'கொடுமையில் கொடுமை முதுமையில் தனிமை' என்பார்கள். வயது ஆக ஆக... பெற்றோர்களை நாமும், நம்மைப் பெற்றோர்களும் விட்டு விலகுவது தவிர்க்க முடியாது என ஆகிவிட்ட இந்த உலகமயமாக்கல் வாழ்க்கைச் சக்கரத்தில், ஒரு நாளில் சில மணி நேரங்களையாவது உங்கள் பெற்றோர்கள், முதியவர்களுக்காகச் செலவிடுங்கள். வேறு எந்த மருத்துவத்தையும்விட, நீங்கள் அவர்களிடம் காட்டும் பரிவு வலிமையானதாக இருக்கும்!" என்கிறார் உஷா.
சமீப காலமாக, பிள்ளைகள் தங்களைச் சரியாகக் கவனித்துக்கொள்வது இல்லை என்று பல பெற்றோர் நீதிமன்றத்தை அணுகுவதாகச் செய்திகள். முதியவர்கள், பெற்றோர்களைக் கை விடுதல்பற்றி சட்டம் என்ன சொல்கிறது? தன் பார்வையைப் பதிவு செய்கிறார் வழக்கறிஞர் ராமலிங்கம்.
"பெற்றவர்களைப் பராமரிப்பது தொடர்பான சட்டம் முன்பு இருந்தே இருக்கிறது. எனினும், அதை அவ்வள வாக யாரும் அணுகவில்லை. காரணம், எந்தப் பெற்றோரும் தங்களின் பிள்ளை கள் மீது புகார் தர விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு மனம் வராது. 18 வயது வரை பிள்ளைகளை பெற்றோர் பராம ரிக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கும் நிலையில், பிள்ளைகளும் பெற்றோர் களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகச் சட்டம் இருந்தால், அதை அதிசயமாகப் பார்க்கத் தேவை இல்லை.
2007-ம் ஆண்டில் 'பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம்' அமல்படுத்தப்பட்டது. பெற் றோரை மட்டுமல்ல; பெற்றோர் இல் லாமல் சில வீடுகளில் தாத்தா, பாட்டி களும் இருப்பார்கள். அவர்களையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிறது சட்டம். ஆனால், தன்னால் தன் குழந் தைகள் நீதிமன்றத்தின் படி ஏறக் கூடாது என்று நினைக்கும் பெற்றோரின் பாசத்தால், இந்தச் சட்டத்தையும் அவ்வளவா கப் பயன்படுத்துவது இல்லை.
முதியோர் இல்லங்களில் பெற்றோரைச் சேர்ப்பது தவறு என எந்தச் சட்டமும் சொல்லவில்லை. சட்டத்தால், இதைச் சரிப் படுத்தவே முடியாது. மேலை நாடுகளில் முதியவர்களுக்கு என சோஷியல் செக்யூரிட்டி திட்டங்கள் பல இருக்கின்றன. ஆனால், இங்கு அப்படி எதுவும் இல்லை. வாழ்வின் கடைசிக் காலத்தில் பணம் இல்லை என்பதற்காக, முதியோர்கள், பெற்றோர்களைப் புறம் தள்ளுவது வருத்தத்தைத் தரக்கூடிய விஷயம்!" என்கிறார் ராமலிங்கம்.
'முதுமையை அழுகிய பழமாக நினைக்க வேண்டாம். கனிந்த பழமாகப் பாருங்கள்' என்பார் எழுத்தாளர் பாலகுமாரன். ஆண்டுகள் ஆக ஆக, வயது ஏறிக்கொண்டேதான் இருக்கும். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் முதுமையை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். குழந்தைகள் எதையும் பெற்றோரைப் பார்த்துதான் கற்றுக்கொள்கிறார்கள் என்கிறது உளவியல். இன்று உங்கள் பெற்றோரை நடத்தும் விதத்தைப் பார்த்துதான் நாளை உங்கள் குழந் தையும் உங்களை நடத்தும். வயது என்பது உடலுக்குத்தான். உள்ளத்துக்கு அல்ல. அன்பு செலுத்தும் கள்ளம் கபடமற்ற குழந்தை மனசு இருந்தால், வயது என்ன பெரிய வயது?
பெற்றோர்/முதியவர்கள் கவனத்துக்குச் சில...
| |