Published:Updated:

டின்னர் : விருந்தில் ஒரு மருந்து!

டின்னர் : விருந்தில் ஒரு மருந்து!


விகடன் பொக்கிஷம்
டின்னர் : விருந்தில் ஒரு மருந்து!
டின்னர் : விருந்தில் ஒரு மருந்து!
டின்னர் : விருந்தில் ஒரு மருந்து!
டின்னர் : விருந்தில் ஒரு மருந்து!
டின்னர் : விருந்தில் ஒரு மருந்து!

சிந்திப்பது, செயல்படுவது என்று எல்லாவற்றிலுமே வித்தி யாசமான- சில நேரங்களில்

இன்ப அதிர்ச்சியைத் தந்துவிடு கிற மனிதர்- கே.பாக்யராஜ். டின்னரைப் பற்றிய அவரது எண்ண வீச்சுகளும் முற்றிலும் வித்தியாசமானவையே!

"டின்னருக்கு நீங்கள் யாரை அழைப்பீர்கள்?"

"நாலு பேரைக் கூப்பிடலா மென்று நினைக்கிறேன். பரவா யில்லையா?"

"ஓ! தாராளமாக..."

சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டவர், பாடத் துவங்கும் முன் பாடகர் தொண்டையைக் கனைத்துக்கொள்வது போலச் செருமிக்கொண்டு பேசத் தொடங்கினார்.

"பாபர் மசூதியை இடித்தார்கள் இல்லையா... அது சம்பந்தப்பட்ட இரண்டு பேரையும், பம்பாயில் குண்டுவெடிப்புகள் நடந்தனவே... அது தொடர்பான இரண்டு பேரையும் அழைக்க விரும்பு கிறேன். ஆனால், அவங்கதான் அந்த அசம்பாவிதங்களுக்குக் காரணமானவர்கள்னு நமக்குத் தெரியும்கிறதை எக்ஸ்போஸ் பண்ணிக்காமல், நமக்கு எதுவுமே தெரியாதது மாதிரி அவங்களைக் கூட்டிட்டு வரணும்..."

டின்னர் : விருந்தில் ஒரு மருந்து!

"அவர்களைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?"

"காரணம் இல்லாமலா? போகப் போக நீங்களும் தெரிஞ்சுக்குவீங்க; அவங்களும் தெரிஞ்சுக்குவாங்க!"

"டின்னரை எங்கே வைத்துக் கொள்வீர்கள்..?"

"முக்கியமான காரணத்துக்காக நடக்கிற விருந்தாச்சே... அதனால கண்டிப்பா எங்க வீட்லதான்!"

"விருந்தாளிகளைத் தடபுடலாக வரவேற்பீர்களோ?"

"நான், என் மனைவி பூர்ணிமா, மகள் சரண்யா, மகன் சாந்தனு, மைத்துனர் ஸ்ரீராம், அவர் குடும் பம்... இப்படி எங்க குடும்பத்தைச் சேர்ந்த எல்லாருமா வரவேற்போம்.

முதல்ல விருந்தினர்களை ஒரு அறைக்குள்ளே கூட்டிட்டுப் போவேன். அங்கே அழகழகா நிறைய குழந்தைகள் இருப்பாங்க. குழந்தைகள் சூது- வாது அறியா தவர்கள். அவங்களுக்குத் தெரிவ தெல்லாம் இரண்டுதான்... ஒண்ணு -சிரிப்பு, இன்னொண்ணு-அழுகை. வளர வளரத்தானே சூது, வாது, கோபம், சபலம்னு வம்பெல்லாம் வருது. சிரித்து விளையாடிக்கிட் டிருக்கிற அந்தக் குழந்தைகளைப் பார்த்ததும், வந்த நாலு பேருக்கும் மனசுக்குக் குதூகலமா இருக்கும். இதெல்லாம் யாரோட குழந்தை கள்னு கேப்பாங்க. எல்லாம் நம்ம குழந்தைகள்தான்னு சொல்வேன்.

அழகா, ஆனந்தமா இருக்கிற குழந்தைகளைப் பார்த்ததும் யாருக்கும் தூக்கிக் கொஞ்சணும் போல இருக்குமில்லீங்களா..? ஆர் வத்தோடு தூக்கிக் கொஞ்சுவாங்க. ஒரு போட்டோகிராபரை வெச்சு, அதை விதவிதமா படம் எடுத்துக் குவேன். அப்புறம், டின்னருக்கு மாடியில் இருக்கிற ஹாலுக்கு அழைச்சுட்டுப் போவேன்!"

"டின்னரில் என்னென்ன அயிட்டங்கள் இருக்கும்?"

"அவங்க என்னெல்லாம் விரும்பறாங்களோ அதெல்லாம் இருக்கும். மதுபானம் வேணும்னா அதையும் வரவழைச்சுக் கொடுப் போம். வெஜிடேரியன், நான்- வெஜிடேரியன், சைனீஸ் ப்ரிப ரேஷன்... இப்படி எல்லா வகை யான அயிட்டங்களும் இருக் கும்..!"

டின்னர் : விருந்தில் ஒரு மருந்து!

"வீட்டிலேயே விருந்து தயா ரிக்கப்படுமா?"

"வீட்டிலேயும் தயாரிப்போம். வெளியே ஓட்டல்களிலிருந்தும் வரவழைச்சுக் கொடுப்போம். எல்லா டேஸ்ட்டும் வேணுங் களே..!"

"சரி, அவர்களுடன் என்ன பேசுவீர்கள்?"

"காஷுவலா பேசிக்கிட்டிருப் போம். சாப்பாடெல்லாம் முடிஞ்சதுக்கப்புறம், வெற்றிலை போட றவங்களுக்கு வெற்றிலை- பாக்கு. பீடா கேட்டால், பீடா! சிகரெட் பிடிக்கறவங்க, பிடிக்கலாம். எல் லாவற்றையும் சுவாரஸ்யமா அனுபவிக்கையிலே, கீழே அவங்க பார்த்த அந்தக் குழந்தைகளைப் பற்றிப் பேச்செடுப்பேன்..."

"என்ன சொல்லுவீங்க?"

"அந்தக் குழந்தைங்க யார் தெரியுமா... பாபர் மசூதி இடிக்கப் பட்டப்போ ஏற்பட்ட கலவரங் களில், பாம் வெடிச்சப்போ ஏற் பட்ட விபரீதத்திலே செத்துப் போனவங்களோட குழந்தைங்க. அப்பா, அம்மா, உற்றார்- உறவின ரைப் பறிகொடுத்துவிட்டு அநா தையாகிப்போன குழந்தைங்க அவங்க'ன்னு சொல்லுவேன்.

நான் சொன்னதைக் கேட்டதும், அவங்களுக்கு மனசு 'திக்'குங்கும். 'யாரோ, எதுக்காகவோ, ஒரு கோபத்திலே போய் எதையோ இடிக்க... இன்னொரு சாரார் அவங்க மேல உள்ள கோபத்திலே குண்டு வெடிக்க... இதனால பாதிக்கப்படறது நம்ம மக்கள் தானே! அடுத்த ஜெனரேஷன் எவ்வளவு பாதிப்புக்குள்ளாகி அநாதையா நிக்கறாங்க... அது எனக்கு ரொம்ப ஃபீலிங்கா இருந் தது. அதனால பரவாயில்லே, நீங்க ஒண்ணும் ஃபீல் பண்ணிக்கா தீங்க'ன்னு சொல்லுவேன்.

நாம செஞ்சது தப்புன்னு கொஞ்சமாவது அவங்க மனசில படுமில்லையா? சாதி, மத விஷயம் எதையும் சொல்றது நம்ம நோக் கமல்ல. என்ன காரணம்னாலும் ஒரு ஜெனரேஷனே பாதிக்கப்படு துங்கறதைச் சம்பந்தப்பட்டவங் களுக்கு உணர்த்தணும்கிறது தானே எங்க டின்னரோட நோக்கமே..!"

'கடைசியா அவங்களுக்குப் பரிசு ஏதாவது கொடுப்பீர்களா?"

"ஆமாம். குழந்தைகளைப் பார்த்து மகிழ்ந்து, தூக்கிக் கொஞ்சினப்போ எடுத்த போட்டோவை அவசர அவசரமா கழுவி, பிரின்ட் போட்டு எடுத்து வரச் செய்து, அந்தப் படங்களை அவங்களுக்குப் பரிசா கொடுப் பேன். அதைப் பார்த்ததும் நிச்ச யமா அவங்க மனசு கொஞ்சமா வது கலங்கும். அடுத்த முறை கோபம் வர்றப்போ, பழைய வெறி இருக்காது. அதுதானே நானும் எதிர்பார்க்கறது! அதுக்கு மேல நாங்க எதுவும் பேசமாட் டோம். சைலன்ட்டா அவங்களை வழியனுப்பி வெச்சுடுவோம்..!" என்று சொல்லிவிட்டு மௌனச் சிந்தனையில் ஆழ்ந்தார் பாக்யராஜ்.

டின்னர் : விருந்தில் ஒரு மருந்து!
டின்னர் : விருந்தில் ஒரு மருந்து!
- 'புல்லட் அங்கிள்'