அது ரீல்! நகம், கொம்பு, அலகு எல்லாம் 'கெரடின்' (Keratin) என்கிற பொருளால் உருவானது. நகத்துக்கு வேர்க்குமா?! கழுகுகளுக்குக் கண் பார்வை வெகு கூர்மையானது. மனிதக் கண்களைவிட மூன்று மடங்கு துல்லியமானது. (மூக்குக் கண்ணாடி அணிந்த ஒரு கழுகைக்கூட நீங்கள் பார்த்து இருக்க முடியாது.) தரையில் ஓடும் சுண்டெலி க்ளியராக 1,000 அடி உயரத்தில் பறக்கும் கழுகுக்குத் தெரியும். நேரடியாக ஒரே ஒரு 'டைவ்,' சுண்டெலி காலி!
சி.என்.ஸ்ரீனிவாசன், சென்னை-40.
'Naked Truth'- என்றால் என்ன?
'மேல் பூச்சு எல்லாம் அகற்றப்பட்ட, தூய்மையான, Naked ஆன உண்மை' என்று இதற்கு அர்த்தம் சொல்லப்பட்டாலும், இது குறித்து ஒரு புராணக் கதை உண்டு! - ஒரு சமயம் உண்மையும் பொய்யும் ஏரியில் குளிக்கப் போனபோது, பொய் முதலில் கரையேறி, அழகாக இருந்த 'உண்மை'யின் உடைகளைத் திருடி அணிந்துகொண்டு ஓடிவிட்டது. அந்த நிலையிலும், உண்மை கரையில் இருந்த பொய்யின் உடையை எடுத்து அணிந்துகொள்ள விருப்பப்படாமல் பிறந்த மேனியோடு வீட்டுக்குத் திரும்பியது - Naked Truth!
சி.ஆர்.நாகராஜன், பொள்ளாச்சி.
'துப்புக் கெட்டவன்' என்று திட்டுகிறோமே, அப்படி என்றால் என்ன?
தமிழில் ஏராளமான அர்த்தங்கள்கொண்ட ஒரு வார்த்தை - துப்பு! மிகச் சில அர்த்தங்கள் இதோ: வலி, அறிவு, உற்சாகம், துணை, உணவு, தாய்மை, பகை, ஆராய்ச்சி (துப்புறிவது!), துரு, அரக்கு, உமிழ்நீர்! 'துப்புக் கெட்டவன்' என்று சொல்லும்போது 'அறிவு' என்கிற அர்த்தத்தை எடுத்துக்கொள்கிறோம். அதாவது - அறிவு கெட்டவன்!
கே.எஸ்.கிருஷ்ணவேணி, சென்னை-75.
எல்லா சினிமாக்களும் கிராமத்தைச் சுற்றிய கதையாகவே எடுக்கப்படுகின்றனவே, ஏன்? நகர வாழ்க்கையில் கதைக்கரு கிடைக்க மாட்டேன் என்கிறதா?
|