Published:Updated:

உயிர் மொழி - 18

உயிர் மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

உயிர் மொழி - 18


உயிர் மொழி
உயிர் மொழி - 18
உயிர் மொழி - 18
உயிர் மொழி - 18
டாக்டர் ஷாலினி
உயிர் மொழி - 18

'ஆண் மரபணுக்கள் பல தடவை தம்மை மாற்றி, தம்மைச் சுமந்த உடம்பை மாற்றி,

அதன் செயல்பாட்டையும் மாற்றி, அப்போதும் பெண் திருப்தி அடைய வில்லையா?' என்று உங்களுக்கு ஆச்சர்யமாகக் கூட இருக்கலாம். ஆனால், இயற்கையின் லாஜிக் வேறு கணக்குகளைப் போட்டு வைத்திருந்தது!

தன் இணையை செக்ஸில் திருப்திப்படுத்தத் தெரிந்த ஒருவன், மனதளவில் நார்மல் மனிதனாக இல்லாவிட்டால்? அதாவது, மனிதநேய குணங்கள் இல்லாத, இயல்பான மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஒருவனின் வாரிசினை சுமக்க நேர்ந்தால் என்ன ஆகும்? அப்படிப்பட்ட அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக் கூடாதென்றால், பெண்கள் உஷாராக ஆண்களைப் பதம் பார்த்துத் தரம் பிரிக்க வேண்டும்அல்லவா? வெறும் நீளம், நிமிர்வு, விந்தணு எண்ணிக்கையைவைத்து ஏதோ ஒரு வக்கிரக்காரனுக்கு பிள்ளைகளைப் பெற்றுக்கொடுத்து, சமூக அமைதிக்கு ஏன் கேடு விளைவிக்க வேண்டும்? 'மோசமான ஆண் என்று தெரிந்த பிறகும், அவனுக்குப் பிள்ளைகள் பெற்றுத்தருவதுதான் ஒரு பெண் செய்யக்கூடியதிலேயே மிகவும் பாவச் செயல்' என்று, மனு ஸ்மிருதியே சொல்கிறது. அதுசரி, இணைவதற்கு முன் அவன் மனிதனா, மிருகமா அல்லது ராட்சசனா என்பதை ஒரு பெண் எப்படித்தான் கண்டுபிடிப்பாளாம்?

உயிர் மொழி - 18

வெரி சிம்பிள். நாம் ஏற்கெனவே, இந்தத் தொடரில் அலசி வந்ததுதான்! இந்த உலகிலேயே முகம் பார்த்துக் காமுறும் மிருகங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று பொனோபோ, இன்னொன்று மனித இனம்! பொனோபோக்களை

இப்போதைக்கு விட்டுவிட்டு மனிதர்களை, குறிப்பாக அவர்களின் முகங்களைக் கவனிப்போம். கலவியின்போது, மனிதப் பெண் பெரும்பாலும் மதி மயங்கி, கண்களை மூடிக்கொண்டேதான் இருப்பாள். எத்தனை சினிமாவில் பார்த்திருப்போம்! ஏன், நிஜ வாழ்விலும் நீங்கள் உங்கள் இணையோடு இருக்கும் தருணங்களை நினைத்துப் பாருங்கள். முத்தமிடும்போதுகூட பெண்கள் கண்களை மூடிக்கொண்டுவிடுவார்கள். ஆனால், ஆண்? இரண்டு கண்களையும் அகல விரித்துவைத்து, அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டேதான் இருப்பான்.

பெண் ஏன் கண்களை மூடுகிறாள்? அப்போதுதான் அவளால் ஸ்பரிசத்தை இன்னும் துல்லியமாக உணர்ந்து மகிழ முடியும். இந்த ஆண் ஏன் இப்படி கொட்டக் கொட்ட கண்களைத் திறந்துவைத்திருக்கிறான்? ஆண்கள் அதிகம் பார்க்கும் பல போர்னோகிராஃபிக் (நீல) படங்களை அலசி ஓர் ஆராய்ச்சி நடைபெற்றது. இம்மாதிரி படங்களில் பெண் உடலின் எந்தப் பாகம் மிக அதிக நேரத்துக்கு சித்திரிக்கப்படுகிறது என்று ஆராய்ந்ததில், மற்ற எல்லாக் கிளர்ச்சி பாகங்களையும்விட, பெண்ணின் முகமே மிக அதிகமாகத் திரையில் காட்டப்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது! போயும் போயும் பெண்ணின் முகத்தை இவ்வளவு உன்னிப்பாகப் பார்க்கிறானே இந்த மனித ஆண்! அதுவும் கலவியின்போது துணைவி முகபாவத்தில் சந்தோஷத்தைத் தெரிவிக்கவில்லை என்றால், ஆண்களுக்குக் கண்மண் தெரியாத கோபமும் ஏமாற்றமும் வருவது உண்டு, 'இப்படி ஜடமாட்டம் இருக்கியே!' என்று அலுத்துக்கொள் கிறார்கள்.

உயிர் மொழி - 18

ஏன் தெரியுமா? மனித ஆணின் மூளை மற்ற மிருகங்களின் மூளையைப்போலச் செயல்படுவது இல்லை. பிற மிருகங்கள் பெண்ணின் முகத்தைப் பாராமல் அவள் சுகிக்கிறாளா இல்லையா என்பதை எல்லாம் கண்டுகொள்ளாமல், எந்திரகதியில் புணரும். ஆனால், மனித ஆணின் மூளையில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டு இருந்தது. கலவியின்போது பெண் சுகப்படும் காட்சியைத் தன் கண்களால் கண்டால் ஒழிய, அவனால் தன்னிறைவு பெற முடியாது. இப்படி பெண் கிளர்ச்சி அடையும் காட்சியை உற்றுப் பார்ப்பதே ஆணுக்குப் பெரிய சந்தோஷத்தைத் தருகிறது. காரணம், பெண்ணின் கலவியல் தேர்வு விதி: 'நீ எவ்வளவு பெரிய கொம்பனா வேண்ணா இருந்துக்க. ஆனா, எனக்கு சுகம் தரத் தெரியலேன்னா, நீ சுத்த வேஸ்ட்டுடா' என்பதாகவே இருந்தது. இப்படி, அவள் ரசனைகளை மதித்து, அவளை மகிழ்விக்கத் தெரிந்தவனையே அவள் மீண்டும் மீண்டும் நாடி கூடுவதால், அவளை நாசூக்காகக் கையாளத் தெரிந்த ஆணின் மரபணுக்கள் மட்டுமே பரவுகின்றன. இதுதான் சூட்சுமம் என்று ஆனபின், ஆணின் மரபணுக்கள் சும்மா இருக்குமா?

பெண்ணை லாகவமாகக் கையாளும் விசையை ஆணின் மூளையில் புதிதாக உருவாக்கின. பெண்ணை மகிழ்வித்தால், இந்த மூளை மையம் இன்ப ரசாயனங்களைச் சுரக்க ஆரம்பித்துவிடும். இதனால், ஆணுக்கு ஊக்கமும், கிளர்ச்சியும், தன் ஆண்மையின் மேல் கர்வமும் ஏற்படுகிறது. இவை அவனுக்குப் பெரும் நிறைவைத் தர, ஒலிம்பிக்ஸில் முதலிடம் பிடித்தவனுக்கு ஏற்படும் வெற்றிக் களிப்பை ஒவ்வொரு முறை புணரும்போதும் அவன் பெறுகிறான், பெண் முகத்தில் சுகத்தின் சுவடு தெரிந்தால் மட்டும்!

அதனால்தான் பெரும்பாலான ஆண்கள் கலவிகொண்ட உடனே, பெண்ணிடம், 'உனக்குப் பிடிச்சுதா? டிட் யூ என்ஜாய்ட் இட்?' என்று கேட்கிறார்கள். அவள் என்ஜாய் செய்தால் இவனுக்கு என்ன, செய்யாவிட்டால் இவனுக்கு என்ன? சிம்பிள், அவள்

உயிர் மொழி - 18

என்ஜாய் செய்யாவிட்டால், இவன் மூளைக்குப் போதை கிடைப்பது இல்லை. மாறாக, 'எவ்வளவு மெனக் கெட்டும் மரக்கட்டை மாதிரி கிடக்கிறாளே!' என்கிற இயலாமை, ஆத்திரத்தைத்தான் தூண்டும்.

ஆனால், எல்லா ஆண்களும் இப்படி இருப்பது இல்லையே! சமூகத்தில் பாலியல் குணக்கோளாறு (perversion) கொண்ட ஆண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். பெண்ணைப் பலவந்தமாகக் கற்பழிக்கும் ஆண்களும் இருக்கிறார்களே! ஏன், அவர்கள் அப்படி இருக்கிறார்கள்?

அவர்கள் எல்லாம் பரிணாம வளர்ச்சியில் பின்தங்கிப் போனவர்கள். எந்தப் பெண்ணும் இப்படிப்பட்ட ஆண்களோடு கூட விரும்புவதே இல்லை. பலவந்தமாகப் புணரப்பட்டாலும், மருத்துவ வசதிகள் அதிகம் இல்லாத அந்தக் காலத்திலேயே பெரும்பாலான பெண்கள், இப்படி உருவாகும் கருக்களைக் கலைத்துவிடவே முயன்று இருக்கிறார்கள். காரணம், இப்படிப் பட்ட ஆண்களின் மரபணுக்கள் பரவுவதை இயற்கை அனுமதிப்பது இல்லை!

உயிர் மொழி - 18
உயிர் மொழி - 18
(காத்திருங்கள்...)