யானைகளை இன்னின்ன காரியங்களுக்குத்தான் பயன் படுத்தமுடியும் என்று யாராவது
சொன்னால், நிச்சயம் தேவரிடம் தோற்றுவிடுவார்கள். யானையை அத்தனை புதுமையான காரியங்க ளையும் செய்ய வைத்திருக்கிறார் தேவர். யானை பந்தடிக்கிறது; குழந்தைக்குத் தொட்டில் ஆட்டு கிறது; கதாநாயகிக்குத் தலைவாரி விடுகிறது; சங்கீதக் கச்சேரி செய் கிறது. அது என்னதான் செய்ய வில்லை? வழக்கமாக சினிமாக் களில் வரும் தியாகிகள், நெற்றி யில் குண்டடிபட்டுச் சாகிறதைக் கூட, விட்டுவைக்காமல் செய்கி றது!
காதலை வசீகரமான முக பாவங்களாலும், தாய்மைப் பாசத்தை உருக்கமான நடிப் பாலும் சித்திரித்திருக்கிறார் கே.ஆர்.விஜயா. எம்.ஜி.ஆர். உயரே ஏறும் நெருப்புக் காட்சியில், ஒரு மனைவியின் உண்மையான பதைபதைப்பை விஜயாவின் முகத்தில் பார்க்கிறோம். நயமான காட்சி!
|