Published:Updated:

சபிதா இப்ராகிம் கவிதைகள்

சபிதா இப்ராகிம் கவிதைகள்


கவிதைகள்
சபிதா இப்ராகிம் கவிதைகள்
சபிதா இப்ராகிம் கவிதைகள்
சபிதா இப்ராகிம்
ஒவியங்கள்:எஸ்.இளைராஜா
சபிதா இப்ராகிம் கவிதைகள்

கேள்வி ஞானம்

படையல்
திதி நாளன்று
அம்மாவுக்கு...
'மற்ற நாட்களில்
பசிக்காதா பாட்டிக்கு?'
என்கிறாள்
என் தேவதைக் குழந்தை!

சேமிப்பு

கீரை விற்ற கிழவியிடம்
பேரம் பேசி சேமித்தேன்
ஒரு ரூபாய் பணமும்
ஒரு மூட்டை பாவமும்!

வழி சொல்

நெருங்குதலும் விலகுதலும்
எளிது உனக்கு
வழி ஒன்று சொல்லிப் போ
தடயங்களை அழிக்க!

களை இழந்த மாடம்

சபிதா இப்ராகிம் கவிதைகள்

பூப் போட்ட பாவாடை
பொருத்தமற்ற தாவணி...

நாலணா பொட்டு
சந்தையில் வாங்கிய
வளையல், தோடு...

படிய வாரிய தலை
வாடிப்போன மல்லிகை
எனினும் தேவதைதான்
ரேவதி அக்கா...

பணக்காரனுக்கு வாழ்க்கைப்பட்டு
களையிழந்துபோனாள்
பட்டுப் புடவையிலும்
பகட்டுச் சிரிப்பிலும்!

குரூர நிம்மதி

மரணித்த மழலைகளின்
பெயர்ப் பட்டியலில்
தன் பிள்ளை இல்லையெனும் நிம்மதி,
நொடிப் பொழுதாயினும்
எத்தனை குரூரமானது?

வெறுமையின் மொழியில்...

பகிர்தலுக்கு எதுவுமற்றுப் போனாலும்
ஒரு வெற்றுக்
குறுஞ்செய்தி அனுப்பு.

என் அலைபேசி
ஒலி எழுப்பட்டும்
எங்கோ உன்
இருப்பை அறிவித்து!

நிறுத்தம்

அலைபேசி அழைப்பில்
'எங்கே இருக்கிறாய்?'
எனக் கேட்கிறாய்
நீ விரல் பிடித்து
அழைத்துச் சென்று
நிறுத்திய இடத்தில்தான்
இருக்கிறேன் இன்னமும்...

சொல்...
நான் எங்கே இருக்கிறேன்?

கனவுப் பயணம்

ஆறு வயது மகளின்
கனவுக்குள் பிரவேசிக்க
நேரிட்டது ஒரு நாள்

பட்டாம்பூச்சி மீது பயணம்
சித்திரகுள்ளன் ஸ்நேகம்
சாக்லேட் வீடு
ஐஸ்க்ரீம் சாலை

கனவிலிருந்து வெளியேற
வழி தேடினேன்
இல்லாமல் இருந்தால்
நல்லது!

சபிதா இப்ராகிம் கவிதைகள்

எப்படி மறந்தாய்?

ஒரு வார்த்தையோ சிறு அசைவோ
போதுமானதாக இருக்கிறது
என் மீதான உனது வன்முறைக்கு...

எப்போதும் கூரிய ஆயுதங்களுடன்
எனைத் தாக்கக் காத்திருக்கிறாய்
காரணங்களுக்காக...

எப்படி மறந்தாய்
என்னிடமும் உண்டு
காரணங்களும் சில ஆயுதங்களும் என!

சபிதா இப்ராகிம் கவிதைகள்
சபிதா இப்ராகிம் கவிதைகள்