவேற்பறை

99

னது 100-வது ஆல்பத்தின் ஓப்பனிங்குக்கு புல்லாங்குழல் மூலம் அதிரடி மகுடி வாசிக்கிறார் யுவன். 'கம் அண்ட் கெட் சம் பிரியாணி...’ பாடலின் மெட்டாலிக் பீட் இசைக்குத் தேவையான மின்சாரம் பாய்ச்சுகின்றன தன்விஷா, பவதாரிணி, விலாசினியின் குரல்கள். இடையிடையே புல்லாங்குழலின் குஷி விசில்கள்... கலாட்டா. 'சரோஜா’ படத்தின் 'நிமிர்ந்து நில்...’ சாயலில் ஒலிக்கும் 'எதிர்த்து நில்...’ பாடலுக்குக் குரல் கொடுத்திருக்கும் விஜய் ஆண்டனி, இமான், ஜி.வி.பிரகாஷ், தமன் ஆகிய இளைஞர்களின் கைக் குலுக்கலுக்குக் கைத்தட்டல்கள். ரொம்பவே டர்ட்டி பாடல் - 'மிஸ்ஸிசிபி மிஸ்ஸிசிபி நதியிது...’! 'செய்தொழில் பார்த்து தேவி சொல்லணும் சம்மதம்’, 'தொப்புளின் மேலே தினமும் சுத்தலாம் பம்பரம்’, 'நீ செக் புக்கு... நான் உன்னைப் படிக்கப்போறேன்’, 'நீ செக்கு புக்கு... நான் உன்னைக் கிழிக்கப்போறேன்’ என வாலிபர்களின் கருத்துக்கு விருந்து வைக்கும் பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர்... வேறு யார் 'வாலிபக் கவிஞர்’ வாலிதான்! பாடகராக கார்த்தி ஸ்கோர் செய்ய, ப்ரியா ஹிமேஷ் ஆங்காங்கே முனக, பிரேம்ஜி அமரன் பாடலிலும் ஜோக் அடிக்கிறார்.

'நநநந...’ ஒரே பாடல்தான்... ஆனால், மூன்று விதமாக பிரசென்ட் செய்கிறார் யுவன். இதன் அதிரடி எக்ஸ்பிரஸ் வெர்ஷனில் 'சென்னை-28’ முதல் 'மங்காத்தா’ வரையிலான தீம் இசைகளை நினைவூட்டிவிட்டு, 'போடா... ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்’ என்று செய்தி சொல்லி முடிக்கிறார்கள் இந்தக் குறும்பு டீம்!

99-வது படங்கள் வரையிலான ஹிட் ஃபார்முலா இனி என்னிடம் இருக்காது என்று உணர்த்தி, வசீகரிக்க வைக்கும் யுவனின் 100-வது ஆல்பம்!

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

'கண்ணீரின் விலை’

இயக்கம்: வி.ஆர்.பி.மனோகர்  

வெளியீடு: ஸ்டுடியோ சந்தோஷ்

கையில் காசு இல்லாமல் பாரில் அடுத்தவர்களின் மதுவைத் திருடிக் குடிக்கும் அளவுக்கு நோய் முற்றிய குடிநோயாளி சுந்தர். அவனைச் சந்திக்கும் பால்ய நண்பன் சிவா, சுந்தர் மகளின் அலங்கோல நிலையைப் பார்த்து அதிர்கிறான். குடிநோயாளி அப்பா, ஓடிப்போன அம்மா, பள்ளி செல்லமுடியாத வறுமை, பாலியல் தொந்தரவுகள் என அந்தச் சிறுமியின் வாழ்க்கையே நரகமாக இருக்கிறது. இறுதியில் சுந்தர் பிழைத்தாரா, சிறுமியின் கனவு நிறைவேறியதா என்பது க்ளைமாக்ஸ். குடிப்பழக்கம் குடிப்பவர்களை மட்டும் அல்லாது, மொத்தக் குடும்பத்தையும் சீரழிக்கும் துயரத்தை, பதைபதைக்கச் சொல்லியிருக்கிறார்கள்!

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

www.villavan.wordpress.com

அரசியலின் சல்லி வேர்கள்!

நீங்கள் அணியும் பிராண்டட் உடைகளும், தெருவோர ப்ளாட்ஃபாரத்தில் விற்கப்படும் உடைகளும் தயாராகும் இடம் எப்படிப்பட்டது? இரண்டுக்கும் உள்ள விலை வித்தியாசம், அவற்றைத் தயாரிக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தில் எதிரொலிக்கிறதா? திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வில்லவன், தன் சொந்த அனுபவத்திலிருந்து இவற்றுக்குப் பதில் சொல்கிறார். வெறும் கருத்தாக இல்லாமல், புள்ளிவிவரத் தரவுகளுடன்கூடிய இவரது கட்டுரைகள் அறிவைச் செறிவூட்டுபவை. ஈழ அரசியல், மாணவர் போராட்டம் தொடங்கி, பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டது வரையிலும் தனித்த பார்வையுடன் அவற்றை அணுகியுள்ளார். மீனவர் படுகொலை, என்கவுன்ட்டர், டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு, கமல்ஹாசன் விஸ்வரூப பிரச்னை, அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி உள்ளிட்ட அன்றாட சமூக நடப்புகளின் பின்னுள்ள அரசியலின் சல்லிவேர்கள் அறிய, 'வில்லவன் கட்டுரைகள்’ உதவும்!