Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


விகடன் பொக்கிஷம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

ஊழல் எப்படி ஒழியும்?

தலையங்கம்

மாவீரன் சத்ரபதி சிவாஜி பிறந்த மராத்தி மண்ணில், இன்றைய ஆட்சியாளரின் மானம் மண்ணில் புதைந்துகொண்டிருக்கிறது!

அந்துலேயின் அறக்கட்டளை ஊழல் உலகப் புகழ்பெற்றதாகும். குற்றச்சாட்டுகள் வலுத்து, ஊழல் திருவிளையாடல்கள் அம்பலப்படுத்தப்பட்ட பின்னரும், அவர் பதவியை விடுவதாக இல்லை. காங்கிரஸ் மேலிடமும் அவரைப் பதவி விலகும்படி கூறவில்லை. மாறாக, அவருக்குப் பாதுகாப்பாகவே இருந்து வந்தது. இறுதியில், நீதிமன்றம் கடுமை யான தீர்ப்பு அளித்த பிறகுதான் அவர் பதவி விலகினார்.

அதன் பிறகு, அவர் மீது வழக்குத் தொடரப்படுவதைத் தடுப்பதற்காகச் சட்டத்தைக் கூடத் திருத்தலாமா என்று மேலிடம் தீவிரமாகச் சிந்தித்தது, வெட்கக்கேடு!

தற்போது, மகாராஷ்டிர அரசின் உதவி முதல்வராக இருந்தவர், விமானத்திலும் வெளிநாட்டிலும் குடித்துவிட்டு, ஒழுக்கங்கெட்டத்தனமாக நடந்துகொண்டுவிட்டு, தான் மகா உத்தமர் போலவும், அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக யாரோ தன் மீது வீண் அபவாதத்தைக் கிளப்பிவிட்டிருப்பதாகவும் அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கிறார். பதவியைத் துறந்துவிட்டுத் தன் ஆதரவாளர்களைச் சேர்த்துக்கொண்டு, 'கட்சியைப் பிரிப்பேன்' என்று மேலிடத்தைப் பயமுறுத்திக்கொண்டிருக்கிறார். இதற்கு அந்துலே பக்கபலமாக இருந்து வருகிறார்.

ஊழல் புரிபவர்களையும், ஒழுக்கங்கெட்டவர்களையும் பதவி விலகச் செய்வது மக்களை ஏமாற்றும் கண்துடைப்புப் செயலேயாகும்! அவர்களை வைத்துக்கொண்டு கட்சியில் போட்டா போட்டியை வளர்ப்பதும், பிரித்தாள நினைப்பதும் மிகக் கேவலமான அரசியலாகும். உண்மையாக ஊழலையும் ஒழுங்கீனத்தையும் ஒழிக்க நினைப்பவர்கள், இத்தகையவர்களைக் கட்சியைவிட்டே விலக்கிவிட வேண்டும். அதுதான் நேர்மை!

தலையங்கம்
தலையங்கம்