Published:Updated:

ஸ்டூடன்ட் ஸ்டார்

ஸ்டூடன்ட் ஸ்டார்


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
ஸ்டூடன்ட் ஸ்டார்
ஸ்டூடன்ட் ஸ்டார்
ஸ்டூடன்ட் ஸ்டார்
ந.வினோத்குமார், படம்:வெ.பாலாஜி
ஸ்டூடன்ட் ஸ்டார்
ஸ்டூடன்ட் ஸ்டார்

"எந்த ஒரு விஷயத்திலும் நம்மால இது முடியுமா, முடியாதான்னு பார்க்காம முழு

மனசோட, அர்ப்பணிப்பு உணர்வோட உழைச்சோம்னா, நிச்சயமா நாம வெச்சகுறி தப்பாதுங்க!"- துப்பாக்கி முனையில் தத்துவம் சொல்கிறார் ஆர்த்தி பிலோ. தமிழகத்தின் பெண் 'அபினவ் பிந்த்ரா' ஆகும் கனவு நனவாக உழைத்துக்கொண்டு இருப்பவர். சமீபத்தில் கோவையில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 13 பதக்கங்களைச் சுட்டவர்!

"எட்டாவது படிக்கிறப்போ, சும்மா 15 நாள் கோச்சிங் கேம்ப்னு கோவை ரைஃபிள் கிளப்புக்கு வந்தேன். பயிற்சி முடிந்ததும் நடந்த போட்டியில் அட, நான் சாம்பியன்! குபீர்னு ஒரு நம்பிக்கை வந்துச்சு. அப்புறம் தினமும் தீவிர பயிற்சி ஆரம்பிச்சேன். அந்த வருஷமே நான் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகிட்டேன். நான் எங்கே இருக்கேன், இன்னும் எவ்வளவு தூரம் போகணும்னு ஒரு தெளிவு கிடைச்சுது. அடுத்தடுத்து கலந்துகிட்ட மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிகள் குவிந்தன. தேசிய அளவிலும் பளிச் முன்னேற்றம். மூணாவது முறை நான் கலந்துகிட்ட தேசிய அளவிலான போட்டியில் டீம் கேட்டகரி ஏர் ரைஃபிள் பிரிவில் வெண் கலப் பதக்கம் ஜெயிச்சேன். கோவையில் நடை பெற்ற மாநிலப் போட்டிகளில் 9 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் ஜெயிச்சேன். இப்போ என் அதிகபட்ச ஸ்கோர் 387. இந்த மாதம் நடக்க உள்ள தேசிய அளவிலான தகுதிச் சுற்றுக்கு என்னைத் தயார்படுத்திக்கிட்டு இருக்கேன்.

ஸ்டூடன்ட் ஸ்டார்

ஒரு ஏர் ரைஃபிள்

2 லட்சத்தில் இருந்து

6 லட்சம் வரை விலை இருக்கும். அப்புறம் பயிற்சி செலவுகள்னு இது ஒரு காஸ்ட்லி விளையாட்டுதான். ஆனாலும், செலவுக்குப் பயந்து நம்ம திறமையை அடக்க முடியுமா? இந்த விளையாட்டைப் பொறுத்தவரை அரசாங்க உதவி இருந்தா இன்னும் பல இலக்குகளை எட்டலாம். நான் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறதால, பயிற்சிக்கு நிறைய நேரம் ஒதுக்க முடியிறது இல்லை. ரெண்டு தடவை செமஸ்டரும் போட்டிகளும் முட்டிக்கிட்டதால, இரண்டு தேசிய அளவிலான போட்டிகளை மிஸ் பண்ணேன். ஆனாலும், இப்போ பக்காவா பிளான் பண்ணிட்டு, துப்பாக்கியைக் கையில் எடுத்திருக்கேன். என் குடும்பத்தினர், ஆசிரியர் கள், நண்பர்கள் உதவியோடு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தொடுவேன்னு நம்பிக்கை இருக்கு" என்கிறார் ஆர்த்தி, கண்களில் நம்பிக்கை ஒளிர!

ஸ்டூடன்ட் ஸ்டார்
ஸ்டூடன்ட் ஸ்டார்